ஈழம் 87

ஈழம் 87, வரலாற்று ஓவியப் பதிவு, தாய்ப்பனை வெளியீடு, விலை 500ரூ. ஓவிய வடிவில் ஈழப்பிரச்னை ஈழப் பிரச்னையை விளக்கும் பல நூல்களுக்கு மத்தியில் அப்பிரச்னையின் ஒரு முக்கிய காலகட்டத்தைர ஓவியங்களின் மூலமாகச் சொல்கிறது இந்த நூல். அங்கங்கே வர்ணனையாக குறிப்புகளை உணர்வுடன் எழுதி இருப்பவர் புகழேந்தி தங்கராஜ். 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபாகரன் – ராஜீவ்காந்தி சந்திப்பு முதல் அதன் பின்னர் நிகழ்ந்த இந்திய அமைதிப்படை – புலிகள் மோதல் போக்கு என 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று, ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. நூலாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் தம் மனத்திற்கு நியாயம் என்று எது படுகிறதோ? அதன்படியே வாழ்ந்து, தன் வரலாற்று நூலை தமிழர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் படைத்து உள்ளார். இதில் சமகாலத் தமிழறிஞர்கள், கவிஞர்கள் என எண்ணற்றோர் பெயர்களை சுட்டிக்காட்டியிருப்பதுடன், அபூர்வ தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பட்டிமன்றங்களின் இன்றைய நிலை பற்றி நூலாசிரியர் கூறிய கருத்துகள் சிந்திக்க தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027097.html இந்தப் புத்தகத்தை […]

Read more

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கதை

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கதை, ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 55ரூ. சாதாரண குடும்பத்தில் பிறந்து குறைந்த அளவே கல்வி அறிவு பெற்றிருந்தாலும், கப்பல்களிலேயே தனது வாழ்நாளை கழித்து அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அவரது வாழ்க்கை பயணத்தை முழுமையாக எடுத்துரைக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200 ரூ. முஸ்லிம் சமூகத்தில் பிறந்து குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக விளங்கிய 30 பேரின் வாழ்வை பற்றி விரிவான தொகுப்பு நூல் இது. அரசியல், கல்வி, சமூக சேவை எனப் பல தளங்களிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை செய்தவர்களின் அறிமுகமாக மட்டும் சுருங்கி விடாமல் அவர்களின் வாழ்வில் நடைபெற்றத சுவையான நிகழ்வுகளையும், அன்றைய கால தமிழக அரசியல் சூழலையும் இணைத்தெழுதியிருப்பது நூலுக்கு கூடுதல் அர்த்தத்தை தருகிறது. நன்றி: தி இந்து. 7/7/2018.   இந்தப் […]

Read more

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு, டாக்டர் சு.திருத்தணிகாசலம், ரத்னா பப்ளிகேஷன், விலை 599ரூ. சிந்துவெளி நாகரிகம் ஆரியர்கள் உருவாக்கியதா? சிந்துவில் தமிழர்களின் உன்னத வாழ்க்கை, உலகின் முதல் நகர நாகரிகம், ஜல்லிக்கட்டு, இன்றும் தமிழ் ஊர் பெயர்கள், கீழடியில் தொன்மை நாகரிகம், ஆதிச்சநல்லுாரில் அற்புதம் நிகழ்த்திய தமிழர்கள். கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் முன்னோடி, கொற்கை துறைமுகம், ஆயிரக்கணக்கான போர்க்கப்பல்கள் உள்ளிட்ட காணக் கிடைக்காத அரிய செய்திகள் இந்நுாலில் பொதிந்து கிடக்கின்றன. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027083.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

இரையாகும் இறையாண்மை

இரையாகும் இறையாண்மை (இந்திய – அமெரிக்க ராணுவ உறவுகள் 2014- 2017),  சு.அழகேஸ்வரன், வாஸ்வியா, பக்.56, விலை ரூ.40. நரசிம்மராவ் காலத்திலிருந்து அமெரிக்காவுடனான இந்திய ராணுவ உறவுகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல். 1995 இல் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பின்னர் பா.ஜ.க. அரசு 2001 ஆம் ஆண்டில் போர்த்தந்திரக் கூட்டாளிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2005 இல் மன்மோகன் சிங் அரசாங்கம் இந்திய – அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2014 இல் இருந்து நவீன ஆயுத தளவாடங்களை அமெரிக்காவும், […]

Read more

சிவமகுடம்

சிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது! எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி 6/6/2018.   […]

Read more

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. மக்கள் தலைவர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்னும் இருபெரும் மேதைகளின் இனிய உறவையும் அவர்களுடைய நட்பின் மேன்மையையும் எடுத்துக்கூறும் நூல். அதோடு இருவர் வாழ்விலும் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், இருவருக்கமான நல்லியல்புகள் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் படைத்து இருக்கிறார் நூலின் ஆசிரியர் கமலா கந்தசாமி. நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026854.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், ம.தொல்காப்பியன், கைத்தடி பதிப்பகம், விலை 120ரூ. பஸ் கண்டக்டர் வேலை பார்த்த ஒருவர் கடும் உழைப்பாலும், அசாத்திய திறமையினாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த சம்பவம் நமது தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது மட்டுமல்ல, நீண்ட காலமாக அந்தப் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை வரலாறுடன், அவரது திறமைகளை அலசி ஆராய்கிறது இந்த நூல். ரஜினியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026858.html இந்தப் புத்தகத்தை […]

Read more

மிஸா கொடுமை

மிஸா கொடுமை, விசிட்டர் அனந்த், நக்கீரன், விலை 200ரூ. ‘எமர்ஜென்ஸி‘ என அறியப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த ஜனநாயக படுகொலைகள், நெஞ்சை பதறவைக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்ச்சூழலில் முதன் முதலில் புத்தக வடிவில் பதிவு செய்தவர் நூலாசிரியர் ‘விசிட்டர்’ அனந்த். இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு 4 தலைப்புகளில் கொண்டு வந்த இந்த நூல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போதைய தலைமுறையினரும் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நக்கீரன் பதிப்பகம் மீண்டும் இந்த புத்தகத்தை ஒரே தலைப்பில் […]

Read more
1 27 28 29 30 31 104