முல்லை பெரியாறு அணை பிறந்த கதை

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை, விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ. தமிழ்நாட்டுக்கும், கேரளத்துக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டியவர் பென்னிகுயிக் என்ற வெள்ளைக்காரர். இந்த அணையைப் பற்றி ஒரு கதையே இருக்கிறது. அணை கட்டப்படும்போது, வெள்ளப்பெருக்கால் அணையின் ஒரு பகுதி அழிந்துபோயிற்று. இதற்கு பென்னி குயிக்தான் காரணம் என்று வெள்ளை அரசு பழிபோட்டதுடன், மேற்கொண்டு அணையைக் கட்டி முடிக்க பணம் தரவும் மறுத்துவிட்டது. இதனால் பென்னி குயிக் இங்கிலாந்து நாட்டுக்குத் திரும்பிச்சென்று தன் சொத்துக்களை […]

Read more

நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள்

நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள், சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. சேலைக்குப் போய்த்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில், வியாபாரம் தொடங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். வியாபாரத்தை தொடங்கி வெற்றிபெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும், செய்து பார்க்கிற துணிவும், தளராத மனமும் போதும். நேர்மையாக சம்பாதிக்க முடியும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —- Employment Education, அருண்குமார், ஹித்யா பப்ளிகேஷன், கோயம்புத்தூர், விலை 600ரூ. கல்வியைப் பொறுத்தவரை […]

Read more

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும்

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 500ரூ. திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் அனைத்துல 11வது ஆய்வு மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், பல்துறை பேராசிரியர்கள், புலவர்கள், சமய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் வாசித்து அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். திருக்கோவில்களில் வளர்ந்த தெய்வத்தமிழ், தெய்வத்தமிழ் இலக்கியங்கள், திருக்கோவில்கள் வளர்த்த மரபுக் கலைகள், திருக்கோவில்களின் கலையும் மாட்சியும் ஆகிய தலைப்புகளின் கீழ் 91 கட்டுரைகள் கருத்துக் கருவூலமாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —-   […]

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html நானறிந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் சா. கந்தசாமி. புனைகதையோடு வேறு பல துறைகளிலும் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். ஓராண்டு அவர் சிறந்த ஓவிய விமர்சகர் என்று விருது வாங்கியிருக்கிறார். தொலைக்காட்சி வந்தபோது அவருடைய பங்களிப்பு, குறும்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என மாறியது. தொலைக்காட்சிக்கென அவர் எடுத்த ஒரு முழு நீளப்படம், மைசூர் இந்திய மொழிகள் […]

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு, தந்தி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-0.html தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு 100 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது. அது இப்போது தந்தி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 400 பக்கங்கள். முழுவதம் கண்ணைக் கவரும் வண்ணத்தில். ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தது, பின்னர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் அறிமுகமானது. படிப்படியாக சூப்பர் […]

Read more

கடாரம்

கடாரம், மாயா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 704, விலை 350ரூ. பதினோராம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை அரசாண்ட முகலாம் இராஜேந்திர சோழனின் காலத்தில் இக்கதை பயணிக்கிறது. இராஜேந்திர சோழன் படையெடுத்து கைப்பற்றிய கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரச மரபினர் யார்? என்பவை நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜே3திர சோழன் கடாரம் நோக்கிப் படையெடுத்ததையும் அவனுடைய மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயம் மூலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கடாரம், தற்போதைய மலேசிய தீபகற்பத்தில் இருக்கும் கெடா பகுதி என்பதை அறியும்போது அது தற்போது […]

Read more

முப்பெரும் புராணங்கள்

முப்பெரும் புராணங்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்த புராணம் ஆகிய புராணங்களின் தொகுப்பு நூல். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த சிவபெருமான் புரிந்த திருவிளையாடல் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உண்டு. பக்தியுடன் பூஜிப்பவருக்கு எல்லா நற்குணங்களையும் வழங்கும் சிவனின் திருவிளையாடல்கள் பலவற்றின் தொகுப்பே சிவபுராணம். விநாயக புராணத்தில் விநாயகருடைய பிறப்பு, பூஜிக்க வேண்டிய முறைகள், மந்திரங்கள், அன்றாட வாழ்க்கையில் கையாள வேண்டிய முறைகள் பற்றிய செய்திகள் […]

Read more

நாடறிந்தோர் வாழ்வில்

நாடறிந்தோர் வாழ்வில், சீதைப் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைக் கூறும் நூல். இதற்கு முன் இதுபோன்ற நூல்கள் வந்திருக்கின்றன. அவை உரைநடையில் எழுதப்பட்டவை. கவிவேந்தர் கா. வேழவேந்தன் இந்த நூலை மரபுக் கவிதை வடிவில் எழுதியுள்ளார். எல்லோரும் எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கும்படியாகவும், அதே சமயத்தில் இலக்கியச் சிறப்புடனும் கவிதைகளை எழுதியிருப்பது கவிஞரின் ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றன. மகாத்மா காந்தி, நேரு, சாக்ரடீஸ், பெரியார், அண்ணா, பாரதியார், கலைஞர் கருணாநிதி, பாரதிதாசன், கண்ணதாசன் உள்பட 50 தலைவர்கள், சாதனையாளர்கள் […]

Read more

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை 12, விலை 90ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அவர் எந்தெந்த மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்? அந்தக் கடிதங்களை யார் கொண்டு சென்றார்கள்? அவற்றுக்கு அந்த மன்னர்களின் எதிர்வினைகள் எப்படி இருந்தன என்பதை நாடகவடிவில் மவுலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாக்கவி எழுதிய நூல். நாடக வடிவில் எழுதப்பட்டிருப்பதால் விறுவிறுப்பாகவும், படிப்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- தாயெனும், […]

Read more

நல்லதாக நாலு வார்த்தை

நல்லதாக நாலு வார்த்தை, ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், மனிதர்களைப் புரிந்துக் கொள்ளவும், வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் உறவு, மனம், பழக்கம், திறன், நேரம் ஆகிய 5 சிறுதலைப்புகளில் 27 கட்டுரைகளை படங்களுடன் தொகுத்துள்ளார். எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- சிம்மாசன சீக்ரெட், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இதுவரையில் 40 நூல்களை எழுதியுள்ள சிறந்த […]

Read more
1 163 164 165 166 167 223