காமராஜர் ஒரு சகாப்தம்

காமராஜர் ஒரு சகாப்தம், க. தாமோதரன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 217, விலை 130ரூ. 2011-2012ம் ஆண்டிற்கான, தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய பணிக்கான அமைப்பின், நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டுள்ளது, இந்த நூல்.  1903 முதல் 1975 வரை வாழ்ந்த காமராசரைப் பற்றி, 15 தலைப்புகளில் விவரித்துள்ளார் ஆசிரியர். அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானது காமராஜர் திட்டம். அது பற்றியும் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது மூத்த தலைவர்கள் தாம் வகிக்கும் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளை […]

Read more

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html வெங்காயத்தில் இருந்து வெடிகுண்டுவரை இந்த நூல் அனைத்து விஷயங்களையும் பேசும் எனக்குறிப்பிட்டிருப்பதுபோல், பல துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பொதுக் கட்டுரைகள், தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல் – சமூகம், நாடகம் என ஆசிரியர் சில தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரித்துத் தந்துள்ளார். […]

Read more

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள், எஸ். சாய்ராமன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 200, விலை 100ரூ. இந்நூலில் உள்ள அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும் என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. வானவரும் வாசகரும் என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. அந்தந்தக் கால மக்களின் நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் இலக்கியம் காலத்தால் அழியாமல் என்றும் நிலைபெற்றிருக்கும் […]

Read more

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், முல்லை பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-8.html மூன்று காண்டங்கள், 30 காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் 10 காதைகளையும், பற்பல வரிகளையும் இடைச்செருகல் என்று காரணம் காட்டி நீக்கி, தம் கருத்திற்கேற்றவற்றை மட்டும் 20 காதைகளாக அமைத்துப் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். வஞ்சிக்காண்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. காப்பியத்தின் சுவை மிளிரும் பகுதிகளான கானல் வரி, ஆய்ச்சிக்குரவை இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. வைதிக, சைவ, வைணவக் கருத்துகளும் அதற்கேற்பப் […]

Read more

இல்லந்தோறும் இயற்கை உணவுகள்

இல்லந்தோறும் இயற்கை உணவுகள், டாக்டர் மதுரம் சேகர், நர்மதா பதிப்பகம், பக். 336, விலை ரூ. 170. நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்றனர் நம் முன்னோர். நம் உடலுக்கு ஏற்படும் ஊறுகளிலிருந்து விடுபட பலவித இயற்கை உணவுகளை, இந்நூல் தெரிவிக்கிறது. உணவே மருந்து என்பதை இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இயற்கை உணவுகளின் வகைகளையும், சுவையூட்டும் சமைத்த உணவுகள் குறித்தும் இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. நலமுடன் இருக்க விரும்புவோர் படித்துப் பயன் அடையலாம். -டாக்டர் கலியன் சம்பத்து.     —-   […]

Read more

திருவள்ளுவர் திருவுள்ளம்

திருவள்ளுவர் திருவுள்ளம், பெருவெளிராமன், கணபதி பதிப்பகம், பக். 144. திருக்குறளில் வீடு பேறு பற்றிச் சொல்லப்படவில்லை என்னும் கருத்தை மாற்றி, ஆதிபகவானை அறிதலே வீடு பேற்றை நல்கும் என்று நூலைத் தொடங்கியுள்ளார். பாயிரம் திருவள்ளுவர் எழுதவில்லை என்ற கருத்தையும், வன்மையாக மறுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் திருவுள்ளத்தை ஊடுருவி பல குறட்பாக்களுக்கான நுண் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கிய நூல்கள், தமிழ் மற்றும் வட மொழியில் உள்ள ஆன்மிக நூல்கள் பலவற்றின் துணையும் கொண்டு, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூலறிவும், […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள்,வையவன், தாரிணி பதிப்பகம், பக். 418, விலை 450ரூ. சிறுகதை என்ற இலக்கிய முயற்சி, எதிர் காலத்தில் எங்கே இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிவந்திருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. ஆசிரியர் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தமிழ்ச் சிறுகதைகள் உலகில் தனி முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். 418 பக்கங்களில் 80 சிறுகதைகள் அடங்கிய இந்த பிரம்மாண்டமான தொகுப்பு சிறுகதைப் பிரியர்களுக்குக் கொடுத்த விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கதையுமே படித்து ரசிக்க வேண்டியவை. -மயிலை சிவா.   —- […]

Read more

அழகைத்தேடி

அழகைத்தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ. அழகான பெண்களை வயப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்து சட்டத்துக்குப் புறம்பாய் செயல்படும் ஒரு சிறு கூட்டம். அதற்குத் துணை போகும் போலீஸ், வசதியை வைத்து அழகிய பெண்ணை மடக்க நினைக்கும் ராஜாதிராஜன், அவன் வலையில் சிக்காத அழகான வயசுப் பொண்ணு சூர்யா. பலான பிசினஸ் பண்ணும் தண்டபாணி இவர்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைதான் என்றாலும், […]

Read more

வானொலி வளர்த்த தமிழ்

வானொலி வளர்த்த தமிழ், முனைவர் இளசை சுந்தரம், மீனாட்சி புத்தகம் நிலையம், பக். 150, விலை 260ரூ. காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம் என மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது. தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, […]

Read more

ஹரி கதா சக்ரவர்த்தி எம்பார் விஜயராகவாச்சாரியார்

ஹரி கதா சக்ரவர்த்தி எம்பார் விஜயராகவாச்சாரியார், சங்கர் வெங்க்ட்ராமன், 99428990839, பக். 160+16, விலை ரூ. 100. வைணவர்கள் வணங்கிப் போற்றும் உடையவர் என்ற ஸ்ரீ ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான என்பார் என்பவரின் பரம்பரையில் பிறந்தவர் ஆதலால், அந்தப் பட்டப் பெயருடன் எம்பார் விஜயராகவாச்சாரியார் என போற்றப் பெற்றார். அவருடைய வாழ்க்கை வரலாறு, சிறப்புகள், நிழற்படங்கள் முதலியவற்றை சிறப்பாகத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சங்கர். சிதம்பரத்தில் பிறந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சிரோமணி பட்டம் பெற்று, தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்று இந்தி, தெலுங்கு முதலிய […]

Read more
1 207 208 209 210 211 240