கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 416, விலை 330ரூ. தமிழக அரசின் அனைத்து துறைகள் குறித்து முழு விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி, வெளிநாட்டு கல்வி வழிகாட்டி என்று மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளவர் இந்நூலாசிரியர். அதே முறையில் இந்நூலையும் உருவாக்கியுள்ளார். ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு உள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றே, ஒரு கிராமத்தை […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ. வரலாற்றுப் பேராசிரியரும், மாவீரன் நேதாஜி கல்வி நிறுவனங்களின் தலைவருமான இந்நூலாசிரியர், நல்லவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார். இன்றைய அரசியலில் சுயநலம், சந்தர்ப்பவாதம், ஊழல், வன்முறை போன்றவை தலைவிரித்தாடும் நிலையில், நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டால் நாடு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதோடு, சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிவிடும் என்று கூறும் ஆசிரியர், நல்ல தலைமைக்கு எடுத்துக்காட்டாக நான்கு தலைவர்களைப் […]

Read more

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழ் ஆதிமொழி என்று சுவாமி விவேகானந்தரும், திருக்குறளே என் வழிகாட்டி என்று ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாயும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் தமிழ் வாசகம் ஐ.நா.சபையின் முகப்பிலும்… இப்படி மாற்றாரும் மதித்துப் போற்றும் பெருமைகளைக் கொண்டது தமிழ். ஆனால் தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலம் பேசும் இன்றைய தலைமுறையினருக்கு தமிழின் சிறப்புகள் சிறிதும் தெரியவில்லை என்று ஆதங்கப்படும் இந்நூலாசிரியர், அவற்றை இந்நூலில் உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். […]

Read more

தித்திப்பான தொகுப்புமுனைகள்

தித்திப்பான தொகுப்புமுனைகள், தொகுப்பாசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், புத்தொளிப் பதிப்பகம், பக். 168,விலை 80ரூ. ஒருவர் ஒரு மத நம்பிக்கையில் ஆழமான பிடிப்பில் இருக்கையில், ஏதோ ஒரு திருப்பு முனையால் வேறொரு மதச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்படும்போது, அவருக்கு ஒரு சிந்தனை மாற்றம் நிகழ்ந்து, மதமாற்றம் ஏற்படுகிறது. இதுவே இயற்கையானது. நிலையானது. மற்றபடி உலக ஆதாயங்களைக் காட்டி, மூளைச்சலவை செய்து ஏற்படும் மதமாற்றம் செயற்கையானது. நிலையற்றது என்கிறார் இந்நூலாசிரியர். பேராசிரியர், சட்டமன்ற உறுப்பினர், ஆன்மிகம், அரசியல், பேச்சு, எழுத்து, சமூகநலன்… என்று பல தளங்களிலே பயணிக்கும் இந்நூலாசிரியர், மாற்று […]

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தா, சுரா பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. 128 பக்கங்கள் மட்டுமே கொண்ட சித்தார்த்தா என்ற ஜெர்மானிய நாவல், 1946ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ், இந்தியாவில் கேரள மாநில சர்ச் ஒன்றில் பணியாற்றிய பாதிரியாரின் பேரன். இது புத்தரின் போதனைகளையும், இந்திய கலாசாரத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட நாவல். இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தன் பிராமண குடும்பத்தில் பிறந்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டாலும், அவன் மனம் […]

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீ மகாதேவன், சூர்யா கம்யூனிகேஷன், சென்னை, பக். 70, விலை 50ரூ. ஆரோக்கியமுள்ள எவரும் முற்றிய நிலையிலுள்ள புற்று நோயாளி ஒருவருடன் ஒருநாள் துணைக்கு இருந்தாலே போதும் – அவருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். அந்தளவுக்கு உடலாலும், மனதாலும், அந்நோயாளி படும் வேதனை, கடின மனம் கெண்டவர்களையும்கூடக் கலங்கச் செய்துவிடும். இது தொற்றுநோய் வகையைச் சார்ந்தது அல்ல. என்றாலும், சொந்தக் குடும்பத்தினரேகூட இவர்களின் சீழ் வடியும் கட்டிகளைக் கண்டு அருவருப்பு அடைந்து அருகில் வர மாட்டார்கள். இத்தகைய புற்றுநோயாளிகளுக்கு அடைக்கலம் […]

Read more

தேசம் மறந்த ஆளுமைகள்

தேசம் மறந்த ஆளுமைகள், ராபியா குமாரன், தூண்டில் பதிப்பகம், திருச்சி, விலை 100ரூ. 200 ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, எத்தனை தியாகங்களைப் புரிந்து இந்த சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக முஸ்லிம்கள் இப்போராட்டத்திற்கு எப்படி முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதைப் புள்ளி விபரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ‘தேசம் மறைந்த அரசர்’ என்ற முதல் கட்டுரையில் இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பஹதூர் ஷாவும், அவரது குடும்பத்தினரும் 1850-களில் ஆங்கிலேயரால் எப்படியெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்திகள் […]

Read more

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள்

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள், முனைவர் பி. சாந்தன், மணிமேகலைப் பிரசரம், பக். 288, விலை 120ரூ. மனிதர்கள் உள்பட பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழத் தேவை பிராணவாயு. இதைத் தருவது பச்சையம் உள்ள மரங்களே. எனவே, ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தாவர வளத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், சுமார் 1000 வகையான தாவரச் சிற்றினங்களை கண்டறிந்துள்ளதோடு, மூலிகைப் பண்ணை, உலர் […]

Read more

காமராஜ் புதிரா? புதையலா

காமராஜ் புதிரா? புதையலா, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், விருதுநகர், பக். 192, விலை 70ரூ. வட மாநிலங்களை விட கல்வி, தொழில் வளர்ச்சி, அணைக்கட்டு, மின்சாரம் என்று பல்வேறு துறைகளில் தமிழகம் இன்றும் முன்னிலையில் இருப்பதற்குக் காரணம், பெருந்தலைவர் காமராஜ் என்றால் அது மிகையாகாது. எளிய குடும்பத்தில் பிறந்து, பள்ளிக் கல்வி மட்டுமே கற்று, எந்தவொரு பின்னணியும் இன்றி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களுக்கு இணையாக அரசியலிலும், மக்கள் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் காமராஜ். தமிழக முதல்வராக ஒன்பது […]

Read more

இருள் நீக்கி

இருள் நீக்கி, தொகுப்பாசிரியர் ஆர். கரிகாலன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், பக். 208, விலை 95ரூ. சனாதன தர்மம் என்று கூறப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது என்றாலும், சுமார் 1500 வருடங்களுக்கு முன்தோன்றிய ஆதிசங்கரரால் இம்மதம் மறுமலர்ச்சி கண்டது. அவர் உருவாக்கிய காஞ்சி சங்கர பீடத்தின் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீஜெயந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து மதம் குறித்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு பல்வேறு சமயங்களில் அளித்த விளக்கங்களையெல்லாம், இந்நூலாசிரியர் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஹிந்து […]

Read more
1 7 8 9 10 11 21