வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய, காலத்தால் அழியாத காவியமான ராமாயணத்தை பலரும் பல வழிகளில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். வால்மீகி முனிவர் அருளிய ராமாயணத்தை எளிய தமிழில் ஒரு நாவல்போல சுவைபட கொடுத்து இருப்பது புதுமை என்பதோடு, ராமாயணத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் கருவியாக இந்த நூல் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. உத்ர காண்டம் […]

Read more

நீரோட்டம் பார்ப்பது எப்படி

நீரோட்டம் பார்ப்பது எப்படி?, மு.லக்ஷ்மி, வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. கிராமப்புறங்களில் பெரியவர் ஒருவர், இளம் புளியங்க வட்டையைக் கொண்டு, நிலத்துக்கடியில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்து கூறும் வித்தையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மரபு வழியைச் சார்ந்த ஒரு பெண்டுலம் மூலம் நீரோட்டம் பார்ப்பது எப்படி என்ற ஆய்வு மற்றும் செய்முறை நூலை, வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர் இயற்றியுள்ளார். இவர் தனது பணி ஓய்வுக்குப் பின், பல வருடங்கள், இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, […]

Read more

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள், டாக்டர் கு. கணேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 85ரூ. வயிறு பற்றிய விவரங்களை, குறிப்பாக செரிமான மண்டல உறுப்புகள் பற்றிய விவரங்களை எளிமையாகக் கூறும் நூல். உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குறித்த விவரங்கள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், உணவு முறைகள் ஆகிய அனைத்தையும் விளக்கமாக கூறுகிறது இந்நூல். வயிறு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு இன்றைய நடைமுறையில் இருக்கும் அத்தனை நவீன மருத்துவ முன்னேற்றங்களை விளக்கமாகக் கூறுவது பயமுறுத்துவதற்காக […]

Read more

இந்திய ஒருமைப்பாடு

இந்திய ஒருமைப்பாடு, குறித்தலை பாலா, பாலா கடம்பனேஸ்வரர் பதிப்பகம், 58, ஆர்.எம்.ஆர்.இல்லம், வைகை நல்லூர், குளித்தலை 639104, விலை 50ரூ. அன்பு, சகிப்புத்தன்மை, உதவும் குணம், சாதி சமய வேறுபாடற்ற நிலை என ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கும் கருத்துக்களுடன் நேர்மை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, தன் கையே தனக்குதவி போன்ற கருத்துக்களை 10 சிறுகதைகள் மூலம் நயம்பட தந்துள்ளார் ஆசிரியர்.   —-   குழலின் மொழி, நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட், 2/4, டாக்டர் ரங்கா ரோடு, மைலாப்பூர், சென்னை 4, […]

Read more

கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள்

கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள், கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 90ரூ. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஜி.ராமநாதன் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், டி.ஜி.லிங்கப்பா முதலிய இசை அமைப்பாளர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில், சிறந்த பாடல்கள் எழுதிய கவிஞர்களில் கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒருவர். அவருடைய பல பாடல்கள் இன்னும் காலத்தை வென்று வாழ்கின்றன. அவற்றில் சில, சிங்காரவேலனே தேவா (கொஞ்சும் சலங்கை), அமுதைப் பொழிதும் நிலவே(தங்க மலை ரகசியம்), சித்திரம் […]

Read more

என்மகஜெ

என்மகஜெ, அம்பிகாசுதன் மாங்காடு, தமிழில் சிற்பி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 288, விலை 200ரூ. கேரள மாநிலத்தின் வட கோடியில் உள்ள ஊரான என்மகஜெ, அரசு சுயநல அரசியல்வாதிகள், கார்ப்பரேட் கலாசாரம், விலைபோகும் விஞ்ஞானிகளின் கூட்டுச்சதி, முதலாளித்துவத்தின் சந்தைமயமாக்கல் வெறி போன்றவற்றுக்கு இலக்காகி, எப்படி உயிரினங்கள் அற்றப் போகும் அவலநிலைக்கு உள்ளானது என்பதை விளக்கும் நாவல் இது. முந்திரிக் காடுகளின் பெயரில் வனங்கள் அழிக்கப்படுதல், பின்னர் முந்திரி மரங்களை தேயிலைக் கொசுக்களிடமிருந்து காப்பதாகக்கூறி பல நாடுகளில் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான் என்னும் […]

Read more

முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசராச சோழன், ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 135ரூ. தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட இராசராச சோழன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி பெரும் புகழ்பெற்றவர். அவர் வரலாற்றை கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், மெய்க்கீர்த்திகளையும் ஆதாரமாகக் கொண்டு, விரிவாக எழுதியுள்ளார். நூலாசிரியர் கே.டி. திருநாவுக்கரசு. இராசராசனின் அண்ணனும், பட்டத்து இளவரசனுமான ஆதித்தகரிகாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான் என்பது சோழர் காலத்து மிக முக்கிய நிகழ்ச்சி. இதுபற்றி ஆசிரியர் விரிவாகவும், சுவைபடவும் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

சட்டமன்றத்தில் திருமாவளவன்

சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல். திருமாவளவன், தொகுப்பாசிரியர் பூவிழியன், கரிசல் பதிப்பகம், ஆர்62, 2வது நிழற்சாலை, த.நா.வீ.வா. குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை 42, விலை 200ரூ. 2001ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சட்டசபையில் பேசிய உரைகள், விவாதங்கள், கட்டுரைகள் போன்றவை 240 பக்கங்களில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் குரலாய், போர்க்குரலாய் சட்டமன்றத்தில் நூலாசிரியர் தன் குரலை பதிவு செய்துள்ளார். அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சட்டசபையில் நூலாசிரியர் கோபமாக […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 100ரூ. இந்து மதத்தின் வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் அருமை பெருமைகளை விளக்குவதோடு தனி மனித உயர்வுக்கும் நெறி சார்ந்த வாழ்க்கைக்கும் வேதங்களை மேற்கோள் காட்டி எழுதி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   தகவல்கள் 42, அமரர் கோ. தென்கச்சி சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலைநகர், அனெக்ஸ் பெருங்குடி, சென்னை 96, பக். 160, விலை 90ரூ. […]

Read more

திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள்

திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள், பேரா.பு.சி. இரத்தினம், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. திருமூலர் அருளிய திருமந்திரத்தின் பாடல்களில் 42 பாடல்களை தேர்ந்து எடுத்து விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிலப்பதிகாரம் மூலம், மணிமேகலை மூலம், கலாஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ120, ரூ120. ஒரு பக்கம் கணினி வரவால், இஷ்டப்படி பலரும் நூல் எழுதி சந்தையில் வெளியிடும் நேரத்தில், ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டை கோவிலூர் ஆதினகர்த்தர் வெளியிட்டிருக்கிறார். இவை மூல நூல்களின் செம்பதிப்பாகும். […]

Read more
1 175 176 177 178 179 223