மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

என் ஆசிரியப்பிரான்

என் ஆசிரியப்பிரான், எசென்சியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, விலை 145ரூ. ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பல இலக்கியங்கள் அழிந்துபோகாமல் காத்த பெருமை உ.வே. சாமிநாதய்யருக்கு உண்டு. கிராமம் கிராமமாக அலைந்து திரிந்து, ஓலைச்சுவடிகளை தேடிக்கண்டுபிடித்து அச்சடித்து வெளியிட்டார். அவர் இப்படி ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சிடாமல் இருந்தால், பல சுவடிகள் அழிந்து போயிருக்கும். உ.வே.சாமிநாதய்யரின் சேவைகளையும், பெருமைகளையும் அவருடைய மாணவரும், கலைமகள்இலக்கிய இதழின் முன்னாள் ஆசிரியருமான கி.வா.ஜகந்நாதன் இந்நூலில் எழுதியுள்ளார். அத்துடன் இலக்கியம் பற்றியும், புலவர்கள் பற்றியும் பல அரிய செய்திகள் இந்நூலில் நிறைந்துள்ளன. – நன்றி: தினத்தந்தி, […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், முனைவர் வ.சுப. மாணிக்கம், மல்லிகா, சென்னை, விலை 200ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்துக்கு நூலாசிரியர் வ.சுப.மாணிக்கம் அளித்த அகத்திணை குறித்த ஆய்வு நூல். அகத்திணை என்பது தமிழர் கண்ட காதல்நெறி, தமிழ் மொழி ஒன்றிலே காணப்படும் காதல் இலக்கியம் ஞாலமக்கட்கெல்லாம் உரிய காதல் வாழ்க்கை. ஆதலின் அகத்திணையறிவு பெண்ணுக்கும் ஆணுக்கும் இன்றியமையாக் கல்வியாகும். இதில் அகத்திணை ஆராய்ச்சி, அகத்திணைப் பாகுபாடு, அகத்திணை தோற்றம், அகத்திணைக் குறிக்கோள், அகத்திணைப்பாட்டு, அகத்திணைப் புலவர்கள், அகத்திணைக் கல்வி என்னும் தலைப்பின்கீழ் ஆய்வு செய்துள்ளார் முனைவர் வ.சுப. […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]

Read more

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more

தொல்காப்பியர் காட்டும் குடும்பம்

தொல்காப்பியர் காட்டும் குடும்பம், ரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்-603203, பக். 104, விலை 55ரூ. தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில் பொருளியலில் சுட்டப்பெறும் வாழ்வியல் சிறக்க, தொல்காப்பியம் 1215 செய்யுளில் குறிப்பிடும், குடும்பத்திற்கு வேண்டத்தக்க 10 இயல்புகளும், 1216 செய்யுளில் குறிப்பிடப்படும் குடும்ப வாழ்வுக்கு ஆகாத இயல்புகளாக, 11ம் மிகச் சுருக்கமாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் பற்றிய இலக்கண விளக்கங்களையும், கட்டமை ஒழுக்கம் பற்றி குறளுடனான ஒப்பீடுகளும், எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ள குடும்ப […]

Read more

பத்துப்பாட்டு-பொருளடைவு

பத்துப்பாட்டு-பொருளடைவு, முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 552, விலை 350ரூ. உலக மொழிகள் அறியாத, திணைமரபு எனும் தனி உயர் தகுதிகளோ, இயல்பாகப் பெற்றுள்ளது தமிழ் மொழி ஒன்றுதானே. பழந்தமிழ் படைப்பிலக்கியங்களில் பத்துப்பாட்டு குறிப்பிடத்தக்க பனுவலாய்ப் போற்றப்பெறும் சிறப்புடையது. ஆய்வுக்கும் முற்றாக முழுமையாக தெளிவாக அறிந்து மகிழ்வதற்கும் அவ்வழியில் மேற்கொண்டு தொடர்வதற்கும், பல வகையான அடிப்படைக் கருவி நூல்கள் தேவைப்படுகின்றன. பழங்காலத்தார்க்கு வாய்க்காத, வளர்ச்சி விளக்கங்களை, நிகழ்காலத்தாரும், வருங்காலத்தாரும் எளிதில் கண்டு, இன்பம் காண வேண்டும் என்ற உயர் நோக்கில் உருவாக்கப் […]

Read more

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி – புலவர் அடியன் மணிவாசகனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக், 116, விலை 90ரூ. தமிழ் மொழியின் தொன்மை, அதன் வளம் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை தமிழனும் தன் அடையாளமான தாய்த் தமிழில் பேசுகின்றானா? எழுதுகின்றனானா? இல்லையே என கோமும் கொள்கிறது. தமிழின் தமிழோடு வாழ்கிறானா என்பதே இப்புத்தகத்தின் உபதலைப்பு. 11 அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் வள்ளலார் ஆராய்ந்த தமிழொளி என்ற 2வது அத்தியத்தில் தமிழ் எண்ணிக்கையளவில் […]

Read more

திருவள்ளுவர் திருவுள்ளம்

திருவள்ளுவர் திருவுள்ளம், பெருவெளிராமன், கணபதி பதிப்பகம், பக். 144. திருக்குறளில் வீடு பேறு பற்றிச் சொல்லப்படவில்லை என்னும் கருத்தை மாற்றி, ஆதிபகவானை அறிதலே வீடு பேற்றை நல்கும் என்று நூலைத் தொடங்கியுள்ளார். பாயிரம் திருவள்ளுவர் எழுதவில்லை என்ற கருத்தையும், வன்மையாக மறுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் திருவுள்ளத்தை ஊடுருவி பல குறட்பாக்களுக்கான நுண் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கிய நூல்கள், தமிழ் மற்றும் வட மொழியில் உள்ள ஆன்மிக நூல்கள் பலவற்றின் துணையும் கொண்டு, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூலறிவும், […]

Read more
1 2 3 4