ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், ஜே.கே.ரோலிங், பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷங் ஹவுஸ், 42, மாளவியா நகர், போபால் 462 003, பக். 370, விலை 350ரூ. ஹாரிபாட்டர் புத்தக வரிசையில் இது இரண்டாவது. ஹாக்வாட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில், முதல் ஆண்டு படிப்பை முடித்த ஹாரி உள்ளிட்ட மாணவர்கள், விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். ஹாரி, தனது பெரியம்மா, பெட்டூனியாவின் வீட்டிற்கு செல்கிறான். விடுமுறை முடிந்து பள்ளிக்கு புறப்பட ஓரிரு நாட்கள் இருக்கும் நேரத்தில் டாபி என்ற வினோத பிராணி ஹாரியை […]

Read more

நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்

நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில், கோபாலஸ்மி ரமேஷ், சேவாலயா கசுவா கிராமம், திருநின்றவூர் அருகில், திருவள்ளூர் மாவட்டம் 602024, விலை  நன்கொடை மட்டுமே. பொதுவாக எல்லா பள்ளிகளுமே தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இன்றைய நிலையில் சேவாலயா தொண்டு நிறுவனம், கல்வியுடன் மாணவர்களக்கு இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், பொதுநலன் சார்ந்த நற்பண்புகளைப் போதித்தும் நீதிபோதனை (Moral Science) வகுப்புகளையும் பிரத்யேகமாக நடத்துகிறது. குறிப்பாக, மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற மகான்கள் கூறிய […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தளும் முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்.ஐ.ஜி., 3ம் முதன்மைச் சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ., சென்னை 68, பக். 224, விலை 200ரூ. தாமஸ் கார்லைல், 1840ல் லண்டனில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கம் இந்நூல். இதில், இளவரசர் சார்லஸ் ஆற்றிய இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவின் தமிழாக்கமும் இணைந்துள்ளது. அண்ணல் நபிகள் நாயகம் பற்றி, அப்போது பரப்பப்பட்டு வந்த வதந்திகளையும், இஸ்லாம் மார்க்கம் பற்றிய உண்மை நிலைகளையும், ஒரு கிறிஸ்தவராக இருந்து கார்லைல் ஆற்றிய […]

Read more

நாலடியார்

நாலடியார், புலியூர் கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 208,விலை 120ரூ. திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினென்கீழ்கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி, பெருமை, மானம், சுற்றந்தழால், நட்பு ஆராய்தல் முதலிய பல அதிகாரங்கள் திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் […]

Read more

நெஞ்சின் அலைகள்

நெஞ்சின் அலைகள், கவிமாமணி புதுவயல் செல்லப்பன், நல்லழகம்மை, 46, 2வது தெரு, புவனேஸ்வரி நகர், ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 200, விலை 125ரூ. புதுக்கவிதை கோலோச்சும் காலத்தில் வாழ்கின்ற மரபுக் கவிஞர் இதனைப் படைத்திருக்கிறார். தெய்வ நம்பிக்கை, தேசப்பற்று, தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆசிரியர் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். சமுதாயத்தின் குறைகளை கண்டு வேதனைப்பட்டாலும், இனி தீர்வு வரும் என்று கருதும் ஆசிரியரின் உணர்வு பாராட்டுதற்கு உரியது. அதற்கு அடையாளமாக, உழைப்பினால் கிடைக்கும் சோற்றை, உண்மையில் […]

Read more

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் கட்டுரைகள், மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை 17, பக். 288, விலை 90ரூ. நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு கிடைத்த பெருமை, அவரது நாடகம், புதினம், சிறுகதைகளுக்கும் விரிந்தன. ஆனால், கவிஞராய் அறிமுகம் ஆன பாரதியார், பாரதிதாசன் கதைகள், கட்டுரைகள் உரிய இடத்தைப் பெறவில்லை. பாரதிதாசன் சிறந்த கதாசிரியர், நாடக ஆசிரியர், இதழ் ஆசிரியர். அவரது பன்முகத்திறன்கள் இன்னமும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்கிறது, பாரதிதாசனின் […]

Read more

என்மகஜெ

என்மகஜெ, மலையாளத்தில் அம்பிகாசுதன் மாங்காடு, தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 288, விலை 200ரூ. மலையாளச் சூழலியல் நாவல். மனச்சாட்சியை, அதிர வைக்கும் படைப்பு என்ற எச்சரிக்கை அறிவிப்புடன் ஆரம்பிக்கும், நாவலின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் படித்து செல்லுகையில், ஒரு மிகச் சிறந்த, தரமான புதினத்தைப் படித்து முடித்த நிறைவுடன், கண்களை மூடி சிந்திக்க ஆரம்பிக்கிறோம். பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களையும், நாசகார அறிவியல் வன்புணர்ச்சி செய்து கொண்டேயிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை என்ற துணிச்சலில் கைபேசிக் கோபுரங்களினால், குருவி இனத்தை டைனோஸருடன் சேர்த்து, அருங்காட்சியில் […]

Read more

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்

மனதெனும் குரங்கை வெல்லுங்கள், ஆனந்த் பட்கர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ2, ஷாஷ் சேம்பர்ஸ், 7ஏ, சர் பிரோஸ்ஷா மேத்தா ரோடு, போர்ட், மும்பை 4000001, பக். 288, விலை 350ரூ. அனேகமாய் எல்லா அறிஞர்களும், மனித மனம் ஒரு குரங்கு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நொடிக்கு நொடி கிளைக்கு கிளை தாவும் குரங்கைப்போல், அலைபாயும் மனதை ஒரு முகப்படுத்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்பது, எளிதான காரியமல்ல, எனினும் முயன்று அரும்பாடு பட்டு வென்றவர்களும் உண்டு. இந்நூலாசிரியர் ஐந்து தலைப்புகளில் மனதை […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், சாதத் ஹசன் மண்ட்டோ, தொகுப்பும் மொழி பெயர்ப்பும், உதயசங்கர்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 174, விலை 145ரூ. உருது மொழி இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோவின் 13 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கொளுத்தப்பட்ட மதவெறித் தீயினால் நாடு பிரிவினைக்குள்ளானதும், அது மக்களுடைய […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ. கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற […]

Read more
1 199 200 201 202 203 240