பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை

பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல  வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,  விகடன் பிரசுரம், பக்.70, ரூ.65. அதிக மதிப்பெண்கள் எடுப்பதே மாணவர்களின் லட்சியமாக இருக்கிறது. படிப்பு என்பது படபடப்போடு தேர்வறைக்குள் நுழையும் வரை படிப்பதல்ல என்பதை 20 சிறந்த குறிப்புகளாக வரையறுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அறிவு மேம்பட நாள்தோறும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதை மகிழ்ச்சியாகக் கூட செய்யலாம், தேர்வுக்கு முன்னதாக சளைக்காமல், மலைக்காமல் படிக்கலாம், அடிக்கடி தேர்வுகள் எழுதுவதும் பயிற்சிதான் என்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் பள்ளிக்குச் சென்று எல்லா வகுப்புகளையும் கவனித்து, குறிப்புகள் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வசமாகி விட்டால், மதிப்பெண்களும் மாணவர் வசமே. […]

Read more

தினகரன் பொங்கல் மலர்

தினகரன் பொங்கல் மலர், தினகரன், பக். 240, விலை 100ரூ. மும்பை தாராவியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உடன், இந்த மலர் துவங்குகிறது. கடந்த ஆண்டு 1500 குடும்பங்கள், தாராவியில் ஒரே இடத்தில் பொங்கலிட்டு, கொண்டாடி உள்ளனர். வெள்ளம், வறட்சி என தமிழகம் அவதிப்பட்டு வரும் நிலையில், கோவில் குளங்களில் நீர் சேமிப்பது குறித்த முன்னோர் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை வரவேற்கப்படத்தக்கது. கர்நாடக சங்கீத வாத்தியங்களில் ஒன்றான கடம், தயாரிக்கப்படுவது குறித்த கட்டுரை, நாய்கள் கண்காட்சி குறித்த, தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் […]

Read more

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடி தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ. தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் பின்புலம். அரசியல், சமூக, பொருளாதாரம், ஆன்மிகம் உள்ளிட்ட பல சிந்தனைகள். கேள்விகளுக்கான விடையாக இந்நூல் அமைந்துள்ளது. பெரிய கோயில் கோபுரத்தின் விமான நிழல் தரையில் விழாதா? விமானம் 80 டன் எடையுள்ள ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டதா? கருவூர்த் தேவர் இராசராசசோழனின் அரசகுருவா? உள்ளிட்ட பல நூறு வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் உரிய சரியான விடையை நூலாசிரியர் வழங்கி, தஞ்சை பெரிய […]

Read more

இராகவதம் 1

இராகவதம் 1, ரா. இராகவையங்கார் ஆக்கங்கள், தொகுப்பும் பதிப்பும்- கா. அய்யப்பன், காவ்யா, சென்னை, பக். 1040, விலை 1000ரூ. மதுரைத் தமிழ்ச்சங்க சமஸ்தான வித்துவானாக இருந்தவர் ரா.இரா. தமிழ் ஆய்வு வரலாற்றில் தமக்கென ஒரு தனி இடத்தைப் படித்தவர். செந்தமிழ்ப் பத்திரிகையின் முதல் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்தபோது, அவ்விதழில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். செந்தமிழ் இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. இதில் செந்தமிழ் இதழிலும், கலைமகள் மற்றும் விழா மலரில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் […]

Read more

கல்குதிரை

கல்குதிரை, இளவேனிற்கால இதழ், எழுத்தாளர் கோணங்கி,  கோவில்பட்டி 628502. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி போன்ற இதழ்கள் நவீன இலக்கியத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக வெளிவந்த இந்த இதழ்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய கருத்தியல் ஆளுமைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றின. இன்றைய காலகட்டத்தில் வெகுஜன இதழ்களுக்கு இணையாக அதிக அளவில் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஆனால் அவை தொடர்ந்து வெளிவர முடியாமல் பொருளாதாரக் காரணங்களால் நின்றுபோய்விடுவதும் நடக்கிறது. […]

Read more

தடங்கலுக்கு மகிழ்கிறோம்

தடங்கலுக்கு மகிழ்கிறோம், தினகரன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல், பக். 128, விலை 60ரூ. வானத்தின் அழுக்கைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு துளியும் ஒரு உயிரின் பிறப்புக்காக. அதுபோல் வாழ்வு என்பது பிறருக்குப் பயன்பட வேண்டும். பிறருக்குப் பயன்படாத எதுவும் வாழ்வல்ல. இப்படி கட்டுரை முழுதும் இன்றைய இளைஞர்களுக்கான கருத்தாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். எதிர்காலம் பற்றிய சிந்தனையை இதயத்தில் வளர்த்தவர்களே சாதனையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள் என்று அறிவுறுத்துகிறார். அறநெறிக் கருத்துக்கள். ஆன்மீக நாட்டம். அறிவிருக்கு விருந்து. படிப்போருக்கு புதிய பாதை.   […]

Read more

கமலின் கலைப்படங்கள்

கமலின் கலைப்படங்கள், பி.ஆர். மகாதேவன், நிழல், சென்னை 78, பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-800-4.html அறிவுஜீவி என்று ஒரு குறுகிய வட்டத்தினரும் விவரமறிந்தவர் என்று பொதுவாக பத்திரிகைகளும் கேள்வி கேட்பாமல் ஒப்புக் கொண்டுள்ள கமல்ஹாசனின் முக்கியமான, வித்தியாசமான திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றில் தர்க்கரீதியான ஓட்டைகள் மலிந்துள்ளன என்று இப்புத்தகத்தின் ஒரு பகுதி கூறுகிறது. கதை சொல்லும் சினிமாவை தீவிரமாக நேசிக்கும் நூலாசிரியர், ஹேராம், விருமாண்டி, தேவர்மகன், அன்பேசிவம், குருதிப்பஉல், குணா ஆகிய படங்களை பார்ட் […]

Read more

பத்துப்பாட்டு ஆராய்ச்சி

பத்துப்பாட்டு ஆராய்ச்சி, மா. இராசமானிக்கனார், சாகித்ய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 688, விலை 365ரூ. சங்கத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி ஐவகை நிலங்கள், நாடுகள், அரசர்கள், பாட்டுடைத் தலைவர்கள், பாணர், விரலி போன்ற இசைவாணர்கள், ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொழில், வாணிகம், உணவு, பழக்கவழக்கங்கள், […]

Read more

திராவிடநாட்டுக் கல்வி வரலாறு

திராவிடநாட்டுக் கல்வி வரலாறு, திராவிடப்பித்தன், மீள் பதிப்பாசிரியர்-இரா. பாவேந்தன், கயல்கவின் பதிப்பகம், 16/25, 2வது கடல்போக்குச் சாலை, வால்மீகி நகர், திரவான்மியூர், சென்னை 41, விலை 250ரூ. சமூக அக்கறை கொண்டவர்களுக்கான நூலே இந்த திராவிடநாட்டுக் கல்வி வரலாறு. கல்வி என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானது. சாதி, மதம் கடந்து எல்லாரும் கல்வி கற்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இது அனைவரின் உரிமையும்கூட… என்று நினைப்பவர்களாக இருந்தால், இந்த நூல் சர்வ நிச்சயமாக உங்களுக்கானதுதான். நமக்கானதுதான். சென்ற நூற்றாண்டை, புரட்சிகளின் நூற்றாண்டு என்று சொல்லலாம். […]

Read more