காமராஜ் புதிரா? புதையலா?

காமராஜ் புதிரா? புதையலா?, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், பக். 193, விலை 70ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்வு, அவரின் சாதனை, வாழ்க்கை நிகழ்வுகள், அறிவுரைகள் ஆகியவற்றை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி, புரிந்தவர்களுக்கு அவர் புதிராகவும், புரிந்தவர்களுக்கு அவர் புதையலாகவும் இருப்பதை நல்ல விளக்கங்களுடன் தந்திருப்பது சிறப்பு. மற்ற தலைவர்கள்போல் அவர் தலைவர் மட்டுமல்ல, நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ இறைவன் அனுப்பி வைத்த தவப்புதல்வன் என்கிறார் நூலாசிரியர். அதாவது காமராஜரை கல்வி, அணைக்கட்டுகள், மின்சாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை இத்தமிழ்மக்களுக்கு வழங்க […]

Read more

தமிழர்தம் மறுபக்கம்

தமிழர்தம் மறுபக்கம், தமிழ்க்கோட்டம் வெளியீடு, விலை 175ரூ. தமிழர்களின் வரலாற்றைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞர் க.ப. அறவாணன், இந்நூலில் இன்றைய தமிழர்கள் பற்றி பாரபட்சமற்ற விமர்சனத்தை முன்வைக்கிறது. அவர் கூறுகிறார்: வேட்பாளர் தேர்வில் சாதிக்கு முன்னிரிமை கொடுக்கப்படுகிறது. நாம் பெற்ற கல்வியால்கூட, நம்முடைய சாதிப்பற்றை தகர்க்க முடியவில்லை. சாதிய அடித்தளமே இல்லாத மண்ணில் தோன்றிய இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மதங்கள்கூட, இந்தியாவில் மதம் மாற்றம் பெற்ற கிருத்துவர்களிடையே சாதி அற்ற நிலையை தோற்றுவிப்பதில் தோற்றுப்போய் […]

Read more

ஆரியர் திராவிடர் சங்கமம்

ஆரியர் திராவிடர் சங்கமம், ஜி. கிருஷ்ணசாமி, புதுயுகம் பதிப்பகம், மதுரை, விலை 275ரூ. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த உருவாக்கியது ஆரிய – திராவிட இனக்கொள்கை. அது அரசியல் தந்திரம். உண்மையில்லை என்று பிரிட்டிஷ் வானொலி நிறுவனம் (பி.பி.சி.) ஆவணப்படத்தி உள்ளது. ஆனால் அந்த பிரிவினை கொள்கையை இன்றும் தமிழகத்தில் பல அறிஞர்களும், அரசியல்வாதிகளும் பேசி வருகின்றனர். அது இன்றுள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இடையூறாகவே உள்ளது. அந்த நிலை மாறி, உண்மையை உணர்ந்து, இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், அரும்பு பதிப்பகம் மற்றும் நிறைவகம், சென்னை. கற்றல் குறைபாடு பிரச்னைக்கு தீர்வு இந்த நூல் சராசரி மாணவர்களில், ஐந்தில் ஒருவருக்குக் காணப்படும் கற்றல் குறைபாட்டைப் பற்றிய முழுமையான முதல் தமிழ் நூல். அறிவியல் பூர்வமான உண்மைகளை உளவியல் ரீதியாக, எளிய பேச்சத் தமிழில், சாமானிய மக்களையும் எளிதில் சென்றடையும்படி கதை சொல்வதுபோல் விளக்கி உள்ளது. அறிவுத்திறனிலும், விளையாட்டு போன்ற பல்கலைத் திறனிலும் சராசரியாகவோ அல்லது அதற்கும் மேம்பட்டு காணப்படும் பல பிள்ளைகள், கல்வியில் மட்டும் பின்தங்கிடும்போது, […]

Read more

கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தமிழை மறக்காத தமிழர் அரிசோனா மகாதேவன். கம்பனில் தோய்ந்தவர். அதேநேரம், வடமொழியிலேயே வால்மீகியையும் வாசித்தறிந்தவர். எனவே, வால்மீகியிலிருந்து எங்கெல்லாம் கம்பன் வித்தியாசப்படுகிறான், மூலக்கதையின் சம்பவங்களை தமிழ்ப்பண்பாடு கெடாமல் எப்படியெல்லாம் மாற்றி உருவகப்படுத்துகிறான் என்ற அருமையான ஒப்பீட்டு நோக்கில், தாம் ஆய்ந்து தெளிந்த விஷயங்களை, நான்கு கட்டுரைகளில் வடித்தெடுத்து வழங்கியுள்ளார். அகலிகை சாபவிமோசனம், ராமன் – சீதை முதல் சந்திப்பு, வனவாச காலத்தில் நிகழ்ந்த மாயமான் காணல், […]

