இடைவேளை

இடைவேளை, ஆர். வெங்கடேஷ், வேத பிரகாசனம், 142 முதல் மாடி, கிரீன் வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, விலை 100ரூ. பொருளாதார சீர்கேடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 3 கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்ட நாவல் இடைவேளை. இதில் பிரதமர், நிதி மந்திரி, இஸ்ரோ விஞ்ஞானி, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பாகும்.   —-   ஸகாத் கோட்பாடும் நடைமுறையும், மெல்லினம், 31பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை 2, விலை 150ரூ இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். […]

Read more

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?, மாரிக்கனி, ஒருலகம் பதிப்பகம், 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 60ரூ. தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதற்குக் காரணம் என்ன? தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்று விவரிக்கிறார் ஆசிரியர்.   —-   வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ160. ஔரங்கஜேப் (அவுரங்கசீப்) எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழிகள் விழக்காரணம் என்ன […]

Read more

கல்கியின் முத்திரைக் கதைகள்

கல்கியின் முத்திரைக் கதைகள், செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 100ரூ. தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள். ஆயினும் இன்று பூத்தமலர் போல மணம் வீசுகின்றன. கல்கியின் கதைகளுக்கு வயதே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ம. திருமலை, கல்கியின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்து, ஆராய்ந்து இந்த 12 கதைகளை முத்திரைக் கதைகளாகத் தேர்வு […]

Read more

நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும்

நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 100ரூ. ஆயிரம் பிறைகண்ட ஆரூர்தாஸ், ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்தவர். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பட அதிபர்களுடன் நெருங்கிப் பழகியவர். திரை உலகம் பற்றிய விவரங்கள் இவர் விரல் நுனியில் இருக்கும். ஏ.பீம்சிங், பி. மாதவன், எல்.வி. பிரசாத், தாதாமிராசி, புல்லையா, சி.ஹெச். நாராயண மூர்த்தி, திருலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு, கே. சங்கர், ஏ.எஸ்.ஏ. சாமி, […]

Read more

துளி விஷம்

துளி விஷம், வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், பி.டி. ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ. விதவிதமான கதைகள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலாசிரியர் ஆனந்த் ராகவ், ஒரு நிருபர். ஓவியம்போல் எழுத்தில் வரையத் தெரிந்த நிருபர். கண்டதும், கேட்டதும், பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்தக் கொள்ளும் கோணங்களம் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டுபவை. எழுத்தில் மிகை இல்லை. […]

Read more

மனசே மருந்து

மனசே மருந்து, தனலெட்சுமி பதிப்பகம், எஸ். 17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. மனதின் பல்வேறு இயல்புகள், ஆற்றல்கள் அந்த ஆற்றலை ஒருமுகப்படுத்தி பயன்கொள்ளும் முறை முதலான பலவும் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மனநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், மருந்துகளாலும், மருத்துவர்களாலும் குணப்படுத்த இயலாத பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள். அவர்களை சிறந்த மனநலமுள்ளவர்களாக, செம்மையான மனிதர்களாக ஹிப்னோ தெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. […]

Read more

சுயமரியாதை

சுயமரியாதை, ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2ம் சந்து, முதல்மாடி, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 175ரூ. இவர்தான் பெரியார் வரலாற்று தொடரில் 3வது புத்தகம்தான் இந்த சுயமரியாதை. தந்தை பெரியாருடன் நெருங்கிய தாடர்பு வைத்திருந்த பேராசிரியர் ம. நன்னன் இப்புத்தகத்தை தொகுத்து வெளியிட்டு உள்ளார். தந்தை பெரியாரின் பேச்சுக்கள், குடியரசு பத்திரிகையில் வந்த தலையங்கங்கள், திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். சுயமரியாதை இயக்கம் பற்றிய விளக்கங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. கடலூர் மாவட்டம் வட்டக் காவனூரை சேர்ந்த நன்னனின் இயற்பெயர் […]

Read more

கலாம்மின் திருப்புமுனைகள்

திருப்புமுனைகள், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ. சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு, மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்று இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திராமாக ஜொலிக்கும் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம். ஏற்கனவே அக்னி சிறகுகள் என்ற அற்புதமான படைப்பை கொடுத்து புத்தக உலகில் ஒரு சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார். இப்போது, அவரது சிறகுகள் மேலும் விரிவடைந்து பறந்ததன் மூலம் உருவாகி இருக்கிறது. திருப்புமுனைகள் என்ற அக்னி சிறகுகள் […]

Read more

காலத்தின் குரல்

காலத்தின் குரல், ஆவாரம்பூ, 10, மேலப்பாட்ட நயினார்புரம், கல்லிடைக்குறிச்சி 627416, விலை 50ரூ. கவிஞராக, சிறுகதையாளராக, கட்டுரையாளராக என பன்முகத்தில் சிறந்த தி.க.சி. விமர்சகராக இருந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்த நூலில் பல எழுத்தாளர்கள் பற்றிய அவரது வெளிப்படையான கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. தொகுத்தவர் வே. முத்துக்குமார்.   —-   ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள், சுவாமி தன்மயானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், மைலாப்பூர், சென்னை 4, விலை – முதல் பாகம் ரூ.120, மற்ற பாகங்கள் தலா ரூ. 110. ஆன்மிக […]

Read more

செம்புலச் சுவடுகள்

செம்புலச் சுவடுகள், (ஓர் உரைக்கவிதை தொகுப்பு), கி. தனவேல், இ.ஆ.ப. கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, விலை 50ரூ. கிராமத்து நிலப்பரப்பு தென்னார்க்காடு மாவட்ட கிராமங்களின் ஞாபகச் சுவடுகளை ஏக்கத்துடன் நினைவுகூரும் கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது. கி. தனவே இ.ஆ.ப. எழுதியிருக்கும் செம்புலச் சுவடுகள் கவிதைத் தொகுப்பு. நவீன கால நகர்ப்புற வாழ்க்கையில் தான் இழந்துவிட்ட கிராமத்து அடையாளங்களை ஒவ்வொரு நாளும் நகருக்குள் வாழப் பணிக்கப்பட்ட கிராமத்துவாசி நினைவு கூர்கின்றான். நினைவில் கிராமம் சுமந்து அலையும் […]

Read more
1 720 721 722 723 724 841