லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]

Read more

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 33ரூ. கனவின் பலன்களைக் கூறுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். கனவில் கழுதையைக் கண்டால், கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் நீங்கும். யானையைக் கண்டால் அதிர்ஷ்டம். புலிகள், சிங்கங்கள், கரடிகள் முதலிய கொடிய மிருகங்களைக் கண்டால் பலவான்களுடன் விரோதம் ஏற்படும். சிட்டுக்குருவி, வாத்து ஆகியவற்றைக் கண்டால் நல்லது நடக்கும். இப்படி பல பலன்களை சொல்கிறார் வாரியார் சுவாமிகள். புராணங்களிலும் இலக்கியங்களிலும் கனவு கண்டவர்கள் பற்றியும், அவர்கள் கண்ட கனவுக்கான பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

வ.உ.சி. வாலேஸ்வரன்

வ.உ.சி. வாலேஸ்வரன், செ.திவான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், சென்னை, விலை 100ரூ. “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் மகன் பெயர் வாலேஸ்வரன். அவரைப் பற்றிய புத்தகம் இது. இவருக்கு வாலேஸ்வரன் என்ற பெயர் வந்தது எப்படித் தெரியுமா? சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்ட வ.உ.சிதம்பரனாருக்கு வெள்ளையர் ஆட்சி “இரட்டை ஆயுள் தண்டனை” விதித்தது. அத்துடன் அவர் பெற்ற வக்கீல் பட்டத்தை ரத்து செய்து, கோர்ட்டில் வழக்காட முடியாதபடி தடை விதித்தது. விடுதலையடைந்தபின், வ.உ.சி. வறுமையில் வாடினார். கோர்ட்டிற்கு சென்று வக்கீலாக வாதாடவும் முடியவில்லை. […]

Read more

தாய்மை

தாய்மை, லக்ஷ்மி, சந்தியா, விலை 140ரூ. ‘லக்ஷ்மி’ என்ற புனை பெயரில் பல அற்புத நாவல்களைப் படைத்த திரிபுரசுந்தரி, ஒரு டாக்டர் ஆவார். தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்தார். அவர் எழுதிய “தாய்மை:பூப்படையும் நாள் முதல் பிள்ளைப் பேறு வரை” என்ற மருத்துவ நூல் இப்போது வெளிவந்துள்ளது. இளம் பருவத்தில் இருந்து வயோதிகம் வரை, ஒரு பெண்ணுக்கு தன் உடல் பற்றிய அறிவியல் உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை இந்த நூலில் விரிவாகக் கூறியுள்ளார், டாக்டர் திரிபுரசுந்தரி. பெண்கள் கையில் […]

Read more

சேதிராய நாடார்கள்

சேதிராய நாடார்கள், வெ. செந்திவேலு, அ. இன்பக்கூத்தன், காவ்யா, பக். 229, விலை 220ரூ. தமிழகத்தின் நாடார் சமூகத்தினரை சாணார் என்று குறிப்பிடுவர். அது தவறு என்றும் சான்றான் எனும் தமிழ்ச் சொல்லே பேச்சுவழக்கில் சாணான் என்று வழங்குகிறது என்றும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. கி.பி. 1750இல் பொறிக்கப்பட்ட குலசேகரப்பட்டினம் விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டில் நாடார்களின் ஒரு பிரிவான சேதிராய நடார்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. களக்காடு அருகே உள்ள சேதுராயபுரம் என்ற கிராமத்தில் தற்போது சேதுராய நாடார்கள் வாழ்ந்து வருகிறார்கள். குலசேகரப்பட்டினம் கல்வெட்டில் சேதிராய […]

Read more

தமிழி

தமிழி, வி.ஆனந்தகுமார், வி. ஆனந்தகுமார் வெளியீடு, விலை 250ரூ. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஆதிமனிதனான ஆதிபகவன், பிறப்பித்த முதல் சொல் எது என்பதிலிருந்து ஆரம்பித்து குகைகளில் அவன் வைத்த அடையாளக் கோடுகள் பிற்காலத்தில் அவை எழுத்துக்களாக மாறின. இது தொடர்பாக அரிய தகவல்கள் அடங்கிய ஆராய்ச்சி நூலாகும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி?, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டி இந்நூல். அரசு […]

