சுவரொட்டி

சுவரொட்டி, கலாப்ரியா, கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கச் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41. வெளிப்படையான அனுபவங்களை எழுதுவது தங்களது பிம்பங்களை உடைத்துவிடும் என்பது அனேக தமிழ் எழுத்தாளர்களின் பயமாக இருக்கிறது. போலி முகமூடிகளின்றி நேர்பட பேசும் கலாப்ரியாவின் உரையாடல்களின் தொடர்ச்சிதான் அவரது கட்டுரைகள். கலாப்ரியாவின் நான்காவது கட்டுரைத் தொகுப்பான சுவரொட்டி வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவில் தொலைத்த தமிழர்களின் வாழ்வை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. தீவிர சினிமா ரசிகர்களுக்கு தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுடனான உறவு பற்றி சொல்லும்போது, Murder She Said என்ற […]

Read more

கர்ணனின் கவசம்

கர்ணனின் கவசம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004. நாடி நரம்புகளில் எல்லாம் மகாபாரதமும், ராமாயணமும், பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் சரித்திர நாவல்களும் ஊறிக்கிடக்கும் ஒருவர் விறுவிறுப்பான தொடர்கதை எழுதத் தொடங்கினால் எப்படி இருக்கும்? கர்ணனின் கவசம் என்ற நாவல் இதற்குப் பதிலாக இருக்கிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கும் ஓட்டம் சரித்திரத்தில், பூகோளத்தில், புராணத்தில், சொர்க்கத்தில், வைகுண்டத்தில் என எங்கெங்கு மனிதன் யோசிக்க முடியுமோ அங்கெங்கெல்லாம் சஞ்சரித்து கடைசியில் கபாடபுரத்தில் முடிவடைகிறது. முடிவடைகிறது என்று சொல்வது தவறு. மீண்டும் […]

Read more

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில்-சி.மோகன், அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, ராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை 93. வரலாற்றில் படித்த செங்கிஸ்கான் மீது இன்னும் பலருக்கு அச்சம் நீங்கியிருக்காது. அவரும் அவரது மங்கோலியப் படையினரும் எப்படி உலகில் பல நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைத்தனர் என்பதற்கான விடைகளைத் தரும் வரலாற்றுப் புனைவு நாவல் ஓநாய்குலச் சின்னம். சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் என்பவர் எழுதிய புகழ்பெற்ற இந்நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் சி.மோகன். கலாச்சார புரட்சி காலத்தில் உள்மங்கோலியாவில் வாழ்ந்த […]

Read more

பூ மலரும் காலம்

பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், விலை 85ரூ. இலக்கிய வெளியில் பெண் எழுத்தாளர்கள் குறைந்துவிட்ட நிலையில் ஜி. மீனாட்சி போன்ற சிலரின் சிறுகதைகள் புதிய தெம்பூட்டுகின்றன. இவரின் பூ மலரும் காலம் என்னும் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைக் குறித்து, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கருத்து- எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஓர் எழுத்தாளரின் தொகுதி என்பதை இதிலுள்ள படைப்புகள் புலப்படுத்துகின்றன. வணிக நோக்கில்லாமல் தனி மனிதனையும், சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவரின் […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127/63, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 397, விலை 200ரூ. இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் கல்வி கற்றத் தமிழ் மொழியின் சிறப்பை, உலகம் அறியச் செய்த பெருமைக்குரியவர் தவத்திரு தனிநாயக அடிகள், அவரின் நூற்றாண்டு விழா நினைவாக வெளிவந்திருக்கிறது இந்நூல். இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகளில் பயணக் கட்டுரையான ஒன்றே உலகம் தவிர, மற்ற நான்கும் தமிழ் இலக்கியம், பண்பாடு பற்றியவை. அடிகள் தாம் மேற்கொண்ட உலகப் பயண அனுபவங்கள் குறித்துச் சொல்லியுள்ள தகவல்கள், […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ. மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார். பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ. அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர். தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை […]

Read more
1 716 717 718 719 720 841