உணவே அமிர்தம் உணவே மருந்து

உணவே அமிர்தம், உணவே மருந்து, சி.எஸ். தேவ்நாத், சங்கர் பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. 40 வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயாளிகளை காண்பதே மிக அரிது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் இந்நோய்க்கான சிகிச்சைக்கு அலைவதை காண்பது எளிது. இதற்கு நாம் உட்கொள்ளும் தவறான உணவு முறையும், போதிய உழைப்பின்மையுமே காரணம். ஆக எந்தவொரு நோயும் நம்மை தாக்காமல் இருக்கவும், நமது அழகு, இளமை, ஆராக்கியம் இம்மூன்றும் நீடித்திருக்கத் தேவையான ரகசியங்களை கூறுவதுமே இந்நூலின் நோக்கம். நாம் எப்படி, எந்தவகையான உணவுகளை […]

Read more

டோக்கன் நம்பர் – 18

டோக்கன் நம்பர் – 18, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. திருச்சி மாவட்டத்தில், தனித் திறமையுடன் சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் 10பேரின் மிகச் சிறந்த சிறுகதைகள் தலா இரண்டாக மொத்தம் 20 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைகயும் ஒவ்வொரு தளத்தில் பயணிக்கின்றன. இவை கதைகள் என்பதைவிட மனித வாழ்க்கையின் எதார்த்தங்கள் என்று கூறுவது மிகைப் பொருத்தமானது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதை தொடக்கத்திலும், அவர்களைப் பற்றிய சிறப்புகள் சிறு குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கதையான […]

Read more

உலக மதங்கள்

உலக மதங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 208, விலை 175ரூ. உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி, மக்களால் அவை பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்த மதங்கள் அனைத்துமே ஒற்றுமை, அமைதி, அன்பு போன்ற நல்ல விஷயங்களை வலியுறுத்துகின்றன. தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றிருப்பதை மனிதன் நம்புகிறான். அவற்றை எடுத்துரைக்கும் இறைத்தூதர்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் கருத்துக்களை ஏற்று மனிதன் நடப்பதாலும், அம்மதங்கள் நிலைத்திருக்கின்றன. அந்த வகையில், இந்நூலாசிரியர் இவ்வுலகிலுள்ள முக்கிய மதங்களைப் பற்றியும், அவை எப்படி, யாரால், எப்போது, எதற்காக தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவற்றின் […]

Read more

காந்தி எனும் மனிதர்

காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதய இலக்கியப் பண்ணை, பக். 144, விலை 100ரூ. இந்நூலாசிரியர், லண்டனைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஹென்றி போலக் தென்னாஃபிரிக்காவில் காந்தி ஜியுடன் பல ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து, தென்னாஃபிரிக்க வாழ் இந்தியர்களுக்காகப் போராடியவர். இந்தியாவிலும் காந்திஜியுடன் இருந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றவர். இந்நூலாசிரியர் காந்திஜி மீது அளவிலா நேசம் கெண்டவர். ஆனாலும், காந்திஜியின் சில செயல்பாடுகள் குறித்து, தனக்கு தோன்றிய விமர்சனக் கருத்துகளையும் நேருக்கு நேர் கேட்டு வாதம் செய்தவர். இந்நூலாசிரியருக்கும், காந்திஜிக்கும் […]

Read more

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 110ரூ. யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியிடம் பயிற்சி பெற்ற இந்நூலாசிரியர் 75 வயதைக் கடந்தவர். இவர் குண்டலினித் தியானம், முத்ரைகள், ஆசனங்கள், யோகா, புத்தகங்கள் போன்றவற்றில் மிகுந்த அனுபவம் பெற்று, அவற்றை பலருக்கும் கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்நூலில் யோகா மற்றும் ஆசனங்கள் குறித்து 18 அத்தியாயங்களை எழுதியுள்ளார். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தியானங்கள் குறித்தும், அவற்றுக்கான முன்னெச்சரிக்கைகள், இவை குறித்து எழும் பல்வேறு சந்தேகங்கள், தியானத்தை, […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 424, விலை 250ரூ. கல்கண்டு பத்திரிகையின் நிறுவனரான இந்நூலாசிரியர், 1960-80களில் அரசியல், ஆன்மிகம், சமூகம், மருத்துவம், பொருளாதாரம், வரலாறு என்று பல்வேறு துறைகள் குறித்தும் விவரித்து எழுதும் ஆற்றல் மிக்கவர். தவிர, இவர் எழுதிய ‘சங்கர்லால் துப்பறியும் மர்மநாவல்கள்’ பெரியோர் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவை. அந்த வகையில், அன்றைய தலைமுறையினருக்கு மறைந்த இந்நூலாசிரியர் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள் படி, இன்றைய தலைமுறையினருக்கும் பயன்தரக்கூடியவையே. இதில் 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அவரது மகன் […]

