பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள் சுவைக்க ருசிக்க 150 வகைகள்

பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள் சுவைக்க ருசிக்க 150 வகைகள், ஆதிரை வேணுகோபால், உஷா பிரசுரம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 86, விலை 80ரூ. பெரும்பாலான இல்லத்தரசிகளின் தினசரி கவலை இன்று என்ன சமைப்பது என்பதுதான். அதுவும் பள்ளிக் குழந்தைகள் இருக்கிற வீட்டில் அந்தக் கவலை இருமடங்காகிவிடும். என்னதான் பார்த்துப் பார்த்துச் சமைத்தாலும உணவை அப்படியே திரும்பக் கொண்டுவந்துவிடுகிற குழந்தைகளைப் பற்றிப் புகார் சொல்லாத அம்மாக்கள் குறைவு. அவர்களின் குறைகளுக்குத் தீர்வாக அமைந்துவிடுகிறது ஆதிரை வேணுகோபாலின் புத்தகம். பொதுவாக சமையல் புத்தகங்களில் […]

Read more

இராமாயணத் துமணிகள்

இராமாயணத் துமணிகள், ஆ.கிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 1032, விலை 495ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-7.html இந்த நூலில் வால்மீகி ராமாயணத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு, கதாபாத்திரங்களை விவரிக்கிறார் நூலாசிரியர். ராமாயண காவியத்தில் சுடர்விடும் தூமணிகளான ராமன், சீதை, லட்சுமணன், அனுமான், ராவணன், கும்பகர்ணன், தசரதன், கைகேயி, பரதன், குகன் சுக்ரீவன், விபீஷணன் என ராமாயண காவியத்தின் மிக முக்கியமான 12 கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு அந்தந்தப் பாத்திரங்களின் வழியே ராமாயணத்தை அணுகியுள்ளார். ஒவ்வொரு […]

Read more

விருந்தும் மருந்தும்

விருந்தும் மருந்தும், பேரா. இரா. மோகன், வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-522-8.html மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த நூலாசிரியர் டாக்டர் மூ.வ.வின் அன்பிற்குப் பாத்திரமானவர். ஆழமான சிந்தைகளின், வெளிப்பாடாக உள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அரசியல், ஆனமிகம், இலக்கியம், தனிமனிதர்களின் நற்குணங்கள், தொடர்பான விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லாமே வாழ்க்கைக்கும், அதனை வளப்படுத்திக் கொள்வதற்கும், வழிசொல்லும் கட்டுரைகள். […]

Read more

கிழக்கும் மேற்கும்

கிழக்கும் மேற்கும், பேராசிரியர் இளம்பிறை மணிமாறன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 150ரூ. சென்னை கம்பன் கழகம் சார்பாக இந்த வருடம் நடந்த ஏ.வி. மெய்யப் செட்டியார் நினைவுதின நிகழ்ச்சியில் கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பில் இந்நூலாசிரியர் ஆற்றிய திறனாய்வு சொற்பொழிவின் நூல் வடிவமே இது. கம்பனும், மில்டனும், பாரதியும் ஷெல்லியும் போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த திறனாய்வு நூல்கள் ஒரு சில வந்தாலும் கூட, ஒப்பிலக்கியத் திறனாய்வு என்பது இன்னமும் தமிழில் போதிய […]

Read more

தமிழருவி

தமிழருவி, தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அட்ணணாசாலை, சென்னை 2, பக். 320, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-6.html தமிழருவி மணியனின் துணிச்சலான அரசியல் விமர்சனங்கள், இந்த நூலில் காணப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால், பாதிக்கப்படுவது அந்த குடும்பத்தினர் மட்டுமே. ஆனால் அரசியலில் நுழைந்து பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுவது, நாடும், நாட்டு மக்களும்தான் என அரசியலில் உள்ள அழுக்கை கட்டுரைகளில் இவர் […]

Read more

பெயல் மணக்கும் பொழுது

பெயல் மணக்கும் பொழுது, அ. மங்கை, மாற்று. தமிழில் வெளிவந்துள்ள பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பில் மிக முக்கியமான தொகுப்பாக பெயல் மணக்கும்பொழுது அமைந்துள்ளது. ஈழ பெண் படைப்பாளிகளின் இலக்கிய பதிவுகள், முடிவுறாத போராட்டமாக தொடரும் பல நிலைப்பாடுகளையும் உணர்த்துவதாக உள்ள, இந்த தொகுப்பை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழ தமிழர்களின் வாழ்வில், பல முக்கியமான மாற்றங்களும், சிதறல்களும், அலைவுகளும் இந்த காலகட்டத்தில் இடம்பெற்றுவிட்டன. 93 கவிஞர்களின் கவிதைகள், சிக்கலான பல்வேறுமுகங்களுடைய அவலங்கள் நிறைந்த, ஈழ வாழ்வை பாடுகின்றன. இந்த தொகுப்பிற்கு வ. […]

Read more

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1, நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 208, விலை 110ரூ. கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள், குறுந்தொகையில் உவமை நயம், கலித்தொகையில் நோக்கு, நற்றிணை நவிலும் கற்பு நெறி, சங்க இலக்கியத்தில் குந்தை, ஊடல் தணிக்கும் வாயிலாக, ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் உள்பட சங்க இலக்கியம் தொடர்பான 16 கட்டுரைகளும், திருக்குறள் உள்பட அற நூல்கள் தொடர்பான 3 கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியாரின் தனித்திறன் கட்டுரை தமிழ்ப் பெண் கவியின் கற்பனை வளம் உவமை நயம், […]

Read more

திறமைதான் நமது செல்வம்

திறமைதான் நமது செல்வம், இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 150, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-3.html வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்து கொண்டுள்ளன. ஆனால் மற்ற நூல்களில் இருந்து இந்நூல் வேறுபங்டடு இருப்பதை மறுப்பதற்கில்லை, நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளிய முறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. இல்லறம் நல்லறம் ஆவது எப்போது? என்று முதல் கட்டுரையில் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல கேள்வி […]

Read more

மரபு

மரபு, இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான், இளம்பிறை பதிப்பகம், பக். 126, விலை 90ரூ. நூலாசிரியர் எழுதியுள்ள முப்பது உருவக் கதைகளின் தொகுப்பு இந்த நூல். இவை பெரும்பாலும் மரபு வழியில் அமைந்துள்ள தத்துவ உருவாக்கம். மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. -சிவா. நன்றி: தினமலர், 18/8/2013   —-   ஜன கண மன, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 60ரூ. காந்திஜியை கொல்வதற்கு கோட்சே கும்பல் முதலில் முயன்று தோற்றது, பின் வெற்றி பெற்று இறுதியில் காந்திஜியைக் கொன்றது. இன்று எல்லாருக்கும் […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-4.html ஷாஜஹானின் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் அந்தப்புரத்தின் தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் இரண்டு இளவரசிகளின் போராட்டம் பற்றிய 17ஆம் நூற்றாண்டின் வரலாற்று புதினம். சக்கரவர்த்தி ஷாஜஹான், தன் காதல் மனைவி மும்தாஜின் நினைவாக நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சமாதியின் (தாஜ்மகால்) பின்னணியில், சக்கரவர்த்தியின் புதல்விகள் ஜஹனாராவும், ரோஷனாராவும் எல்லாவற்றிற்கும் போட்டியிடுகின்றனர். அந்தப்புரத்தின் ஆட்சி, சாம்ராஜ்யத்தின் எதிர்காலம், […]

Read more
1 18 19 20 21 22