ராமாயணம்

ராமாயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 275ரூ. சமஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. இதுபோல், மாறுபட்ட தகவல்களுடன் வேறு சில ராமாயணங்களும் இருக்கின்றன. பல்வேறு ராமாயணங்களையும் படித்து ஆராய்ந்த தேவி வனமாலி, கேரளாவை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து, அங்கேயே வசித்து வருகிறார். அவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூலை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை

என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 180ரூ. பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளரும், பள்ளி ஆசிரியையும், கவிஞருமான தி. பரமேசுவரி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பேத்தி. இந்தத் தொகுப்பில், அரசியல் கட்டுரைகள், சங்க இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், பெண்ணியக் கட்டுரைகள், நூல் மதிப்பீடுகள் என்று நான்கு வகையான கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்துகிறது. நூல் மதிப்பீடுகள் அவரது நடுநிலைமையை நிலைநாட்டுகிறது. பெண்ணியக் கட்டுரைகளில் அவரது ஆதங்கம் தெரிகிறிது. அரசியல் கட்டுரைகளில் அவரது ஆவேசம் புரிகிறது. […]

Read more

கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் எனது பயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுதில்லி 110002, விலை 150ரூ. கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் பக்ஷி லஷ்மண சாஸ்திரிகளும், போதல் பாதிரியாரும், ஜைனுலாப்தீனும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் சந்தித்து ஊர் நலனைப் பற்றிய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்த ஆரோக்கியமான காலங்களில் இந்தத் தேசத்தை ஆண்டு அடிமைப்படுத்தியிருந்தவர்கள் வெள்ளையர்கள்தான். ஆனால் சுதந்திர பாரதம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் அத்தகைய இணக்கமான சூழல் வெகு அரிதாகிவிட்ட அவலத்துக்குக் காரணம் சுயநல அரசியல்தான் என்பதைப் புரிந்து […]

Read more

அசுரன்

அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம், ஆனந்த் நிலகண்டன், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 395ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-247-7.html அசுரன் சொல்லும் அரசியல் கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு […]

Read more

அசுரன்

அசுரன், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பி லிட், சென்னை, விலை 395ரூ. இலங்கை அரசன் ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் வீரக் கதையை எடுத்துக் கூறுகிறது இப்புத்தகம். ராமாயணத்தில் அறியப்படாத ஒரு பழங்கதையை இந்நூல் கூறுகிறது. அசுரன் கதையில் ராவணின் மகள் சீதை. சீதை அசுரகுலத்து அரசியாக வளரவில்லை என்றாலும் அவள் அவனுடைய மகள். அவளுடைய நல்வாழ்க்கைக்காக ராவணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தவறாகப் போக, அவனது உடன்பிறப்புக்களும் மகனும் மாண்டு போகிறார்கள். இறுதியில் அவனே கொல்லப்படுகிறான். அசுரகுலம் அழிந்து போகிறது. […]

Read more

சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்

சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 295ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-227-7.html ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் […]

Read more

தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன், அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 400, விலை 300ரூ. இந்தியரின்-தமிழரின் சமூக, மதம் சார்ந்த கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முழுமையான ஆய்வு நூல் இது என்று இந்நூலில் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலில், பன்னிரெண்டு தலைப்புகளில், தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வாழ்க்கை […]

Read more

வானம் என் வாசலில்

வானம் என் வாசலில், பா. கிருஷ்ணன், பாகி எழுத்துலகம், 76, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-6.html தேடித் தேடி, சாலை, கனவுகள், விழியே போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதை சொற்கள் புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் அதனுடைய தொடர்புடைய புகைப்படமும் இடம்பெற்றிருப்பது சிறப்பாகும். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.   —– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா […]

Read more

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம், நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுடில்லி 110002, பக். 168, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-1.html முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம் மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம். தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார். தாய், தந்தையர் பாசத்தில் […]

Read more
1 2 3