இந்திய நேரம் 2 A.M

இந்திய நேரம் 2 A.M., பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 168, விலை 125ரூ. பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஸ்வர்ணா. மகேந்திரனின் பர்சனல் ஸ்டெனோ. ‘ஒரு துணைக்காக ஏங்கறேன் நான். என் மனைவி என்னை விட்டுவிட்டுப் போய் 12 ஆண்டுகள் ஆகின்றன. என் மேல் அக்கறை காட்ட, அன்பு செலுத்த யாருமில்லை. பசித்தாலும் கேட்க ஆளில்லை. என் தேவைகளை நானே […]

Read more

சீதாவின் பதி

சீதாவின் பதி, யத்தனபூடி, சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 312, விலை 250ரூ. இல்லற வட்டத்திற்க வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லும் நாவல் இது. வித்யாபதி, இந்திரா ஆகியோர், ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். சூழ்நிலையால், பெற்றோர் நிச்சயித்த சீதாவை மணம்புரிகிறான் வித்யாபதி. ஆனால், வித்யாபதியால் இந்திராவை மறக்க முடியவில்லை. இந்திராவாலும் வித்யாபதியை மறக்க முடியவில்லை. சீதா, தான் கணவனின் முதல் காதலைப் பற்றி, திருமணம் ஆன அன்றே தெரிந்து […]

Read more

மன்மதன் வந்தானடி

மன்மதன் வந்தானடி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 130ரூ. ஒவ்வொரு பெண்களும் தனக்கு வரப்போகிற கணவன் பற்றி இனிய கனவு காண்கிறார்கள். அது நனவாகும்போது பிரச்சினை எதுவும் இல்லை. நேர்மாறாக அமையும்போது ஏமாற்றம், விரக்தி, குழப்பம் எல்லாம் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்தக் கதையின் நாயகி வைதேகி எடுக்கும் முடிவே கதையின் மையக்கருத்து. அதுவே தாம்பத்தியத்தில் உண்மையான வெற்றி என்பது கதை நாயகி, நவயுக பெண்களுக்கு விடுக்கும் செய்தியாகும். வசீகர நடையால் வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ. பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக […]

Read more

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள், எடையூர் சிவமதி, வானவில் புத்தகாலயம், சென்னை, பக். 304, விலை 222ரூ. புகழ்பெற்ற திருக்கோயில்கள் பற்றி அவற்றின் தொன்மை, ஆன்மிகச் சிறப்பு, வரலாறு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆன்மிகக் களஞ்சியமாக அமைந்துள்ளது இந்த நூல். சித்தர்களின் ராஜ்யமான சதுரகிரி மலையின் தெய்வங்கள், கல்விக் கடவுளான கூத்தனூர் சரஸ்வதி ஆலய தரிசனம், துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோயில், பேட் துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தம் மனைவியரோடு வசித்த வீடுகள் பற்றிய செய்திகள் அபூர்வமானவை. அமெரிக்கா, பிட்ஸ்பெர்க் நகரில் அமைந்துள்ள […]

Read more

வல்லமைச் சிறுகதைகள்

வல்லமைச் சிறுகதைகள், பல்வேறு எழுத்தாளர்கள், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 104, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-7.html ஐக்யா டிரஸ்ட் நிறுவனமும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு. பழமை பேசியின் செவ்வந்தி, பார்வதி ராமச்சந்திரனின் நம்மில் ஒருவர், ஜெயஸ்ரீ சங்கரனின் நாலடிக் கோபுரங்கள் ஆகிய கதைகள் நல்ல கதைகள் என்றபோதிலும் வாசகன் பழகிய தடத்திலேயே நடைபோடுகின்றன. சுதாகரின் காட்சிப் பிழை வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. […]

Read more

சிலம்பின் பரல்கள்

சிலம்பின் பரல்கள், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. சிலப்பதிகாரத்திலும், சிலம்புச் செல்வரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். சிலப்பதிகார காப்பியத்தின் சுவையையும், சிறப்புகளையும், கதைச் சுருக்கத்தையும் கொண்டது இந்நூல். சிலம்பினை கற்கச் சிறந்த நூல் இது என்று பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மதிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பரலும், ஒரு தொடுக்கப்பட்ட மாலைதான். பதினாறு தலைப்புகளில் சிலப்பதிகார தோட்டத்தில் மறைந்துகிடக்கும் மனோரஞ்சித மலர்களையும் வெளிக்கொணர்கிறார் ஆசிரியர் என்று முனைவர் தி. ராசகோபாலன் பாராட்டியுள்ளார். சிலப்பதிகார காப்பியத்தில் முத்தமிழும் கொஞ்சிக் குலவுகின்ற அழகையும், […]

Read more

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம்

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம், சுந்தரி, ஐந்திணை வெளியீட்டகம், 4ஏ, 29, முகமதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம் 2, பக். 200, விலை 160ரூ. இடிந்தகரையில் நடைபெற்று வரும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பங்கேற்று, 98 நாள்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நூலாசிரியர் சுந்தரி. அவர் மீது 12 வழக்குகள். 8ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் சுந்தரிக்கு இப்போது அணுஉலை குறித்து சர்வதேச அளவிலான அறிவும் வளர்ந்திருக்கிறது. சிறையிலிருந்து பிணையில் விடுக்கப்பட்ட பிறகு, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த 50 […]

Read more

நெஞ்சில் ஒளிரும் சுடர்

நெஞ்சில் ஒளிரும் சுடர், கமலா ராமசாமி, காலச்சுவடு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-188-1.html தமிழ் இலக்கிய சூழலில் செல்லம்மா பாரதியின் நூலுக்கு பிறகு, இலக்கியவாதியான கணவரை பற்றி மனைவி எழுதிய நூல், அனேகமாக இந்த நூலாகதான் இருக்க முடியும் என தோன்றுகிறது. வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர், ஓர் ஆளுமை, நண்பர்களுக்கு மதிப்பிற்குரிய மனிதர் என்ற பல தோற்றங்களையும், உருவங்களையும் தாண்டி, கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே, தெரிந்த சு.ரா.வை இதில் காணலாம். தன் கணவர் மீது பேரன்பையும், […]

Read more
1 2