காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் பெறமுடியும் என்று கருதினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் நேதாஜி வெற்றி பெற, காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீத்தா ராமையா தோல்வி அடைந்தார். பட்டாபியின் தோல்வி, என் தோல்வி என்று காந்தி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து காந்திக்கும், நேதாஜிக்கும் நடந்த கடிதப் […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ. கலை இலக்கியம் குறித்து, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். சங்க இலக்கியம் முதல், தற்கால இலக்கியம் வரையிலும் வெளியாகியுள்ள அத்தனை படைப்புகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை, எழுத்தாக வடித்துள்ளார் ஜீவா. மனிதத்தை மேம்படுத்தும் இலக்கியங்களை நல்ல இலக்கியங்களாகவும், சமுதாய மேம்பாட்டிற்கு துணைபுரியாத இலக்கியங்களை, நசிவு இலக்கியங்களாகவும், ஜீவா இனங்காட்டியுள்ளார். உலகத்தின் இலக்கிய முன்னோடிகளையும், அவர்களின் படைப்புகளையும், […]

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் […]

Read more

உலகப்பன் காலமும் கவிதையும்

உலகப்பன் காலமும் கவிதையும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-7.html புதுவைக்குயில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்போர் மதுவை உண்ட வண்டுபோல மயங்குவர் என்பது திண்ணம். பாடாத பொருளில்லை எனச் சொல்லும் அளவுக்கு, அந்த எழுச்சிக் கவிஞர் எழுதிக் குவித்த, முதல் கவிதை தொடங்கி அத்தனைக் கவிதைகளையும் ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளார் நூலாசிரியர். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், பாரதிதாசனின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல் […]

Read more

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]

Read more

சமுதாயப் பார்வையில் மணிமேகலை

சமுதாயப் பார்வையில் மணிமேகலை, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 216, விலை 110ரூ. மணிமேகலையின் முன் கதையாகிய சிலப்பதிகார ஆராய்ச்சியில் தொடங்கிப் பதிகமும், வஞ்சிக் காண்டமும், இளங்கோவடிகளால் இயற்றப்படவில்லை எனக்காட்டி, இளங்கோவுக்கு கண்ணகி கதையை சொன்னவர் சாத்தனார் என்பது சரியா என வினவி, மணிமேகலை படைத்த சாத்தனாரும், சங்கத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்லர் என, நிறுவிச் செல்கிறது இந்த நூல். பசிப்பிணி அறுத்த பாத்திரமான மணிமேகலையைச் செதுக்கியுள்ள பாங்கினை, வியந்து விதந்து சொல்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளராகிய நூலாசிரியர், தம் கருத்திற்கேற்பச் சமுதாயப் பணியை, […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. காந்தி வ.உ.சி., பரலி சு. நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்ற மகாகவி பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழலையும் ஜீவா பெற்றார். ஆனால் மகாகவி பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் பாரதியின் படைப்புகளை கருத்தூன்றிப் படித்து, அதில் தன் மனத்தை இழந்து தமிழ் மக்களிடத்தில் பாரதியைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் ஜீவா. அதற்கு இந்த […]

Read more

காலமறிந்து கூவிய சேவல்

காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஏ1பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 95ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதைகளை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். அவரைப்பற்றி வெளிவராத தகவல்களும் இதில் உள்ளன. நன்றி: தினத்தந்தி 8/5/2013.   —-   மைனஸ் ஒன், நந்தாகுமாரன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, பக். 112, விலை 90ரூ. நவீன உலகின் மனித செயற்பாடுகள் அவனது பேச்சில் மொழியில் நடையில் […]

Read more
1 2