Read more

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம், தொகுப்பாசிரியர் சுப்பு, விஜயபாரதம் பதிப்பகம், பக். 501, விலை 200ரூ. திராவிடக் கட்சிகளை விமர்சிக்கும் ‘திராவிட மாயை – ஒரு பார்வை’ என்ற நூலை எழுதிய இந்நூலின் தொகுப்பாசிரியர், தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர். இவர், சிறப்புமிக்க இலக்கணங்களையும், எண்ணற்ற இலக்கியங்களையும் கொண்ட செம்மொழியாகிய தமிழின் முக்கிய கருத்துக்களைத் திரட்டி இந்நூலில் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் கதாசிரியர்கள், தமிழ் இலக்கியவாதிகள்… என்று 108பேரின் கருத்துக்கள் இந்நூலில் பதிவாகியுள்ளது. சுகி.சிவம் […]

Read more

நபி வழி அறிவோமா?

நபி வழி அறிவோமா?, திருமதி வசந்தகுமாரி செல்லையா, திருமதி வசந்தகுமாரி வெளியீடு, பக். 433, விலை 280ரூ. இந்நூலாசிரியர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், எழுத்தாளருமாவார். இவர் தன் மகன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறியதால், இஸ்லாம் குறித்து அறியும் விதமாக அது குறித்த நூல்களை ஆழமாக படிக்க, அதன் விளைவாக உருவானதே இந்நூல். இஸ்லாமிய மார்க்க அறிஞரைப் போல் மிக நுட்பமாக நபிகள் நாயகத்தையும், அவரது தூதுத்துவத்தையும் இஸ்லாமியை சித்தாந்தங்களுடன் இந்நூலில் விளக்கியுள்ளது – படிப்பவர்களை வியக்க வைக்கிறது. இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டது. […]

Read more

திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும்

திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும், ஆர்.பி.வி.எஸ். மணின், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 100ரூ. விச்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநிலத் தலைவரான இந்நூலாசிரியர், ஹிந்து சமயம் மற்றும் அதன் தத்துவங்களைக் குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளார். அந்த வகையில், இந்நூலில் ஆலய வழிபாட்டின் அவசியம், ஆலய வடிவமைப்பின் தத்துவம், உத்ஸவங்களால் ஏற்படும் பலன்கள், விக்ரஹ ஆராதனை செய்வதன் தாத்பர்யம், விஷ்ணு கோயில்களில் வழிபாடு செய்யும் முறை, கும்பாபிஷேகம் செய்வதன் உள்ளார்ந்த பொருள், ஆலயங்களில் வழிபடுபடுபவர்கள் செய்யத் தக்கது, செய்யத் தகாதது… […]

Read more

சிவமூர்த்திகள் 64

சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு M. மணி, சங்கர் பதிப்பகம் வெளியீடு, பக். 408, விலை 250ரூ. சைவம், சாக்தம் ஆகிய இரு சித்தாந்தகளிலும் பரம்பொருளை நிராகார ரூபமற்ற நிலை, அருவுருவ நிலை, ரூபமுள்ள நிலை – என்ற மூன்ற நைலகளிலும் தியானிப்பதாக ஹிந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் லிங்க வடிவ வழிபாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ரூபமற்ற அருவுருவமாக பரம்பொருள் இருந்தாலும், உருவ அம்சத்தில் சிவலிங்கம் இருப்பதால், அதனையே மூலமாக வைத்து 64 வடிவங்களில் மூர்த்திகள் உருவானதாக ‘சிவபராக்கிரம்’ என்கிற வடமொழி நூல் […]

Read more
1 6 7 8 9 10 21