Read more

தமிழியல் ஆய்வு வரலாறு

தமிழியல் ஆய்வு வரலாறு, முனைவர் அ. பிச்சை, கபிலன் பதிப்பகம், பக். 208,விலை 210ரூ. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக பேராசிரியர் குழுதான் தேவை! இலக்கிய ஆராய்ச்சி என்பது எவ்வளவுதான் அறிவியல் ரீதியாக செய்ய புகுந்தாலும், மக்கட்சமுதாயத்தினுடைய மரபுகளையும், குறிக்கோளையும், கற்பனைகளையும் உண்மை நிலையையும் அடியோடு மறுத்து எழுதுதல் இயலாது. எல்லோர்க்கும் ஒப்ப முடியும் கருத்தாக ஆராய்ச்சியின் முடிவு இருக்க வேண்டுவது இல்லை. அது சமுதாயத்தின் அறிவாக்கத்தில் சிறிதாகிலும் தூண்டுகையை உண்டாக்கும் வண்ணம் திகழும்போதே நிறைந்த ஆராய்ச்சி என, மதிக்கப்பெறுகிறது. இன்று மொழி, இலக்கணம், இலக்கியம் […]

Read more

சிந்திப்போமா?

சிந்திப்போமா?, க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, பக். 128, விலை 90ரூ. இந்தியாவுக்கு பின் விடுதலையடைந்த நாடுகளின் வளர்ச்சியை பட்டியலிட்டு, நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லையே என, தான் ஆதங்கத்தை, கல்வி, இலக்கியம், அரசியல், சமுதாயம் எனும் தலைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். தாய்மொழியாகிய சீன மொழியிலேயே பள்ளிக்கல்வி துவங்கி, பல்கலைக்கழக ஆராய்ச்சி கல்வி வரை நடத்தும் சீனா, உலக தரப்பட்டியலில் முன்னிடம் பெற்றிருக்கிறது. தாய்மொழியில் படித்தால், தரம் தாழ்ந்து விடும் என கூறும், தமிழக பல்கலைக்கழகங்கள், கண்டுபிடிப்பு சாதனை எதனையும் […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் உரை

தாயுமான சுவாமிகள் பாடல் உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், விலை 450ரூ. இந்திய தத்துவ ஞான மரபில் தாயுமான சுவாமிகளுக்கென்று தனியிடம் உண்டு. தாயுமானவர் ஒரு ஞானக்கடல். அதில் தத்துவ முத்துக்களும், தரங்குறையா பவழங்களும் நிரம்ப உண்டு. அத்தகைய தாயுமான சுவாமிகளின் பாடல்களை அரிய பழைய உரையுடன் க. இலம்போதரன் தொகுத்துள்ளார். “கல் எறியப் பாசி கலைந்து நன்னீர் காணும், நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே” என்று எளிய உவமையைக் கூறி தாயுமானவர் நம்மைத் தெளிவுபடுத்துகிறார். மலரின் […]

Read more

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும்

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும், சுஹைனா பதிப்பகம், விலை 100ரூ. இது சிறந்த ஆராய்ச்சி நூல். வடலூரில் வாழ்ந்த சமுதாய சீர்திருத்தவாதியான ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள், “திருவருட்பா” என்று அழைக்கப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் “அப்பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பா” என்று வாதிட்டார். வள்ளலாரும், ஆறுமுக நாவலரும் மறைந்த பின்னர், ‘அருட்பா, மருட்பாவா?’ என்ற சர்ச்சை மீண்டும் மூண்டது. அப்போது ‘வள்ளலார் பாடியவை அருட்பாதான்’ என்று வாதாடியவர் செய்குத்தம்பி பாவலர். வள்ளலார் பற்றியும், பாவலர் பற்றியும் முழு விவரங்களும் இதில் […]

Read more
1 37 38 39 40 41 84