மக்கள் கண்ட மகான்கள்

மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. (பக்தி வளர்த்த 31 ஹரிபக்த ரத்னங்கள்) இந்திய தேசத்தில் தோன்றிய மகான்கள் அனேகர். அந்த அருளாளர்களின் சதித்ரித்தை அறிவது, நம்மை நல்வழிப்படுத்தி, அறத்திலும், ஆன்மிக மேம்பாட்டிலும் நிச்சயம் உயர்த்தும். பக்தியால் மேம்பட்டு, பரமன் அருளைப் பெற்று, அற்புதங்கள் பல நிகழ்த்திய பத்ராசல ராமதாசர், கபீர்தாசர், கோராக் கும்பர், சோகாமேளர், கனகதாசர், பக்த மீராபாய், ராகவேந்திரர், புரந்தரதாசர் போன்ற 31 ஹரி பக்த சிரோன்மணிகளின் வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த […]

Read more

வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள்

வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள், அர்துர் எம்.சிசிங்கர், ஹங்டன் மிவ்லின் பதிப்பகம் அமெரிக்காவின் இடதுசாரிகள் அர்துர் எம்.சிசிங்கர் எழுதி, ஹங்டன் மிவ்லின் பதிப்பகம் வெளியிட்ட வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். அமெரிக்காவில் நிலவும் மேல்தட்டு பொருளாதாரம் – ஆயுத அரசியல் – பெரும் முதல் என்ற கொள்கையில் இருந்து மாறுபட்டு சிந்தித்தவர், கென்னடி. அவர் இடதுசாரி கொள்கையாளர் அல்லர். ஆனால் அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கையில் இருந்து மாறுபட்டதால், அந்த […]

Read more

பெரிய புராணத்தில் திருக்குறளின் தாக்கம்

பெரிய புராணத்தில் திருக்குறளின் தாக்கம், என். கே. அழகர்சாமி, கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ், பக். 252, விலை 150ரூ. சேக்கிழார் பெருமாள் தாம் எழுதிய பெரியபுராணத்தில், திருக்குறளின் தாக்கத்தால், அதன் அறக்கருத்துக்களை, அடியார்களின் வரலாற்றுடன், இரண்டற கலந்து, வழங்கியுள்ளார். பெரியபுராணம், சமய கருத்துகளை மட்டும் கூறவில்லை. சமுதாய நிலைகளையும், அரசியல் சூழ்நிலைகளையும் கூறுகிறது என்பதை, திருக்குறள் கூறும் சமுதாய, அரசியல் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார். தற்காத்து தற்கொண்டாற் பேணி என்று துவங்கும் திருக்குறளை திருநீலகண்டர் வரலாற்றுடன் ஒப்பிடுவதும் (பக். 37). மனத்துக்கண் மாசிலன் […]

Read more

பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more

புறநானூறு (பழைய உரையுடன்)

புறநானூறு (பழைய உரையுடன்), டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 806, விலை 400ரூ. சங்க இலக்கியம், எட்டுத்தொகையில் ஒன்று புறநானூறு. அதன் முதற்பதிப்பு, தமிழ்த்தாத்தா உ.வே.சா., வால், 1894ல் வெளியிடப்பட்டது. அந்த பதிப்பு, புதிய பல இணைப்புகளுடன், எட்டாவது பதிப்பாக 2014ல் வெளிவந்துள்ளது. புறநானூறு மூலம் மட்டும், புறநானூறு மூலமும் உரையுமென்று, எத்தனை எத்தனையோ பதிப்புகள், வேறு வேறு நிறுவனத்தாரால் வெளிவந்துள்ளன. பழந்தமிழகத்தின் வரலாறு, கலை, தொழில், வாணிகம், கல்வி, ஆட்சி, பழக்க வழக்கம், பண்பாடு போன்ற பலவும் புறநானூற்றில் பொதிந்து […]

Read more

நேனோ ஓர் அறிமுகம்

நேனோ ஓர் அறிமுகம், அருண் நரசிம்மன், தமிழினி, பக். 96, விலை 75ரூ. இயற்கை நிகழ்வுகளில் புதைந்திருக்கும் நேனோ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும் திருப்தியும், இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், நேனோ சார்ந்தவை. எவை நேனோ அல்லாதது என்ற […]

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், பக். 168, விலை 120ரூ. சமகால நிகழ்வுகள் குறித்த, இந்நூல் ஆசிரியரின் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையாக, 2011 செப்டம்பர் 11ம் தேதி நடந்த, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆய்வுக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. மதுரை மாவட்டம், யானைமலையை வெட்டி, கோவில் அமைக்க முயன்ற வழக்கில், இயற்கை செய்து வைத்திருக்கும் கலையைக் காட்டிலும் அழகானது வேறு எதுவுமில்லை என்கிறார் நூலாசிரியர். ஓவியர் எம்.எப். ஹூசைன் பற்றிய […]

Read more

தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி, அமுதசுரபி விக்கிரமன், இலக்கியப்பீடம், பக். 544, விலை 450ரூ. தமிழ் இலக்கிய உலகிலும் இதழியல் வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்கதோர் இதழ், அமுதசுரபி என்பது அனைவரும் ஏற்கும் ஒன்று. அதன் துவக்கால அருஞ்சாதனைகளின் முதல் தொகுப்பு நூலாக மலர்ந்துள்ளது இந்த, தமிழ்ச்சுரபி. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, அமுதசரபி ஆசிரியராகப் பணியாற்றிய விக்கிரமனே, இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார். பிஸ்ரீ,இ பெ.நா.அப்புசாமி, எஸ். வையாபுரி பிள்ளை, க.நா.சு., டாக்டர் மு.வ., தி.ஜ.ரா., மா.ராசமாணிக்கனார், க.அ. நீலகண்டசாஸ்திரி, கி.வா.ஜ., பரலி. […]

Read more

வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ. ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை சுவர்ந்திழுக்கிறார். ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின் முதல் பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார். சோவியத் யூனியன் காலத்தில், சிறையிலிருந்த கைதிகளுக்கு, ரகசியமாக சாராயம் எடுத்துச் செல்ல, காண்டம் பயன்பட்டிருக்கிறது. ஒரு சராசரி சைஸ் காண்டத்தில், 3.79 […]

Read more

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம், முருகு பாலமுருகன், ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உலகில் ஒப்பற்ற செல்வம், உடல் ஆரோக்கியம்தான். நம்மில் தினம் தினம் ஏதாவது நோய் நொடியால் அவதிப்படுவோர், அவ்வப்போது, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து குணமாவோர், எப்போதுமே பெரும் பாதிப்பு ஏதுமின்றி நல்ல ஆரோக்கியமாகவே வாழ்வோர்கள் உண்டு. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுSககு ஏற்ப நோய்களும் உண்டாகின்றன என்பது தான் இதற்கு காரணம். ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு […]

Read more
1 165 166 167 168 169 240