டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், தமிழில் பெரு. முருகன், இரா. செந்தில், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023804.html கர்த்தரின் கடைசி வாரிசு! பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியக காப்பாளரான, ஜாக் குவஸ் சோனியர், அருங்காட்சியத்தில் சுடப்படுகிறார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையிலும், பேத்தி சோபியா நெவ்யூ, ஹார்டுவேர்டு பல்கலை பேராசிரியர் ராபர்ட் லாங்டன் ஆகியோருக்காக, தனது உடலிலும், தரையிலும் சில ரகசிய குறிப்புகளை எழுதிவிட்டு இறந்துபோகிறார். அவர் விட்டுச் […]

Read more

தலைமறைவு காலம்

தலைமறைவு காலம், யவனிகா ஸ்ரீராம், நற்றிணை பதிப்பகம். விடுதலைக்கு பின் மிஞ்சியது என்ன? யவனிகா ஸ்ரீராம் எழுதிய தலைமறைவு காலம் என்ற கவிதை நூலை சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய கவிதைகள் இவை. நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் பற்றி புரியாத பலவற்றை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, இந்த கவிதை நூலாசிரியர் தலைமையில், இளம் கவிஞர்கள் செயல்படுகின்றனர். மக்கள் குவியும் பொது நிகழ்வுகள், புத்தக கண்காட்சிகளில் இவர்களின் கவியரங்க மேடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விடுதலைக்கு […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம் (அறுசமய விளக்க உரை), எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 120, விலை 80ரூ. ஆதிசங்கரரின் ஆறு சமயங்களை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விரிவாக, பாக்களாக பாடியுள்ளார். அந்த பாக்கள் சிலவற்றின் விளக்க உரையாக இந்த நூல் வெளிவந்துள்ளது. சவுரம் உள்ளிட்ட ஆறு சமயங்களுடன், குருவை சேர்த்து, சமயாதீதம் காண்கிறார் சுவாமிகள். நாகப்பாம்பின் குட்டிகள் முதலில் சூரியனிடமிருந்தே விஷம் பெறுகின்றன என்றும் (பக். 21), உருத்திரன் தேவர்கள் பட்ட துயரம் சகியாமல் கண்ணீர் விட்டதாகவும், அந்நீர் மண்ணில் விழுந்து, மரமாகி, காயாக, […]

Read more

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் (வாழ்வும் படைப்பும்), சேவியர், தோழமை வெளியீடு, பக். 184, விலை 150ரூ. பாலசந்தரைப் பல பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒரு பிலிம் மேக்கர் நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெட்டதை செய்துவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கே.பி.யே சொல்லி இருக்கிறார். பெண்களை மையப்படுத்திப் பல கதைகளைச் சொன்னவர். நடிகர்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே அவர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்தது இல்லை. அவர் தன், எழுத்தையே நம்பினார். அவர் இயக்கிய, ஏக் துஜே கேலியே இந்திப் […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024447.html சிறு பத்திரிகைகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இலக்கியத்தைக் கற்று துறைபோன பேராசிரியர்கள், தற்கால நவீன இலக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ளாதிருப்பதே ஞானம் என்று கருதிக்கொண்டிருந்தார்கள் (பக். 100). இந்தச் சூழ்நிலையில், இலக்கியத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக, முன்னோட்டமாகக் கருதுகிறவர்கள் ஒன்றுகூடி, சிறு பத்திரிகைகளைத் துவங்க நேர்ந்தது (பக். 101). என் நினைவிற்குத் தெரிந்த […]

Read more

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, இரா. ரவிக்குமார், கொங்கு மண்டல ஆய்வு மையம், பக். 368, விலை 250ரூ. மதுவை ஒழிக்க சட்டசபையில் என்ன செய்தீர்கள்? தமிழகத்தில் இன்று, மதுவுக்கு எதிரான போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. மதுவிலக்கை அமல்படுத்தியே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இத்தகைய சூழலில் வெளிவந்திருக்கும் இந்த நூல், கவனம் பெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் குறிப்பிடத் தக்கது, குடியரது இதழில், 1925, ஆக. 16ம் தேதி, ஈ.வே.ரா. எழுதி வெளியிட்ட தலையங்கம். கடந்த, 1880 – […]

Read more

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள், அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil online: http://www.nhm.in/shop/1000000002369.html இளைய சமூகத்துக்கு கலாம் விட்டு சென்றது என்ன? முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் நூலை, அவர் மறைவுக்குப் பின் மீண்டும் படித்தேன். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலின் முன்னுரையில், தமிழக மக்களுக்கு என் பிரார்த்தனை என தலைப்பிட்டு அவர் கைப்பட எழுதியுள்ளார். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பையும் ஒரு நோக்கத்துக்காகவே […]

Read more

தமிழர் வாழ்க்கையில் பூக்கள்

தமிழர் வாழ்க்கையில் பூக்கள், ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 164, விலை 125ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024479.html பத்திரிகைகளில் வெளியான, 15 கட்டுரைகளின் தொகுப்பு. பூவுக்கும், பெண்ணுக்கும் உள்ள தொடர்பு, எதற்கெடுத்தாலும் மருந்து சாப்பிடும் மனப்பான்மை, புத்தகங்களின் பயன்பாடு, நூலகம் என, பல தலைப்புளும் சிந்தனையை தூண்டும் செய்திகளை உள்ளடக்கி இருக்கின்றன. கொசுவுக்குப் பயந்து மனிதன் படும் துன்பத்தையும், சிற்றுயிர்களிடம் மனிதன் கொண்டிருந்த இரக்கத்தையும், உயிரியல் பூங்காக்களில் பார்க்க வேண்டியிருக்கும் […]

Read more

365 டேக்ஸ்

365 டேக்ஸ், ஓவியர் ஆண்டி வரோல், ஆண்டி வரோல் கண்காட்சியகம் வெளியீடு. 15 நிமிடங்கள் அனைவரும் பிரபலம் மேற்கத்திய கலாசாரத்தில் பிரபலமான ஓவியர் ஆண்டி வரோல். அவர் எழுதிய 365 டேக்ஸ் என்ற ஓவிய நாவலை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்தில் இந்த நாவலை, ஆண்டி வாரோல் கண்காட்சியகம் வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில், 1960களில் பாப் கலாசாரம் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில், அந்த ஆதிக்கத்தை உடைத்து, சாமானிய மக்களுக்கும் ஓவியத்தை கொண்டு சேர்த்தவர் ஆண்டி வாரோல். ஓவியங்கள், மேல்தட்டு மக்களுக்கு உரியவை. சாதாரண மக்கள் ஓவியத்துக்கு […]

Read more

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள், இரா. பன்னிருகை வடிவேலன், நோக்கு பதிப்பகம், பக். 62, விலை 65ரூ. தமிழ் கணினியியலில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? 1980களிலிருந்து இன்றுவரை கணிசமான முயற்சிகள் நடந்து உள்ளன. அந்த முயற்சிகளை கோடிட்டுக்காட்டி, இன்னும் செய்யப்பட வேண்டியது நிறைய இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இரா. பன்னிருகைவடிவேலன் எழுதிய இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பு. தமிழில் கணினியியல் தொடர்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பலவற்றுக்கு, இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகள் விடைகளைத் தரும். கணினியில் தமிழ், இடைமுகத் தமிழ் உள்ளீட்டு மென்பொருள்கள், திறவூற்றுத் […]

Read more
1 163 164 165 166 167 240