யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால்

யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால், நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டில் ஃபவுண்டேசன் வெளியீடு, மதுரை, நன்கொடை 50ரூ. இந்தியா ஏன் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்? ஆன்மிக நோக்கில் ஒரு புரட்சிகரமான பார்வையை, விரிந்தளாவிய மனப் பக்குவத்தை இந்தியாவுக்கு வழங்கிய விவேகானந்தரின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் திகழ்கிறார். இந்தியா ஏன் ஒரு மதச்சார்பின்மை நாடாக இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்த இருவருமே இந்திய ஆன்மிக மரபைத் துணைகொண்டு விளக்கம் தருகிறார்கள். இந்திய வரலாற்றை மதமோதல்களின் வரலாறாக மாற்றுவதற்குப் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 500ரூ. தமிழ் இலக்கியத்தில், திருவள்ளுவரின் திருக்குறளுக்கு அடுத்தபடியாக சிறப்புக்கு உரியவை அவ்வையாரின் நீதி நூல்கள். ஆயினும், அவ்வையார் என்ற பெயருடன் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் பற்றியும், அவர்களுடைய படைப்புகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவ்வையார் பற்றி விரிவான ஆய்வுகள் செய்து, 683 பக்கங்கள் கொண்ட இந்த பெருநூலை எழுதியுள்ளார், முனைவர் தாயம்மாள் அறவாணன். எட்டு அவ்வையார்கள் இருந்ததாக, இவர் தமது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார். சங்க கால அவ்வையாரின் வாழ்க்கை […]

Read more

முகமற்றவர்களின் அரசியல்

முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், உயிர்மை பதிப்பகம், விலை 110ரூ. ஆதிக்க வர்க்கம் அதிகாரப் பசி கொண்டு அலைகிறது. அதிகாரத்திற்கு மாற்று வழியாக, மதவெறியை அது பயன்படுத்தப் பார்க்கிறது. மனித மூளைகளில் மத விஷம் ஏற்றுகிறது. தேசத்தை மரண வாயில் நோக்கி அது அழைத்துச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் தேவைகள் இங்கே பூமிக்குக் கீழே புதைக்கப்படுகிறது. புதிய சமூகம் படைப்போம் என பிணந்தின்னும் பிசாசுகளே, இங்கே கூக்குரலிடுகின்றன. அரசியல் கட்சிகள் அடித்தட்டு மக்களின் ரத்தம் குடித்து மகிழ்கின்றன. இஸ்லாமியர்களும் சாமான்ய மக்களும் இங்கே […]

Read more

சிந்தனை ஒன்றுடையாள்

சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு. மனிதனின் அடையாளம் எது? ஆசிய வளர்ச்சி வங்கியில் இயக்குனநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற, கே.எஸ். சுப்ரமணியன் எழுதி, அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள, சிந்தனை ஒன்றுடையாள் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மனிதனுக்கு, பெற்றோர், ஜாதி, மதம், நாடு, மொழி என பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இவற்றில், மொழி மட்டுமே இறுதியில் நிற்கிறது. ஆனால் மொழியும் அடையாளம் அல்ல. சிந்தனைதான் ஒருவரின் அடையாளம் என்கிறது இந்த நூல். அந்த […]

Read more

துடியான சாமிகள்

துடியான சாமிகள், நா. இராமச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 292, விலை 240ரூ. நெல்லில் பதரைக் கலந்தோமோ? முக்கடல் சங்கமம் ஆகும் குமரி மாவட்டத்து கிராமக் கோவில்களில் நடக்கும் வில்லுப்பாட்டை, மிக விரிவாகக் கள ஆய்வு செய்கிறது இந்த நூல். வன்கொலை செய்யப்பட்டு தெய்வம் ஆக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் ஆறு கதைகள், ஆய்வு செய்யப்பட்டு, அதன் வழி வரலாறு, பண்பாடு, சமூகச் சூழல் ஆராயப்பட்டுள்ளன. கலப்பு மணமும், அதனால் எழும் சிக்கல்களும் முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, சின்ன நாடான் கதையில் […]

Read more

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள், ச. சுப்பராவ், பாரதி புத்தகாலயம், பக். 95, விலை 70ரூ. ஆங்கில நாவல்கள் குறித்து, புத்தகம் பேசுது இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. திரில்லர் நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய கோமா. அடுத்து, மருத்துவத் துறையின் மோசடி குறித்து எழுதிய, டெத் பெனிபிட் நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞானக் கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் […]

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தா, சுரா பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. 128 பக்கங்கள் மட்டுமே கொண்ட சித்தார்த்தா என்ற ஜெர்மானிய நாவல், 1946ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ், இந்தியாவில் கேரள மாநில சர்ச் ஒன்றில் பணியாற்றிய பாதிரியாரின் பேரன். இது புத்தரின் போதனைகளையும், இந்திய கலாசாரத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட நாவல். இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தன் பிராமண குடும்பத்தில் பிறந்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டாலும், அவன் மனம் […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 120ரூ. ஒரு நாட்டுக் கலாசார பண்பாட்டு வரலாற்றை கணிப்பதற்குத் தொல்லியல் ஆய்வுகள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. இதுகுறித்து குறிப்பாக தமிழகத்தில் பூம்புகார், காஞ்சி முதலான தொன்மைச் சிறப்புமிக்க நகரங்களில் கல்வெட்டு, நாணயம் பற்றியவை குறித்து செய்த அகழ்வராய்ச்சிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பூம்புகாரில் செய்த அகழ்வாய்வுகள், அந்நகரம் முழுமையும் அழிந்துவிட்டது என்ற எண்ணத்தைப்போக்கி, பல பகுதிகள் புதையுண்டுக் கிடக்கின்றன என்னும் உண்மையைக் காட்டுகின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகள், தொண்டை மண்டலத்தில் […]

Read more

நாட்டார் சிந்து கதைப் பாடல்கள்

நாட்டார் சிந்து கதைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் பா. சுபாஷ், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 160ரூ. கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் நடந்த கொலைகள் பற்றிய, 14 பாடல்களைப் பதிவு செய்து, ஆய்வு நூலாக வழங்கிய நூலாசியர் முயற்சி பாராட்டிற்கு உரியது. கிராமியப் பழங்கலையை மீட்டுருவாக்கம் செய்கிறார் நூலாசிரியர். ஏறக்குறைய முற்றிலும் ஆதரவின்றி அழிந்து வருகிறது. இந்த தெருப்பாடல் கலை கொலைச்சிந்து. அம்மானை, கும்மி, வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாட்டு போன்றவை குழுக்களாகப் பாடப்படுபவை. இந்த கொலைச்சிந்து, டேப் அடித்து தனியே நின்று பாடுவது. […]

Read more

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், விலை 360ரூ. திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியவை இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more
1 41 42 43 44 45 84