ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், தொகுப்பு காந்திமதி கிருஷ்ணன், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 100ரூ. நம்பிக்கைதான் மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம். அது மட்டும் இருக்குமானால் அவனால் எல்லாக் கஷ்டங்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் மிக மோசமானவற்றையும் ஊக்கத்தை இழந்துவிடாமல், மனமுடைந்து போகமல் எதிர்த்து நிற்க முடியும். அப்படிப்பட்டவன் கடைசிவரை ஆண்மையுடன் போரிடுவான். அமைதியான அசையாத மனமும் பிராணனும் உள்ள தன்மைக்கு சமதை என்று பொருள். பிராண இயக்கங்களான கோபம், அதீத உணர்ச்சி, செருக்கு, ஆசை முதலியவை மீது […]

Read more

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசிவாரியர், தமிழில் இரா. முருகவேள், நியூ ஸ்கீம் ரோடு, பக். 272, விலை 220ரூ. தூக்கு தண்டனைகளை நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ஒருவரின் அனுபவப் பதிவுகள் தூக்கிலிடுபவரின் குறிப்புகள் என்ற பெயரில் நூலாக வந்திருக்கிறது. ஜனார்த்தனன் பிள்ளை என்பவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகத் தூக்கிலிடுபவராகப் பணியாற்றியிருக்கிறார். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் மொத்தம் 117 மனிதர்களைத் தூக்கிலிட்டிருக்கிறார் இவர் நாகர்கோவிலில் வாழ்ந்த தமிழர். திருவிதாங்கூரில் பெண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது போன்ற ஆச்சரியமளிக்கும் செய்திகளும் இந்நூலில் ஆங்காங்கே […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. தேவை ஒரு சுயமதிப்பீடு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இடதுசாரி மாத இதழான மன்த்லி ரெவ்யூ தனது முதல் ஐம்பதாண்டு காலத்தில் வெளியிட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை தொகுப்பாக வெளியிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின், சே. குவேரா, நோம் சாம்ஸ்கி என்று நன்கறியப்பட்ட ஆளுமைகளும் அமெரிக்காவின் முன்னணி இடதுசாரி அறிஞர்களும் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பை ச. சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சோஷலிசம் எதற்கு என்ற தலைப்பில் ஐன்ஸ்டின் எழுதிய கட்டுரை, கட்டற்ற […]

Read more

அவரவர் கை மணல்

அவரவர் கை மணல், ஆனந்த்-தேவதச்சன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-2.html ஒரு வாய் நீரும் ஒரு தருணமும் இன்றைக்குத் தமிழில் பல கவிதைத் தொகுப்புகள் வெளியாகின்றன. சில தொகுப்புகளுக்கு மட்டும் தனித்துவமான மொழியும் பொருளும் இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சில தொகுப்புகள் மட்டுமே புதிய போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில் 1981ல் வெளிவந்த அவரவர் கை மணல் முக்கியமானது. 80களின் தொடக்கத்தில் எழுத வந்த தேவதச்சன், ஆனந்த் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய […]

Read more

நடன மங்கை

நடன மங்கை, சுரேஷ் குமார் இந்திரஜித், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-3.html தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான சுரேஷ்குமார் இந்திரஜித்தின் சமீபத்திய சிறு கதைத் தொகுப்பு நடன மங்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் சுரேஷ் சென்ற ஒரு வருடத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மௌனியை ஒத்த விவரிப்பு மொழியைக் கொண்டவை சுரேஷின் கதைகள். அதே சமயம் மௌனியின் உலகத்தையும் தாண்டி எழும் இவரது எழுத்துக்கள் […]

Read more

மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது மோதாமல் கடைசி வினாடியில் தவிர்த்த அதிர்ச்சி […]

Read more

பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ. சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை […]

Read more

நாவல் இலக்கியம்

நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]

Read more
1 6 7 8