சினிமா பத்திரிகையாளர் சங்கம் 60ஆம் ஆண்டு சிறப்பு மலர்

சினிமா பத்திரிகையாளர் சங்கம் 60ஆம் ஆண்டு சிறப்பு மலர், சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை, விலை 200ரூ. சென்னையில் உள்ள சினிமா பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்ற. அதையொட்டி சிறப்பு மலர் வெளியிட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள் பற்றிய சுவையான தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் படம் தயாரித்த முதல் தமிழர் நடராஜ முதலியாரை டைரக்டர் ஸ்ரீதர் பேட்டி கண்டு எழுதிய கட்டுரை, தமிழ் நாட்டின் முதல் சினிமா பத்திரிகையான சினிமா உலகம் […]

Read more

அளவீடற்ற மனம்

அளவீடற்ற மனம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. தத்துவ மேதை ஜே. கிருஷ்ண மூர்த்தி டெல்லி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் அக்டோபர் 1982 – ஜனவரி 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு. அவரது ஆங்கில உரையைத் தமிழில் எம்.ராஜேஸ்வரி மொழிபெயர்த்துள்ளார். குழப்பத்திற்கான அடிப்படைக் காரணம், ஒழுங்கின்மை என்றால் என்ன? துக்கத்தைப் போக்குவது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான பாணியில் பதில் சொல்கிறார். மேலும் நெஞ்சத்துள் இருக்கும் மனம் எனும் அருமையான கண்ணோட்டத்தையும் அவர் நமக்கு […]

Read more

யட்சன்

யட்சன், சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இரு இளைஞர்கள். அவர்கள் கனவுகள் வேறு, இலக்குகள் வேறு. ஒருவன் சாதுவானவன். குடும்பம் உள்ளவன். இன்னொருவன் முரட்டுத்தனமானவன். தனிமை விரும்பி அவர்கள் இருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காக புறப்படும்போது வாகனங்கள் மாறிவிட்டால்? அது அவர்களது கனவுகளை, இலக்குகளை, வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்னவாகும் என்பதை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் யட்சன். எழுத்தாளர்கள் சுபா எழுதிய இந்தக் கதை திரைப்படமானது. மூலக்கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் யட்சன் திரைப்பட ஸ்டில்கள் வண்ணப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

சேதுபதியின் சேவைக்காரன்

சேதுபதியின் சேவைக்காரன், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ராமநாதபுரம் என்ற சேது சீமையை ஆண்டவர்கள் சேதுபதிகள். அவர்கள் வரலாற்றில் நடந்த போதைக் களமாகக் கொண்டு இந்த நாவலை க.மனோகரன் எழுதியுள்ளார். சடையக்கத்தேவர் காலத்தில் மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் படைகள் ராமநாதபுரத்தைத் தாக்கும்போது நடக்கும் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அதே மதுரையை மைசூர் தளபதி முற்றுகையிட்டபோது, சேதுபதி விஜய ரெகுநாத தேவரின் உதவியை திருமலை நாயக்கரின் நாடினான். அதன் விளைவாக நடந்த மூக்கறுப்பு போர் வரை கதை நீள்கிறது. சேதுபதி மன்னர்கள் மாவீரர்களாகத் […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் பெறமுடியும் என்று கருதினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் நேதாஜி வெற்றி பெற, காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீத்தா ராமையா தோல்வி அடைந்தார். பட்டாபியின் தோல்வி, என் தோல்வி என்று காந்தி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து காந்திக்கும், நேதாஜிக்கும் நடந்த கடிதப் […]

Read more

வைரமுத்து சிறுகதைகள்

வைரமுத்து சிறுகதைகள், கவிஞர் வைரமுத்து, சூர்யா வெளியீடு, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025177.html கவிதைகளிலும், திரைப்படப் பாடல்களிலும் சிகரம் தொட்ட கவிப்பேரரசு வைரமுத்து, இப்போது சிறுகதை உலகிலும் தடம் பதித்து, வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். இதில் உள்ள 40 கதைகளையும் படிக்கும் எவருக்கும், கற்பனைக் கதைகளைப் படிக்கும் உணர்வு ஏற்படாது. ஏதோ ஒரு கட்டத்தில் நிகழ்ந்த அல்லது கேள்விப்பட்ட சம்பவங்களே நினைவுக்கு வரும். சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன், தன் வாழநாள் முழுவதும் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மீண்டும் வரலாம் புன்ட்ஜில் கடவுள் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியமாகவே வலம் வருகிற பழங்கதைகள் சொல்லாமல் சொல்லி விளங்கவைக்கும் சிந்தனைகள் ஆழமானவை. இவற்றைப் புரிந்துகொள்ளவும் தனிப்பட்ட திறமை வேண்டும். அதுவும் ஆதிவாசிப் பழங்குடியினரிடையே உலவும் கதைகள் என்றால் அவற்றின் மதிப்பே தனி. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அபாரிஜின் என்னும் ஆதிவாசிப் பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்கள் என்றும், இவர்கள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலிருந்து சென்று குடியேறிய கற்கால மனிதர்களின் வழித் தோன்றல்கள் என்றும் […]

Read more
1 9 10 11