பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும்

பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும், திருவின் நாயகன் தொகுப்பு, உமா பதிப்பகம், பக். 264, விலை 120ரூ. ராவணனின் பெருமைகளையும், அவனது முறையற்ற செயல்களையும் சைவ, வைணவ நூல்களின் துணையுடன் தொகுப்பாசிரியர் மிக அருமையாக, பதிவு செய்துள்ளார். ராவணன் என்ற சொல்லிற்கு அழுதவன், பிறரை அழவைத்தவன் என்று பொருள் (பக். 9). ராவணன் தவவலிமையால் பெற்ற வரம் (பக். 20), தசமுகன் எனும் பெயரை, ராவணன் எனும் இறவாப் பெயராக சிவபெருமான் ஈந்தது (பக். 38), ராமன் கடல் கடந்து செல்லும் முன்பாக, பிரயோபவேசம் […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு […]

Read more

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, முனைவர் ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் வழக்கு , மொழிச்சுழல், கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் ஆராய்ச்சி செய்த தகவல்கள் அடங்கிய நூல். வட்டார வழக்கியல் ஆய்வுக்கு மட்டும் அல்லது மொழி ஆய்வுக்கும் மொழியியல் ஆய்வுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —- பிரியாணி சமையல், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. 100 வகை வெஜிடெபிள் பிரியாணி வகைகள், […]

Read more

சித்தர் களஞ்சியம்

சித்தர் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. சித்தர்களின் கோட்பாடுகள் மக்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமநிலையையும், சீரான வளர்ச்சியையும் தர வல்லன. அத்தகைய சித்தர்களின் குறிக்கோள்களையும், சிந்தனைகளையும், அற்புதங்களையும் இந்த நூலில் முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ் விரிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் சித்தர்கள் குறித்த பிற நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. சித்தர்கள் பற்றிய ஆய்வு பூர்வமான, அறிவியல் பூர்வமான பல செய்திகள் மிக நுணுக்கமாக கூறி இருக்கிறார். சித்த ஆர்வலர்களுக்கும், நெறியாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், முனைவர் வெ. மு. ஷாஜகான் கனி, மதுரை, விலை 110ரூ. சினிமா ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. காரணம், ஆஸ்கார் பரிசு பற்றிய விவரங்கள் அனைத்தும் இதில் உள்ளன. ஆஸ்கார் பரிசு பெற்ற படங்கள் பற்றிய விவரங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் ஆஸ்கார் பரிசு பெற வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை. வாய்ப்பு உண்டு என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற தலைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆஸ்கார் பரிசு […]

Read more

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம்

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பாரதியாரைப் பற்றிப் படிக்கப் படிக்க புதுப்புது கருத்துகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த நூலிலும் அதனை உணர முடிகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் நூலாசிரியரால் கருத்தரங்குகளில் பேசப்பட்டவை, கட்டுரைகளாக வெளிவந்தவை. இந்த நூலில் 10 கட்டுரைகள் இருப்பினும் நான்கு கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை. 1. பாரதியாரும் இந்தியத் தத்துவமும், 2. முதல் பாரதி திறனாய்வாளர் சுவாமி விபுலானந்தர், 3. பாரதி புகழ் […]

Read more

உரையியல்

உரையியல், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 254, விலை 160ரூ. பெண்களை ‘பா’ போட்டு அழைக்கலாமா? தமிழ் இலக்கண, இலக்கிய உலகில், உரையாசிரியர்களின் உன்னத இடத்தை, இந்த ஆய்வு நூல் விரிவாக உரைக்கிறது. அகராதியின் சொற்பொருள், உரையாசிரியர்களின் விளக்கங்கள், மூலநூலை எளிதாக்கிவிடுகின்றன. தொல்காப்பியத்திற்கு, சேனாவரையரின் உரை, மறுப்புத்திறன் மிக்க உரையும், தெய்வச் சிலையாரின் மிக எளிய உரையும், திருக்குறளுக்கு மணக்குடவர் விளக்க உரையும், நற்றிணைக்கு பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பதிப்பும், உரைநெறிகளும், அவ்வை துரைசாமிப்பிள்ளை பதிப்பும், பாட பேதங்களும், நாவலர் ந.மு. […]

Read more

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள்

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள், பத்மகவி குற்றாலதாசன், ஸ்ரீ கிருஷ்ணமணி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், பக். 140, விலை 75ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், ஆங்காங்கு சுட்டப்பட்டுள்ள கல்வியியல் சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து,இக்கால கல்வி செயல்பாடுகளோடு பொருத்திக்காட்டி, இந்த நூலை ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். காலத்திற்கு ஏற்ற முயற்சி, பாராட்டத்தக்கது. தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, மனமொழி மெய்களால் ஒழுக்கம் உடைய சான்றோரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் அமைதல் வேண்டும். அந்த நோக்கத்தையே, பதினெண் கீழ்க்கணக்கு […]

Read more

பாரதியின் இறுதிக்காலம்

பாரதியின் இறுதிக்காலம், ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. பாரதி இறப்பின் பின்னணி மகாகவி பாரதியின் இறுதிநாள் பற்றிய விவாதம் இன்னும் நிலவி வருகிறது. இதை ஆராய்ந்து முடிவு சொல்வது இந்த நூல். 42 பக்கங்களில் இதுபற்றி ஆராய்கிறார், நூலாசிரியர். தேடல் அனுபவம் மிக்க ஆசிரியர் அதோடு நில்லாமல், பாரதி எழுதிய காணக்கிடைக்காத, கோவில் யானை என்ற நாடகத்தையும் இந்த நூலில் இணைத்துள்ளார். இந்த நாடகம் 17 பக்கங்களைக் கொண்டுள்ளது. பாரதியின் இறுதிக்காலம் சிக்கல் நிறைந்தது. அவரைப் பற்றி அவருடைய […]

Read more

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும், என்.டி. ராமகுமார், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கத்திருமேனி நர்மதை நதியிலிருந்து எடுத்துவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். வடநாட்டில் பல சிவாலயங்களில் இடம்பெற்றுள்ள லிங்கத் திருமேனிகள் இநத் நர்மதையிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கங்கள்தான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியரான என்.டி. ராமகுமார். நர்மதை நதியில் கிடைக்கும் எல்லாக் கூழாங்கற்களுமே சிவ லிங்கங்களாகக் கருதப்படுகின்றன. ஒங்காரரேஷ்வர் தலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தாடிகுண்ட் என்னுமிடத்திலுள்ள ஆழமான பாறைக்கிணறுகளில் உயரத்திலிருந்து விழும் நர்மதை நதி நீர் வெள்ளத்தில் […]

Read more
1 43 44 45 46 47 84