சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்,  தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,  பக்.496, விலை ரூ.600. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு அளித்துள்ள கொடைகள் அளப்பரியவை. அவற்றுள் சைவத்தைப் பொருத்தவரை காரைக்கால் அம்மையார் (மூன்றாம் நூற்றாண்டு) தொடங்கி சேக்கிழார் (12 ஆம் நூற்றாண்டு) வரை இருபத்தேழு அருளாளர்கள் வழங்கிய "பன்னிரு திருமுறை' சைவ சமயத்தின் கவசமாகவே கருதப்படுகிறது. மேலும் குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர் போன்றோரும் சைவத்தால் தமிழையும், தமிழால் சைவத்தையும் மேம்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கியங்கள் எவ்வகையிலெல்லாம் சைவத்தை வளர்த்தெடுக்க உதவின என்பதை உணர்த்தும்விதமாக […]

Read more

ஓ… இப்படியும் நடக்குமா?

ஓ… இப்படியும் நடக்குமா?, முனைவர் த.அசோக்குமார், முனைவர் டி.அசோக்குமார் வெளியீடு, பக்.100, விலை 100ரூ. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துாறு போலக்கெடும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நுால் முழுவதும் துன்பம் வருமுன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. வெள்ளம் வருமுன் அணை போடுபவன் புத்திசாலி என்ற வாசகத்திற்கேற்ப, கஷ்ட நஷ்டம் வருவதற்கு முன் அதை தடுக்கும் வழிமுறைகள் இந்நுாலில் உள்ளன. வியாபாரத்தில் தொழிலில் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்குரிய கருத்துகள் இந்நுாலில் உள்ளன. தொழில் வர்த்தகம், நிர்வாகம், யாவற்றிலும், பாதுகாப்பான உபகரணங்கள், […]

Read more

ஆண்பிரதியும் பெண் பிரதியும்

ஆண்பிரதியும் பெண் பிரதியும்,  சமயவேல், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.160, விலை ரூ.150. பல்வேறு சிற்றிதழ்களில், இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளும், கரீபியக் கவிஞர் டெரெக் வால்காட் பற்றியும், தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் பற்றியும் எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ந.முத்துசாமி, எஸ்.இராமகிருஷ்ணன், சோ.தர்மன், அய்யப்ப மாதவன், சி.மோகன், லீனா மணிமேகலை, சந்திரா, பெருந்தேவி என தமிழ் இலக்கிய வாசகர்களால் நன்கறியப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றியும், யுகியோ […]

Read more

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து, சாந்தகுமாரி சிவகடாட்சம்,சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், பக்.298, விலை ரூ.350. சுவிட்சர்லாந்து சென்றுவிட்ட வந்த ஒருவர் நம்மிடம் பேசுவதைப் போல, தனது சுவிட்சர்லாந்து பயண அனுபவத்தை இந்நூலில் நூலாசிரியர் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற பல இடங்களை நமக்குச் சுற்றிக்காட்டுகிறார். ஆல்ப்ஸ் மலைகளில் ஒன்றான மிக உயரமான (3,454 மீட்டர்) ஜீங்புருமலை, 4 கி.மீ.தொலைவு உள்ள இகர் மற்றும் மான்க் மலைகளின் ஊடே உள்ள குகைப்பாதை, ஜெனீவாவில் உள்ள ஜெட் டி யு நீருற்று என பல இடங்களுக்கு நாம் செல்கிறோம். […]

Read more

ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம்,  பிரபா ஸ்ரீதேவன், தமிழில்: ஸ்ரீ.சம்பத்,நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன், பக்.174, விலை ரூ.200. நூலாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்தது. அந்நூலில் உள்ள கட்டுரைகளின் தமிழாக்கமும், நூலாசிரியர் ஆற்றிய உரைகளும், தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் தேவை என்கிற அடிப்படையில் நம் சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களான மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், சாதிரீதியாக மலக்கழிவுகளை அள்ளும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் மனித உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன; அவர்களுடைய மனித உரிமைகளை அவர்களுக்கு எவ்விதம் […]

Read more

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.ராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், விலை 150ரூ. தொன்மை சிறப்பு வாய்ந்த சங்கச் சான்றோர் தொடங்கி இன்றைய கபிலன் வைரமுத்து வரை வாழையடி வாழை என வழிவந்த கவிஞர்களின் படைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி தான் எழுதிய 16 கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் பேராசிரியர் ச.ராமமூர்த்தி. முற்றிலும் திறனாய்வு கட்டுரைகளை கொண்ட இந்த நூல் கட்டமைப்பு, கருத்து வைப்பு, ஆய்வுநெறி மற்றும் முடிவுரைத்தல் ஆகிய 4 நிலைகளிலும் தனிசிறந்து நிற்கிறது. இந்நூல் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் வழிகாட்டியாக அமையும். […]

Read more

நாட்டுக்கொரு பாட்டு

நாட்டுக்கொரு பாட்டு, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, தி இந்து தமிழ், விலை 170ரூ. உலக நாடுகளின் தேசிய கீதம் உருவான விதம் பற்றி தி இந்து தமிழ் நாளிதழின் மாயாபஜார் இணைப்பிதழில் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 43 பிரபல நாடுகளின் தேசிய கீதம் குறித்து பலரும் அறிந்திராத விஷயங்கள் சுவைபட திரட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வெவ்வேறு வித தகவல்களை நூலாசிரியர் பதிந்திருப்பதும், பாடலை தமிழாக்கம் செய்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய அம்சம். குறிப்பாக பாடல்களை எழுதிய கவிஞர்களின் வாழ்க்கை குறிப்பு, பாடல்கள் […]

Read more

இடம் பொருள் மனிதர்கள்

இடம் பொருள் மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் பதிப்பகம், விலை 130ரூ. வாழ்க்கை என்னும் நெடும் பயணம் நமக்கு அளித்து செல்லும் அனுபவங்கள் ஏராளம். அந்த நினைவுகள் எப்போதும் சுகமானவையாகவே இருக்கும். அப்படி சக மனிதர்கள், பொருட்கள், இடங்கள் போன்றவற்றால் தனக்கு ஏற்பட்ட சிறப்பான அனுபவங்களை இங்கே சுவையாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நகைச்சுவை உணர்வுடன் கருத்தையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை படிக்கும்போது நமது வாக்கை அனுபவங்களும் கண்முன்னே வந்து செல்வது சிறப்பு. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000027077.html […]

Read more

ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம்,  பிரபா ஸ்ரீதேவன், தமிழில்: ஸ்ரீ.சம்பத்,நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன், பக்.174, விலை ரூ.200. நூலாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக  அந்நூலில் உள்ள கட்டுரைகளின் தமிழாக்கமும், நூலாசிரியர் ஆற்றிய உரைகளும், தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் தேவை என்கிற அடிப்படையில் நம் சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களான மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், சாதிரீதியாக மலக்கழிவுகளை அள்ளும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் மனித உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன; அவர்களுடைய மனித உரிமைகளை அவர்களுக்கு எவ்விதம் மீட்டெடுத்துக் கொடுப்பது என்று […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள்,  ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்.688, விலை ரூ.450. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சுட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து தோன்றும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டாகிறது. கருத்து வேறுபடும்போது சொல்லும் வேறுபட வேண்டும். இல்லையெனில் பொருள் மயக்கம் உண்டாகும். மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க நெறிமுறை. இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வேர்ச்சொல் ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஞா.தேவநேயப் பாவாணர் ‘செந்தமிழ்ச் செல்வி‘ என்னும் திங்களிதழில் தொடர்ந்து எழுதி […]

Read more
1 59 60 61 62 63 88