நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும்

நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 100ரூ. ஆயிரம் பிறைகண்ட ஆரூர்தாஸ், ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்தவர். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பட அதிபர்களுடன் நெருங்கிப் பழகியவர். திரை உலகம் பற்றிய விவரங்கள் இவர் விரல் நுனியில் இருக்கும். ஏ.பீம்சிங், பி. மாதவன், எல்.வி. பிரசாத், தாதாமிராசி, புல்லையா, சி.ஹெச். நாராயண மூர்த்தி, திருலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு, கே. சங்கர், ஏ.எஸ்.ஏ. சாமி, […]

Read more

கல்கியின் முத்திரைக் கதைகள்

கல்கியின் முத்திரைக் கதைகள், செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 100ரூ. தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள். ஆயினும் இன்று பூத்தமலர் போல மணம் வீசுகின்றன. கல்கியின் கதைகளுக்கு வயதே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ம. திருமலை, கல்கியின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்து, ஆராய்ந்து இந்த 12 கதைகளை முத்திரைக் கதைகளாகத் தேர்வு […]

Read more

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, பூம்புகார். ஒரு சமுதாயத்தின் உண்மையான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிய நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி, காதல், தொழில், நையாண்டி, வழிபாடு என பால கோணங்களை எளிதில் உணர்த்தும் தாய்மை குணம் கொண்டது நாட்டுப்புறப் பாடல். இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொன்னால், பழங்கால இலக்கியத்திற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் தாயாக அமைந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களின் மகுடம், அதன் எளிமையும், இனிமையும்தான். மனம் லயிக்கும் பல நாட்டுப்புறப் பாடல்கள் கொண்ட இந்த 648 பக்க […]

Read more

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ. தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது […]

Read more

பாவலர் வரதராஜன் பாடல்கள்

பாவலர் வரதராஜன் பாடல்கள், கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. உரத்தகுரலில் உணர்ச்சி ததும்ப ஊர் ஊராய் மேடைதோறும் போய்ப் பாடிபாட்டுப் புரட்சி நடத்தியவர் பாவலர் என்று அழைக்கப்பட்ட வரதராஜன். இந்தப் பாவலரின் பாட்டு 1958ம் ஆண்டுவாக்கில் கேரளாவின் ஆட்சியை மாற்றிக் காட்டியது. அதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கேரளத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தது. இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்மந்திரி ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு இவடெ பாவலர் […]

Read more

கழியல் ஆட்டம்

கழியல் ஆட்டம், முனைவர். வே. கட்டளை கைலாசம், காவ்யா. நாட்டுப்புற நிகழ்த்துதல் கலைகளில் ஒன்றான ஆண்களின் ஆட்டக் கலையை பற்றியதே கழியல் ஆட்டம் என்ற இந்த நூல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்கள் ஆடும் கோலாட்டம் தான் கழியல் ஆட்டம். இன்றைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்குகள் மக்களை ஆக்கிரமித்தாலும் நாட்டுப்புற கலைகளில் கிடைக்கும் இயற்கையான உற்சாகம் ஈடில்லாதது. இந்த ஆட்டத்தில் ஒத்த உடற்கட்டுள்ள எட்டு பேர் பங்கு கொண்டு ஆடுவர். கும்மிக்கழியல் என்ற ஆட்ட முறையில் மட்டும் எட்டு பேருக்கு மேல் கலந்து கொள்வர். […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. மகாகவி பாரதியின் கலைச் சிந்தனைகளை ஆய்வு செய்யும் நூல். பாரதி ஒரு திருப்புமுனை, பாரதியின் கலைச் சிந்தனைகள், புனை கதை உத்திகள், பாரதியும் பிற நாட்டவரும் என்பன உள்ளிட்ட 10 தலைப்புகளில் புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வடித்துள்ளார் நூலாசிரியர். உலகம் முழுமைக்கும் கவிதை பாடிய பாரதியை ஆங்கிலக் கவிஞர்கள் ஷெல்லியுடனும் கீட்ஸுடனும் ஒப்பாய்வு செய்திருப்பது சிறப்பு. தீக்குள் விரலை வைத்தால்… […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ. தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 418, விலை ரூ.450 பல்வேறு இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் 80 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளின் களங்கள் கிராமத்து மண்ணின் மீதே என்றாலும் நகர்ப்புறங்களின் அனுபவச் சாயல்களும் சில கதைகளில் உண்டு. அகல், அவள் மற்றம் அம்மா சிறுகதையில் வரும் காங்சனாவின் பண்பு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டது. வழிகாட்டும் ஒளியாகக் காஞ்சனா இருப்பதையும் தனது மனமே தவறாகச் சஞ்சலப்பட்டதையும் அழகிரி உணர்வதாகக் காட்டியிருக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது. ஆட்டோ சிறுகதை நகர்ப்புற, நடுத்தரப் […]

Read more
1 181 182 183 184 185 223