வேதபுரத்து நாயகிகள்

வேதபுரத்து நாயகிகள், ச. கணபதிராமன், வெர்வோ பேஜஸ் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. பாரதி பாடிய தேச முத்துமாரி யார்? புதுச்சேரியின் பழைய பெயர்களில் ஒன்று வேதபுரம். அங்கு உள்ள மாரியம்மன் ஆலயங்கள், காரைக்கால் பகுதியை சுற்றியுள்ள அம்மன் கோவில்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் களஞ்சியமாக திகழ்கிறது இந்த நூல். வெறும் தகவலாக மட்டுமின்றி, அரிய செய்திகளை வரலாற்று பின்னணியோடு, இரண்டற கலந்து, இந்த நூலை படைத்துள்ளார் ஆசிரியர். மாரியம்மனை பற்றிய பழங்கதைகளில் அவள் வெப்பு நோய் தீர்ப்பவள் என்பது பரவலாக அறிய […]

Read more

மதில்கள்

மதில்கள், வைக்கம் முகமது பஷீர், தமிழில் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம். விடுதலையை விரும்பாத காதல் வைக்கம் முகமது பஷீர் மலையாளத்தில் எழுதி சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மதில்கள் நாவலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குறுநாவலான மதில்கள் மலையாளத்தில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இந்த நாவல், பஷீரின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. எழுத்தாளரான அவர், அரசுக்கு எதிராக எழுதும் கருத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் இருக்கும் சிறைக்கு, அடுத்த அறையில் நாராயணி என்ற பெண் கைதி இருக்கிறார். இவர்களுக்கு இடையே அரும்பும் காதல்தான் […]

Read more

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு, ஐ. ஜோப் தாமஸ், காலச்சுவடு, பக். 264, விலை 475ரூ. கலை வரலாற்றை ஆவணப்படுத்த முடியும் நம் வரலாற்றை நாம் தெரிந்து வைத்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட, மேலைநாட்டு வரலாற்றை ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்திய கலை குறித்த ஆய்வு ஆவணங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழக மண்ணில் இதுவரை ஓவியங்கள், கலை செய்லபாடுகள் பற்றிய […]

Read more

நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய். ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. ரசிகர்கள் பார்வையில், சிவாஜியை பார்ப்பது ஒரு பரிமாணம். அவரை சந்தித்தவர்கள் பார்வையில் அவரை பார்ப்பது, வேறொரு பரிமாணம். அவருடன் நெருங்கி பழகிய குடும்ப நண்பர், சிவாஜியுடன், 33 படங்களில் நடித்தவர் என்ற முறையில் நூலாசிரியரின் எழுத்தில் நாம் பார்க்கும், சிவாஜியோ, முப்பரிமாணமாக, மனதுள் விரிகிறார். பொதுவாக சிவாஜியின் நடிப்பை வியந்திருக்கும் ரசிகர்களுக்கு, அவர் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களையும், மேதைமைகளையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூலாசிரியர் விவரிக்கையில், அட, ஆமாம்ல […]

Read more

சிந்தனைச் சுரங்கம்

சிந்தனைச் சுரங்கம் (முதல் பாகம்), கா. திரவியம், பூம்புகார் பதிப்பகம், பக். 432, விலை 425ரூ. தமிழக முன்னாள் தலைமை செயலர் அமரர் கா. திரவியம் இ.ஆ.ப. நான்கு தொகுதிகளாக எழுதி வெளிவந்த சிந்தனை சுரங்கம் என்ற நூலின் முதல் பாகம் மட்டும், தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது. மேலைநாட்டு, இந்திய நாட்டு அறிஞர்கள், தமிழ் இலக்கியங்கள், பழமொழிகள் என, சிந்தனைகளின் அகர வரிசைத் தொகுப்பு, பொருளகராதியுடன் வெளிவந்துள்ளது. சிறப்பான சிந்தனைகளின் தொகுப்பு. எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளது, ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் புலமைக்கு எடுத்துக்காட்டு. […]

Read more

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ. ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழா கட்டுரைகள் தொகுப்பு நூல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 576, விலை 560ரூ. முதல் முன்னோடி நூல்; புதுவரவு தமிழியியலின் பல்வேறு பொருண்மைகளின் சங்கமே, இந்த நூல். சென்னை பல்கலை பேராசிரியர் வீ. அரசிடம், ஆய்வு செய்த, பல ஆய்வாளர்களது பல்வேறு ஆய்வு பொருண்மை குறித்த, 85 கட்டுரைகளும், பேராசிரியரது தன் விவரக் குறிப்பு குறித்த ஒரு கட்டுரையும் ஆக, 86 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், இக்கால இலக்கியம், […]

Read more

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும், தி ஓல்ட் மேன் அண்டு தி சீ, எர்னெஸ்ட் ஹெமிங்க்வே, தமிழில் எம்.எஸ்., காலச்சுவடு பதிப்பகம். எர்னெஸ்ட் ஹெமிங்க்வே ஆங்கிலத்தில் எழுதிய தி ஓல்ட் மேன் அண்டு தி சீ என்ற நாவலை தமிழில், கிழவனும் கடலும் என்ற பெயரில் எம். எஸ். மொழிபெயர்த்து உள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நோபல் பரிசு பெற்ற நாவல், சினிமாவாகவும் வந்துள்ளது. சமீபத்தில் இந்த நாவலை படித்தேன். ஈராக் அதிபர் சதாம் உசேன் சிறைப்பட்டு இருந்தபோது, கடைசி ஆசை என்ன என சிறை […]

Read more

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

ஜெயகாந்தனின் சிறுகதைகள், மீனாட்சி புத்தக நிலையம். சிறுகதையில் சாதித்தவர் ஜெயகாந்தன் மறைந்த எழுத்து சிற்பி ஜெயகாந்தனின் சிறுகதைகள் பலவற்றை திரும்பத் திரும்ப படிக்கிறேன். அவற்றில் சிலவற்றை சமீபத்தில் படித்தேன். மீனாட்சி புத்தக நிலையம் அந்த நூல்களை வெளியிட்டுள்ளது. பெண் விடுதலைக்காக, கவிதைகள் மூலம் போராடினார் பாரதி; சிறுகதைகள் மூலம் சாதித்தார் ஜெயகாந்தன். அவரது எழுத்து நடை, காட்சிப்படுத்தும் முறை, சம்பவங்களை சினிமா பார்ப்பது போல காட்டும். சிறுகதையின் ஒவ்வொரு நிகழ்வும் கதையின் பாத்திரங்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளும், மனதில் ஆணி அடித்ததுபோல பதிந்துவிடும். சிறுகதைகள் […]

Read more

அன்புக்கு பஞ்சமில்லை

அன்புக்கு பஞ்சமில்லை, ம. வான்மதி, பாவை மதி வெளியீடு, பக். 144, விலை 120ரூ. சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்புதான் என்பதை, தன் உணர்வுப் பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஆர்ப்பையும் ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே விவரித்திருக்கிறார். மாமியார் – மருமகள் சண்டையை எப்படி கையாள்வது என்பதை, லதா என்ற தன் தோழியின் கதையை வைத்து உணர்த்தி இருக்கிறார். அதை விவரிக்க அவர் பிரயோகிக்கும் […]

Read more
1 167 168 169 170 171 240