பிரபஞ்ச இரகசியங்கள்

பிரபஞ்ச இரகசியங்கள், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 208, விலை 200ரூ. அண்டசராசரங்கள் என்று கூறப்படும் சூரியன், சந்திரன், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விண்வெளிக்கற்கள், ஆகாயம், கேலக்ஸி… என்று இயற்கையின் ஒட்டுமொத்த தொகுப்பான பிரபஞ்சத்தை அறிய விரும்பும் வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். பிரம்மாண்டமான இப்பூமியே இப்பிரபஞ்சத்தில் ஒரு அணு அளவிலான புள்ளிதான். ஒன்றுமே இல்லாத இந்த வெட்ட வெளியில் சுமார் 1370கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய அணுத்துகளின் பெரு வெடிப்பு (பிக்-பேங்) மூலம்தான், கற்பனைக்கு எட்டாத இப்பிரபஞ்சம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. […]

Read more

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம். தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய […]

Read more

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. அமேசான் காட்டிற்குள் போகாதவர்கள், போக முடியாதவர்கள் இந்நூலைப் படித்தால் அதன் தன்மையை ஓரளவிற்கேனும் உணர முடியும். விசித்திரமான விலங்குகள், ஆறுகள், பாம்புகள், பழங்குடிகள் என்று நம் கண்முன்காட்டி, காட்டைப் பற்றிய ஒரு ஆய்வையும் மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர். கையை வைத்தால் சிலிர்ப்பூட்டும் ஆறும் இங்குண்டு, நொடியில் கையைப் பொசுக்கிவிடும் கொதிக்கும் ஆறுகளும் இங்குண்டு என்பது ஆச்சரியத் தகவல். நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

புனிதர் அன்னை தெரசா

புனிதர் அன்னை தெரசா, குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. கிறிஸ்தவ மதத்தில் இறை அருள் பெற்றவருக்கு, கத்தோலிக்க திருச்சபையால் வழங்கப்படுவதே ‘புனிதர்’ பட்டம். சமீபத்தில் அத்தகைய பட்டத்தைப் பெற்றவர் மறைந்த அன்னை தெரசா. தவிர, இவர் உலகின் மிக உயர்ந்த பரிசான அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர். அன்னை தெரசா, ‘நான் ஒரு இந்தியப் பெண். இந்தியா எனது நாடு. இந்தியர்கள் எனது சகோதரர்கள்’ என்று முழங்கியவர். இப்படி இந்தியாவுக்குப் பல பெருமைகளை சேர்த்துள்ள இவர் எப்படி இந்தியா […]

Read more

இஸ்லாமிய சட்டக் கருவூலம்

இஸ்லாமிய சட்டக் கருவூலம், தமிழில் மவுலவி நூஹ், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 150ரூ. இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் எழுதிய நூல் ‘பிக்ஹுஸ் சுன்னா.’ இதைத் தமிழில் மவுலவி நூஹ் மஹ்லரி மொழிபெயர்த்துள்ளார். இது ஏழாவது பாகமாகும். இந்த நூலில் மண விலக்கு குறித்த அனைத்து செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மணவிலக்கு (தலாக்), மணவிலக்கின் முறை, குழந்தை பராமரிப்பு, பராமரிப்பதற்கான நிபந்தனைகள் போன்ற அனைத்து சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்து தமிழ் முஸ்லிம்களிடம் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் […]

Read more

உலக மதங்கள்

உலக மதங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 208, விலை 175ரூ. உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி, மக்களால் அவை பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்த மதங்கள் அனைத்துமே ஒற்றுமை, அமைதி, அன்பு போன்ற நல்ல விஷயங்களை வலியுறுத்துகின்றன. தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றிருப்பதை மனிதன் நம்புகிறான். அவற்றை எடுத்துரைக்கும் இறைத்தூதர்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் கருத்துக்களை ஏற்று மனிதன் நடப்பதாலும், அம்மதங்கள் நிலைத்திருக்கின்றன. அந்த வகையில், இந்நூலாசிரியர் இவ்வுலகிலுள்ள முக்கிய மதங்களைப் பற்றியும், அவை எப்படி, யாரால், எப்போது, எதற்காக தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவற்றின் […]

Read more

நதிகள் இணைப்பு சாத்தியமா

நதிகள் இணைப்பு சாத்தியமா, குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 112, விலை 70ரூ. உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நதிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம் (பக். 68) என, ராகுலும், நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம் (பக். 70) என மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதேநேரம் ஆந்திராவுக்கு தண்ணீர் தர ஒடிசாவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளாவும் விரும்பவில்லை. பீஹாரும், மேற்கு வங்கமும் கங்கை நீரை திசை […]

Read more

புத்த புனித காவியம்

புத்த புனித காவியம், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, சென்னை, பக். 368, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-5.html உலகளாவிய முக்கிய மதங்களில் ஒன்று பௌத்தம். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் இதைத் தோற்றுவித்தவர் கௌதம புத்தர். எல்லா மதங்களும் கடவுள் உண்டு என்ற கொள்கையில் தோன்றியவை என்றால், பௌத்தம் மதம் மட்டும் கடவுள் இல்லை என்ற வித்தியாசமான கருத்தில் உருவானது. ஆனாலும் கடவுளுக்கு அடுத்துள்ள தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரை மற்ற மதத்தினர் ஏற்பதைப்போல் புத்தரும் ஏற்கிறார். […]

Read more

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள்

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள், குன்றில் குமார், குறிஞ்சி பதிப்பகம், சென்னை, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-7.html உலக அளவில் பிரபலமாக விளங்கும் சில உளவுத் துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. ஒரு நாடு பாதுகாப்புடன் இருக்க, தனக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களின் பலம், பலவீனம் என்ன? அவர்களை வீழ்த்த என்னென்ன வழிகள் உள்ளன என்பன போன்ற பல விவரங்களை, எதிரியின் இருப்பிடங்களுக்கே சென்று வேவு பார்த்து அறிவதுதான் அந்நாட்டின் உளவுத் […]

Read more

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 100ரூ. தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.  முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள் ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் […]

Read more
1 2 3