கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127/63, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 397, விலை 200ரூ. இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் கல்வி கற்றத் தமிழ் மொழியின் சிறப்பை, உலகம் அறியச் செய்த பெருமைக்குரியவர் தவத்திரு தனிநாயக அடிகள், அவரின் நூற்றாண்டு விழா நினைவாக வெளிவந்திருக்கிறது இந்நூல். இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகளில் பயணக் கட்டுரையான ஒன்றே உலகம் தவிர, மற்ற நான்கும் தமிழ் இலக்கியம், பண்பாடு பற்றியவை. அடிகள் தாம் மேற்கொண்ட உலகப் பயண அனுபவங்கள் குறித்துச் சொல்லியுள்ள தகவல்கள், […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ. அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர். தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார். பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ. மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக […]

Read more

மனிதனாகும் பொருளே

மனிதனாகும் பொருளே, கே.வி. புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ. ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம். கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர். எளிய தமிழ்நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார். -ஜனகன்.   —-   ஸ்ரீ […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 164, விலை 80ரூ. இந்த நூலில், 1991ல் கர்நாடகா, தமிழக எல்லைகளில் கன்னடியர்கள் ஆடிய வெறியாட்டத்தைத் தத்ரூபமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். வட்டார வழக்கும் உரையாடல்களோடு கூடிய இந்த நாவல் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமல்ல. சீரிய சிந்தனைக்கும் உரியது. -சிவா.   —-   மனிதனையும் தெய்வமாக்கும் சன்மார்க்க பெருநெறிகள், தெ. ராமநாதன், ஆர். பானுமதி, எண். 1/2, காமராஜர் தெரு, பொன்மலைப்பட்டி, திருச்சி 620004, பக். 168, விலை 50ரூ. திருவருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க […]

Read more

குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை

குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை, முனைவர் சரளா ராசகோபாலன், அன்புப் பதிப்பகம், பக். 272,விலை 170ரூ. பாவேந்தரின் புகழ்மிகு படைப்புகள், இரண்டின் ஆய்வுத் தொகுப்பாக அமைந்த அருமையான நூல் இது. வாழ்வியல் இலக்கியம், பெண்ணிலக்கியம், காதல் இலக்கியம், நான்கு தலைமுறை இலக்கியம் என்று பத்தொன்பது தலைப்புகளில், புரட்சிக் கவிஞரின் படைப்புகளில் காணப்படும் புதுமைச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு விவரிக்கிறார். பேராசிரியை சரளா ராசகோபாலன். ஆழ்ந்த புலமை, நுண்ணிய ஆய்வுடன் படைப்புகளின் கதைச் சுருக்கமும் கூறி, பாடல் வரிகளையும், ஒப்பீட்டுக்கான திருக்குறளையும் ஆங்காங்கு இடம்பெறச் […]

Read more

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும், சா. காந்தி, முகம் வெளியீடு. தமிழக மின்வெட்டின் 50 ஆண்டு வரலாற்றைத் துல்லியமான தரவுகளுடன் சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தொகுத்து வழங்குகிறது இந்த நூல். மின்மிகை மாநிலமாக விளங்கிய தமிழகத்தில், 28/11/2008ம் தேதிக்குப் பின்னர்தான் அசுர மின்வெட்டு தொடங்கியது என்று துல்லியமான தரவுகளுடன் விவரிக்கிறார் சா. காந்தி. மின்சார அரசியலின் பன்முகங்களை, அரசு மின்வாரியத்தை அழித்து தனியார் துறையினர் ஆக்கிரமிப்பதையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை சகாய விலையில் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும் நெஞ்சம் பதைபதைக்க […]

Read more
1 201 202 203 204 205 240