இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக கல்லூரியில் பணிபுரிந்து, தமிழில் நிறைய எழுதி, புகழ் பெற்ற இ.பா. கட்டுரைகளின் தொகுப்பு. அவரே கூறியுள்ளதுபோல, வெங்காயத்லிருந்து வெடி குண்டுவரை என, அனைத்து விதமான விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, பின்னிப்பெடலெடுத்து எபதப்பட்டுள்ள கட்டுரைகள். சவை, சுவாரஸ்யம், காரசாரம், வம்பு என எல்லாம் அடக்கம். […]

Read more

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை, டாக்டர் சுதா சேஷய்யன், கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், பக். 660, விலை 300ரூ. அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் அன்னை லலிதா. அம்பாளை வணங்கும் பேறு, பலருக்கு கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்ட விளக்கவுரை இது. டாக்டர் சுதா சேஷய்யன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், காலம் காலமாக இந்த நாட்டில் போற்றப்படும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திற்கு சிறப்புரை எழுதியிருக்கிறார். ஸ்ரீ என்று கூறினாலே அது காலத்தோடு கற்பனை கடந்த பரம்பொருளான அன்னையைக் குறிக்கும். […]

Read more

செவ்விலக்கிய சிந்தனைப் புதையல்

செவ்விலக்கிய சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் 612901, பக். 160, விலை ரூ.150. இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது என்று சொல்லத்தக்க அளவில் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. சங்க கால மன்னர்களான கரிகாலன், நன்னன், மலையமான் பற்றிய தகவல்களும், நவிர மலை, கபிலர் குன்று, பெருமுக்கல் மலை அரிக்கமேடு ஆகிய வரலாற்றுத் தலங்களைப் பற்றிய அரிய செய்திகளும், […]

Read more

கட்டுரைக் களஞ்சியம்

கட்டுரைக் களஞ்சியம், முனைவர் மு. இளங்கோவன், வயலவெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), அரியலூர் 612 901, பக். 160, விலை 150ரூ. செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த எழுத்துக்கள் பற்றிய முதல் கட்டுரையும், இறுதிக் கட்டுரையும் அறிஞர்கள் சிந்தனைக்குரியவை. கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழில் எழுத முடியும் என்பதே உண்மை. தமிழில், எழுத்துச் சீர்திருத்தம் இனியும் வேண்டுவதில்லை. 1978ல் தமிழக அரசு செய்த மாற்றம் போதுமானது. நடைமுறையிலும் பழகிவிட்டது. இனியும் சீர்திருத்தம் […]

Read more

குடை மகுடம்

குடை மகுடம், மனோ இளங்கோ, மனோ ரஞ்சிதா பதிப்பகம், காரைக்குடி 630001, பக். 220, விலை 100ரூ. புதுக்கவிதை நூல். அதிகரித்த ஊழலை ஒழிக்க முருகனை வருமாறு அழைக்கும் கவிஞர், எந்தப் புற்றில் எந்தப்பாம்போ… முருகா உன்மயிலை ஏவிவிடு முருகா என்று அழைப்பது உட்பட பலகவிதைகள் உள்ளன.   —-   பசும்பொன் 24 காரட், கவிமுரசு கந்தசாமி, கவிமுரசு புத்தக பூங்கா, பக். 26, விலை 70ரூ வழுவழு தாளில் படத்துடன் தேவர் பெருமகனை புகழும் நூல். அதில் ஒன்று தேவரய்யா, உன் […]

Read more

விளக்கு இங்கே ஒளி எங்கே?

விளக்கு இங்கே ஒளி எங்கே?, காஞ்சி அண்ணல், மணிவாசகர் பதிப்பகம், பக். 112, விலை 40ரூ. சமுதாயப் பொறுப்பு அதிகம் கொண்ட ஆசிரியர் கற்பனை, சிந்தனை உணர்ச்சிகள் கலந்து எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் இவை. காந்திஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து எழுதிய நாடகத்தின் கருவே, நூலின் தலைப்பாக உள்ளது. பொறுமை, அன்பு, நேசம் காக்க விரும்பும் அனைவரும் படிக்கலாம்.   —-   ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை […]

Read more

துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்

துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள், முனைவர் நல்லூர் சா. சரவணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 496, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-8.html நாகை வழக்கறிஞர் என்.பி. சுப்ரமணிய சர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டு, மகாகவி சுப்ரமணிய பாரதியாரால் பார்வையிடப்பட்டு, புதுவை நா.சு.ராஜராம சர்மாவால் வெளியிடப்பட்ட (1914) நூலின் பதிப்பாக்கம் இது. உபநிஷதங்களின் சுலோகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் பணியில், முனைவர் நல்லூர் சா.சரவணனின் பங்களிப்பு அதிகம். நான்கு வேதங்களுக்குள் காணப்படும் பன்னிரு உபநிஷதங்களையும் வேதங்களின் அடிப்படையில் உள்ளடக்கி […]

Read more

சென்னை மாநகர்

சென்னை மாநகர், மா.சு.சம்பந்தன், பாரத் பதிப்பகம், விலை ரூ.125. சென்னை மாநகர் குறித்து இதுவரை, ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களை விட, சென்னையின் வரலாறு, அதன் பிரமாண்ட வளர்ச்சி, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தன்மை உடையவை. அதனால்தான், சென்னை மாநகர் குறித்து, நூல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. அந்தவகையில், இந்த நூலிலும், சென்னையின் சிறப்புகள் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளன. சென்னையை சுற்றி உள்ள பல ஊர்களின் பெருமையும், சென்னை நகரின் வளர்ச்சியும், சென்னைக்கு இந்தியாவிலும், உலகிலும் கிடைத்து உள்ள சிறப்புகளும், இந்த […]

Read more

சென்னை 1639க்கு முன் பின்

சென்னை 1639க்கு முன் பின், டாக்டர். கு. பகவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னையைப் பற்றி, அறிந்து கொள்வதில் யாருக்கும் எப்போதும் ஆர்வம்தான். சென்னை, நாட்டின் மற்ற நகரங்களுக்கு இணையாக உருவெடுத்து வருகிறது. ஆனாலும், சென்னையின் வாழ்வியல் வரலாற்றில், 1639 சிறப்பு மிகு ஆண்டு. ஏனெனில், அதுதான் சென்னை பிறந்த ஆண்டு. சின்னஞ்சிறு ஊர்களின் சிதறலாக காணப்பட்ட, சென்னைப் பட்டினத்தின் ஊர்ப்பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்துள்ளன. வடசென்னையில் நாணயத் தொழிற்சாலை உருவாக்கும் திட்டத்தின் படி, தங்க நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டடம் உருவாக்கப்பட்டது. […]

Read more

தேவாரத்தில் தொன்மம்

தேவாரத்தில் தொன்மம், முனைவர் வே. சேதுராமன், சேது பதிப்பகம், சிந்தாமணி இல்லம், 27, விஸ்வநாதன் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை ரூ1350 (நான்கு பாகங்கள்). கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரான இந்நூலாசிரியர், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இவர் தேவாரத்தில் காணப்படும் தொன்மம் குறித்து, பல ஆண்டுகள் திறனாய்வு செய்து, நான்கு பாகங்களாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பாகமும் சுமார் 400 பக்கங்களுக்கு மேலுள்ள தனித்தனி நூல்களாகும். இந்நூலின் ஆரம்பத்திலேயே தொன்மத்திற்கும், புராணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறும் ஆசிரியர், […]

Read more
1 205 206 207 208 209 240