கோரா

கோரா, இரவீந்திரநாத் தாகூர், தமிழில் கா. செல்லப்பன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 704, விலை 350ரூ. புதிய இலக்கிய வகையான நாவல் இந்தியாவில் அறிமுகமானபோது எழுதப்பட்ட ஆரம்பகாலப் புதினங்களுள் ரவீந்திரரின் கோராவுக்கு (1909) முக்கிய இடமுண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான பெரும்பாலான இலக்கியப் படைப்புகளைப் போலவே, ரவீந்திரரின் புதினத்திலும் சமூக அக்கறையும் தேசிய விழிப்புணர்வும் மிளிர்கின்றன. நாடு – உலகம், சாதி – மதம், ஆண் – பெண் உறவுகள், முற்போக்கு – பிற்போக்கு எனப் பலதரப்பட்ட வாழ்வின் அடிப்படை அடையாளச் […]

Read more

ஸ்ரீஹரிவம்சம்

ஸ்ரீஹரிவம்சம், எல்.லக்ஷ்மி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை, பக். 320, விலை 250ரூ. வைசம்பாயனரிடமிருந்து மகாபாரதத்தின் 18 பர்வங்களையும் பாராயணம் (ஸ்ரவணம்) செய்த பிறகு ஜனமேஜமன்னன், பரமாத்மாவின் வம்சத்தில் வந்த அரசர்களின் வைபவங்களைக் கேட்க ஆர்வம் எழுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் கதையை இன்னும் விஸ்தாரமாகக் கேட்க வேண்டும் என்ற தாகம் எழுகிறது. கருணை புரிந்து அவற்றைச் சொல்ல வேண்டும் என்று அவரைக் கேட்க, வைசம்பாயனர் ஸ்ரீஹரியின் வம்சத்தில் வந்த ராஜாக்களின் வரலாறுகளைக் கூறத் தொடங்குகிறார். மகாபாரதத்தின் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களுடன் ஹரிவம்ஸ பர்வம், விஷ்ணு பர்வம், […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், சீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 282, விலை 165ரூ. இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வர். குக்கிராமங்களிலும் கூட இயற்கை விவசாயத்தை எடுத்துச் சென்ற அவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் என மண்ணைக் கொல்லும் நஞ்சுகளை எதிர்த்துப் போராடியவர். மண்ணுக்கேற்ற பயிர் ரகங்களைப் பயிர் செய்வது குறித்தும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்தும் இந்நூலில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேம்பு […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள், சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் பல்வேறு போராட்ட வடிவங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டது. அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட இசைப்பாடல்களும் பாடப்பட்டன. ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிரான – தேசிய இயக்கத்துக்கு ஆதரவான பாடல்களைப் பாடிய போராட்ட வீரர்களின் வரலாற்றைச் சொல்வதே இந்நூல். குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ, ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ என்று வள்ளலார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாடியது, 1922ஆம் ஆண்டு […]

Read more

திருக்குர்ஆனின் பாதையில்

திருக்குர்ஆனின் பாதையில், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 100ரூ. திருக்குர் ஆன் ஓர் அறிவுக் கருவூலம். அருள் சுரக்கும் பெட்டகம். மனிதகுலம் முழுமைக்குமான சொத்து. அதை ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிக்கக் கூடாது. அதை ஓதுவது ஒரு வகையான ஆன்மிக தியானம். அதை எந்த முறையில், எந்த நோக்கத்துடன் ஓதுகிறார்களோ அந்தளவுக்கு பயன் கிடைக்கும். திருக்குர்ஆனை எப்படி ஓத வேண்டும்? அதை ஓதுவதற்கு அடிப்படை முன் நிபந்தனைகள் என்ன? ஓதுவதன் விதிமுறைகள் என்னென்ன? கூட்டாக ஓதுவதன் தேவை என்ன? என்பன போன்ற தலைப்புகளில் […]

Read more

திருவருட்பா

திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருஅருட்பா எளியவுரை, ஆறு திருமுறைகள் மற்றும் திருவருட்பா உரைநடை, புலவர் அடியன் மணிவாசகன், முதல் திருமுறை, பக். 760, விலை 400ரூ, இரண்டாம் திருமுறை, பக். 715, விலை 360ரூ, மூன்று – நான்காம் திருமுறைகள், பக். 352, விலை 200ரூ, ஐந்தாம் திருமுறை, பக். 560, விலை 280ரூ, ஆறாம் திருமுறை, தொகுதி 1, பக். 947, விலை 480ரூ, ஆறாம் திருமுறை தொகுதி 2, பக். 1122, விலை 550ரூ, திவட்பா உரை […]

Read more

இப்படிக்கு அன்புடன் – ஆனந்தியின் கடிதங்கள்

இப்படிக்கு அன்புடன் (ஆனந்தி கடிதங்கள், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக். 422, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024686.html அமரர் கல்கியின் புதல்வி ஆனந்தி ராமசந்திரன் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்களின் தொகுப்பு. தாயார் ருக்மணி அம்மாள், குஞ்சக்கா என்று பிரயமுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்., சதாசிவம், கணவர் ராமசந்திரன், உறவினர்கள், இளைய தலைமுறையினருக்கும் பிறருக்கும் ஆனந்தி எழுதிய கடிதங்கள் பயணம் செய்த இடங்களைப் பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியிருப்பது இந்நூலைப் பயண இலக்கியமாகவும் மிளிர வழி […]

Read more

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக். 264, விலை 140ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022419.html இன்றைய தலைமுறை நம் முன்னோர்களைப் பற்றியும் அவர்களது சாதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு உதவும் நூல். குழந்தைகளின் மனதில் எப்போதும் முன்னோர்களைப் பற்றிய தாழ்வான எண்ணங்களை விதைத்துக்கொண்டே இருந்தால், அவர்கள் தங்கள் முன்னோர்களின் மீது மரியாதை இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி, தாங்களும் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதற்கான முயற்சிதான் […]

Read more

பனியன்

பனியன், தி.வெ. இராசேந்திரன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 304, விலை 200ரூ. பனியன் நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல். சென்னை போன்ற பெருநகரத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு எப்போதோ கிட்டிய உரிமைகள் – அரசால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டஇ.எஸ்.ஐ., பி.எஃப், பிடித்தம் செய்வது போன்றவைகூட அப்போது திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 248, விலை 120ரூ. இன்றைய நவீன உலகம் கல்வியை, மிகப் பெரிய வியாபாரப் பொருளாக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் நூல். நான்காம் வகுப்பு மாணவனுக்கு டேப்லேட் கணினி, ப்ராஜெக்ட் செய்ய ரூ. 10 ஆயிரம் செலவு, மேஜை – நாற்காலியை உடைத்துவிடாமலிருக்க ரூ. 30 ஆயிரம் பிணையத்தொகை, அரசு கட்டணத்தை அலட்சியப்படுத்தி அதைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணம், தெருமுனை மட்டுமே வந்து செல்லும் பள்ளிப் பேருந்துக்கு ரூ.16 ஆயிரம் என […]

Read more
1 119 120 121 122 123 180