Read more

கோ.கேசவனின் திறனாய்வாளுமை

கோ.கேசவனின் திறனாய்வாளுமை, முனைவர் ஜெ. கங்காதரன், வையவி பதிப்பகம், பக். 264, விலை 150ரூ. முப்பத்து மூன்று நூல்கள் படைத்து, தமிழ் திறனாய்வு உலகில் புகழ்க்கொடி நாட்டியவர் கோ. கேசவன். பேராசிரியராகவும், ஆய்வாளராகவும், திறனாய்வாளராகவும், தொழிற்சங்க வாதியாகவும் செயற்பட்ட அவரது திறனாய்வு முறைமைகளைத் திறம்பட ஆய்வு செய்கிறது இந்த நூல். தமிழ்த் திறனாய்வு வரலாற்றையும், அந்த வரலாற்றில் கோ.கேசவன் பெறும் இடத்தையும் சுட்டிக்காட்டி, மார்க்சிய இயங்குதளத்தில் அவரது திறனாய்வுக் கோணங்கள் அமைந்ததை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். முனைவர் பட்ட ஆய்வு நூல் என்பதால், மேற்கோள்களின் […]

Read more

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம், இரா. நரேந்திர குமார், காவ்யா, விலை 250ரூ. ஆண்டாள் கவிதைக்கு ஓர் ஆய்வடங்கல் எமிலி டிக்கின்ஸனின் கவிதை வரிகள் இவை. தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா பிறகு அடைத்துவிடுகிறது கதவை. இந்த வரிகளைப் பற்றிக்கொண்டு ஆண்டாளின் அக உலகத்திற்குள் ஒரு வாசகர் பயணிக்க முடியும். கண்ணன் என்னும் கருந்தெய்வத்துடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, மற்ற உறவுகளைத் துண்டித்துவிட்ட ஆண்டாளை ஒரு முழுமையான கவிதைப் பரப்பில் வைத்துப் பார்க்கிறது, இரா. நரேந்திரகுமாரின் ஆண்டாள் கடவுளைத் தேடிய […]

Read more

அகப்பொருள் விளக்கம்

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன், பாரி நிலையம், பக். 360, விலை 200ரூ. தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியமே இன்றைக்கு முதன்மையான இலக்கண நூலாகவும் காலத்ததால் மிகவும் தொன்மையான நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். பிற மொழி இலக்கண நூல்களில் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியத்தில் உள்ள பொருளிலக்கணம். இது தமிழுக்கே – தமிழருக்கே உரித்தான அக வாழ்க்கை பற்றி தமிழரின் காதல் வாழ்வின் மேன்மைகளைப் பற்றி விரித்துரைக்கிறது. தொல்காப்பியத்தின் இலக்கணக் கூறுகள் ஒவ்வொன்றையும் […]

Read more

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும், நிஜவாழ்வின் பொருளியலுக்குள் ஒரு பயணம், சி.டி. குரியன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 272, விலை 170ரூ. பொருளாதாரம் என்பது பொருட்கள், பணம் பற்றியதல்ல. அடிப்படையில் மனிதர்கள், அவர்களது சமூக உறவுகள் பற்றியது. யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்? யார் எதைப் பெறுகிறார்? என்ற மூன்று முக்கியமான கேள்விகள்தான் எந்தவொரு பொருளாதாரத்தையும் ஆய்வு செய்ய உதவும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். இந்த அடிப்படையில் பொருளியலின் பல்வேறு தன்மைகளை விரிவாக விளக்குகிறது. […]

Read more

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார், கி.வீரமணி, திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 180ரூ. தந்தை பெரியாருக்கு ஐ.நா.வின் கிளை அமைப்பான யுனெஸ்கோ உலகில் எந்தத் தலைவருக்கும் அளிக்காத பெரியார் புது உலகின் தொல்லை நோக்காளர். தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்ற ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையாகக் கொண்ட ஒரு விருதினை வழங்கி சிறப்பித்தது. இந்த விருது பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒரு […]

Read more
1 39 40 41 42 43 84