சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 180ரூ. பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளரும், பள்ளி ஆசிரியையும், கவிஞருமான தி. பரமேசுவரி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பேத்தி. இந்தத் தொகுப்பில், அரசியல் கட்டுரைகள், சங்க இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், பெண்ணியக் கட்டுரைகள், நூல் மதிப்பீடுகள் என்று நான்கு வகையான கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்துகிறது. நூல் மதிப்பீடுகள் அவரது நடுநிலைமையை நிலைநாட்டுகிறது. பெண்ணியக் கட்டுரைகளில் அவரது ஆதங்கம் தெரிகிறிது. அரசியல் கட்டுரைகளில் அவரது ஆவேசம் புரிகிறது. […]

Read more

மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள்

மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள் (பகுதி ஒன்று), தி. முருகானந்தம், தமிழ்ச்சோலை வெளியிடு, பக். 144, விலை 100ரூ. தமிழை ஆராய்ச்சி செய்த மேலைநாட்டு அறிஞர்கள் பலரையும் பற்றி எழுதத் துவங்கும் நூலாசிரியர், ஹார்டி (ஆர்டி) என்பவர் செய்த ஆய்வை குறித்து இந்நூலில் விரிவாக எழுதி உள்ளார். ஆர்டி ஜெர்மானியர். தமிழ் வழக்கறிஞராக திகழ்ந்தவர். சமயவியல் பேராசிரியர். கிருஷ்ண பக்தியை விரகபத்தி என்றும், கிருணவம் என்றும் குறிப்பிடுவது புதுமை. திருமாலை குறிக்கும் மாயோன், மாயவன் என்ற பெயர்கள் கருமை நிறத்தால் வந்த […]

Read more

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும்

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், சி.எஸ். தேவநாதன், விஜயா பதிப்பகம். அறிவாற்றல், நினைவாற்றல் எனும் இரண்டு ஆளுமை ஆற்றல் அடிப்படைகளை, அறிவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஆராய்ந்து எழுதி உள்ள நூல் இது. முறையான கல்வியும், புத்தக வாசிப்பும் அறிவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளது, நினைவாற்றல் பற்றிய உளவியல் பூர்வமான விவரங்கள், நினைவாற்றலுக்கு தேவையான சில செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் விவரித்துள்ளார். நூல், ராஜா பர்த்ருஹரியின் சதகச் சாரத்தோடு துவங்குகிறது இடையில் விதுர நீதியைக் குறித்துப் பேசுகிறது. புத்தகப் பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை ஞானாலயாவை […]

Read more

பொன் அந்திச் சாரல் நீ

பொன் அந்திச் சாரல் நீ, ஸ்ரீஜா வெங்கடேண், வானதி பதிப்பகம், பக். 264, விலை 100ரூ. மாத நாவல் உலகில் கொடி போட்ட சாதனையாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ். நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பொன் அந்திச் சாரல் நீ என்ற அவர் எழுதிய நாவல், ஒரு தவறான தொலைபேசி அழைப்பால், ஒரு குடும்பம் சிதைவதையும், அதற்கு காரணமான மருத்துவரான தன் தாய்மாமனுக்காக, கதாநாயகன் தன் வாழ்க்கையே தியாகம் செய்வது பற்றியும் பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவல், நினைக்கவே […]

Read more

மூன்றாம் கதாநாயகன்

மூன்றாம் கதாநாயகன், ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 160ரூ. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அன்பு வேறு, காதல் வேறு என்பதை எடுத்துக்காட்டும் கதை மூன்றாம் கதாநாயகன். மனைவி இருக்க மற்றவள் மீது மோகம் கொண்டால் குடும்பம் என்னவாகும் என்கிறது என்ன குறை என்ற கதை. ஒரு குடும்பத்திற்கு கணவனோ, மனைவியோ நல்லவிதமாக அமையவில்லை என்றால் அந்த குடும்பத்தின் கதி என்னவாகும் என்பதை காட்டும் வித்தியாசமான நட்பு என்ற கதை. […]

Read more

மெய்வருத்தக் கூலி தரும்

மெய்வருத்தக் கூலி தரும், (வானொலி உரைகள்), த. ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 172, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-339-5.html கோவை மற்றும் சென்னை வானொலியில் இன்சொல் அமுது என்ற தலைப்பில் இந்நூலாசிரியரால் நிகழ்த்தப்பட்ட உரைகள், படித்ததில் பிடித்தவை, அனுபவங்கள், சந்திப்புகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுளள்ன. முதல் கட்டுரை ஓயாத ஒற்றர் படையில் சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ.வின் ஒற்றர் படைப் பிரிவில் இடம் […]

Read more

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள்

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள், ஜான் முருக செல்வம், ஜாய்ஸ் முருக செல்வம், பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. பாலுணர்வு என்றாலே, வெளிப்புறத்தில் முகம் சுளித்தும், உள்ளுக்குள் ரசத்தும் பழகிப்போன மனித இனத்துக்கு, மனவளர்ச்சி குன்றியோரின் உணர்ச்சிகள் புரியுமா என்பது தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்காகவே ஜான் முருக செல்வமும், ஜாய்ஸ் முருக செல்வமும், மிகத் தெளிவாக இந்த நூலை எழுதியுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய ஆண், பெண்கள் பருவ வயதை எட்டும்போது உடலில் எற்படக்கூடிய மாற்றங்கள், பாலுணர்வால் அவர்கள் ஆட்கொள்ளப்படும் […]

Read more

என் சரித்திரம்

என் சரித்திரம், டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர், விகடன் பிரசுரம், சென்னை -2, விலை 275ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-808-2.html 21ம் நூற்றாண்டிற்கும் 19ம் நூற்றாண்டிற்கும் எழுத்து பாலம் போடும் உ.வே.சா. தமிழ் தாத்தா உ.வே.சா. சாமிநாதய்யர் எழுதிய என் சரித்திரம் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். 21ம் நூற்றாண்டிற்கும், 19ம் நூற்றாண்டிற்கும் எழுத்து பாலம் போடுகிற அவர் எழுதிய அந்த புத்தகத்தில், 19ம் நூற்றாண்டில் தமிழகம், அங்கே வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களுடைய உணவு பழக்கம், […]

Read more

சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள்

சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பள்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ. கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். தொன்மையான கோள வடிவ நாணய்ங்கள், நாணயத்தின் முன்புறத்தில் யானைச்சன்னம் பொறித்த நாணயங்கள், முன்புறம் செழிய வெள்ளீய வட்ட நாயணங்கள், செழியன் பெயர் பொறித்த நாணயங்கள், மாறன் பெயர் பொறித்த நாணயங்கள், சங்க கால பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்கள், சங்க காலப் பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறித்த நாணயங்கள் ஆகியவற்றைப் பற்றி […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு போல இல்லாமல் நாடகம், சினிமா, ஆகியவற்றில் தொடக்கத்தில் இருந்து தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும், தான் அறிமுகம் செய்துவைத்த நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை சுவைபட கொடுத்து இருக்கிறார். தன்னுடன் நடித்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மயங்கிவிழுந்துவிட, அவரை கொலை செய்துவிட்டோமோ என்று பதறியதையும், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், […]

Read more
1 635 636 637 638 639 841