தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், சா.கந்தசாமி, சாகித்ய அகாடமி வெளியிடு, விலை 290ரூ. சுயசரித்திரம் என்பது, இந்தியாவில் முதன் முதலில் தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது என்றும், அதனை எழுதியவர் 1748ம் ஆண்டு புதுச்சேரியில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளை என்ற தகவலையும் தரும் இந்த நூலில், ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரனார், தமிழ்த் தாத்தா உவே.சாமிநாதைய்யர், பாரதியார், திரு.வி.க., மா.பொ.சி., கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன் ஆகியோர் உள்பட 12 தலைவர்களின் சுயசரிதங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைவர்கள் பற்றிய குறிப்பும், அதனைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 110ரூ. கனடாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பிறக்காதவர்கள். அதாவது, 120 நாட்டு மக்கள், பிறந்த நாட்டைவிட்டு, இங்கு வந்து குடியேறியவர்கள் என்கிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. இது வழக்கமான பயணக்கட்டுரை அல்ல. தகவல்கள், வரலாறுகளின் குவியல் இந்நூல். உதாரணத்திற்கு விமானத்தில் சிற்றுண்டியாக வறுத்த வேர்க்கடலையைத் தருகிறார்கள். உடனே நூலாசிரியரின் நினைவு வேர்க்கடலையின் தாயகமான மணிலாவுக்குப் போய்விடுகிறது. மணிலாவிலிருந்துதான் இந்த ‘peanut’  இன்று உலகம் முழுவதும் பரவி விளைவிக்கப்பட்டு, பணப்பயிராக மாறியிருப்பதன் வரலாற்றைக் […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ. 60 ஆண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா. கந்தசாமி படைத்த பயணக் கட்டுரை நூல். கனடா நாட்குறிப்பு தனிப்பட்ட வாழ்க்கை என்பதைத் தாண்டி, பொதுவாகவே இருக்கிறது. வேறுநாடு, வேற்று மனிதர்கள் என்பதால் வாழ்க்கை அடியோடு மாறிவிடுவதில்லை. அது எப்போதும் போலவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறார்கள். அதுவே வாழ்க்கை என்பதை […]

Read more

கருத்தும் எழுத்தும்

கருத்தும் எழுத்தும், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 150ரூ. புத்தக வாசிப்பு என்பது வாசகனுக்கு பல்வேறு அனுபவங்களையும், அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும். பல கருத்துகளை, சிந்தனைகளை எத்தனையோ நூல்கள் பேசியிருக்கின்றன. ஆனால் எழுதப்பட்ட பல நூல்கள் பற்றி பேசுவதுதான் கருத்தும் எழுத்தும் என்ற இந்த நூல். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் தொடங்கி, ஜாக் லண்டன் […]

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html நானறிந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் சா. கந்தசாமி. புனைகதையோடு வேறு பல துறைகளிலும் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். ஓராண்டு அவர் சிறந்த ஓவிய விமர்சகர் என்று விருது வாங்கியிருக்கிறார். தொலைக்காட்சி வந்தபோது அவருடைய பங்களிப்பு, குறும்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என மாறியது. தொலைக்காட்சிக்கென அவர் எடுத்த ஒரு முழு நீளப்படம், மைசூர் இந்திய மொழிகள் […]

Read more

மொழிப்போர்

மொழிப்போர், ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய மொழிப்போர், மற்றுமொரு சுதந்திர போராட்டமாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/10/2013.   —- […]

Read more

கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ

கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்கங்கள் 304, விலை 145ரூ. 1780ஆம் அணடு சென்னைக்கு ஒரு படை வீரராக இங்கிலாந்திலிருந்து வந்தவர் தாமஸ் மன்றோ. பின்பு அவர் கமாண்டராக, கலெக்டராக, கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் ஆளுகைக்குட்பட்ட சென்னை ராஜதானியின் அன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளைப் பற்றி அலண்டனில் இருந்த அவருடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதினார். அவற்றில் உள்ள தகவல்கள் அவர் காலத்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகத் திகழ்கின்றன. தாமஸ் மன்றோவின் கடிதங்களின் அடிப்படையில் […]

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம் (நூலாசிரியர் சா.கந்தசாமி, வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை 600 017.  பக்கம்: 272, விலை: ரூ. 150) To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, அரிய நூல்கள் பலவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நூல் இது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பு கூறும் வரலாற்றுத் தகவல்கள், ஆர்மோனிய வணிகர் ஒருவர், தன் சொந்தப் பணத்தில், சைதாப்பேட்டை மர்மலாங் (இப்பொதைய மறைமலையடிகள் பாலம்) பாலத்தைக் கட்டியது, பெரியார் வெளிநாட்டுப் பயணத்தில், நிர்வாண சங்கத்தருடன் தானும், நிர்வாணமாக […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more