கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள் (2 தொகுதிகள்), கவிஞர் பெருமான் புவியரசு (டாஸ் டாவ்ஸ்கி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 1490, விலை 1300ரூ. உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி. ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள். அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் […]

Read more

அக்பர்

அக்பர், க. வெங்கடேசன், சாந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 407, விலை 180ரூ. இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் வருகை முக்கியமானதொரு திருப்புமுனை. அதிலும் அக்பரின் ஆட்சி காலத்தில், பல்வேறு போர் விதிமுறைகளை தளர்த்தியும், முஸ்லிம் அல்லாதோர் மீது திணிக்கப்பட்ட வரிகளை தளர்த்தியதாலும், அவர் வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றார். தந்தை ஹுமாயூன் இறந்த பிறகு 14 வயதில் அரியணை ஏறிய அக்பர், யானை, புலிகளை வேட்டையாடுவது, குதிரை சவாரி உள்ளிட்டவற்றில் தணியாத ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன்னுடைய 20ம் வயதில், தன்னிச்சையாக செயல்பட்டு அக்பர், நாட்டு […]

Read more

கரிகாலர் மூவர்

கரிகாலர் மூவர், பேராசிரியர் வை.சு. சுப்பிரமணி ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html கரிகாலன் என்று சொன்னால், காவிரியும், கல்லணையும் நினைவுக்கு வருவது இயல்பு, சோழப் பெருமன்னராக விளங்கிய கரிகாலன் என்ற பெயர் கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் கி.மு. 12ஆம் நுற்றாண்டு வரை தோன்றிய சங்க இலக்கியங்களிலும், கி.பி, 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய புராண நூல்களிலேயே அம்மன்னனுடைய வீரமும், மெய் கீர்த்தியும் […]

Read more

வாலிப வாலி

வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 374, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-0.html கண்ணனே நீ வரக் காத்திருந்தேன். கண்விழித் தாமரை பூத்திருந்தேன் எனும் காதல் பாடல், ஆனாலும் பாஞ்சாலி துயரமெல்லாம் பாவையினம் அறியாதோ? எனும் காப்பியச் செய்தி ஆனாலும், உலகம் சுழல்கிறது. அதன் பயணம் தொடர்கறிது – வெள்ளிக்கிமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன். வள்ளிக் கணவன் பேரைச் சொல்லிக் கூந்தலில் பூ முடித்தேன் என்ற பக்தி ரசமாயினும், திரை இசைக் […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, விலை 300ரூ. To buy this Tamil book onine – www.nhm.in/shop/100-00-0000-811-3.html இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டராக இருந்தபோது மாவட்டத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில்களில் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகளை, தொல்லியல் துறையின் உதவியுடன் படியெடுத்தவர். பாண்டியர் வரலாறு நீண்டது. நெடியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள், பல நூறு செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அவர்களின் வரலாற்றை அறிய […]

Read more

சங்க இலக்கிய ஆய்வு மாலை

சங்க இலக்கிய ஆய்வு மாலை, பதிப்பாசிரியர் கி.இராசா, பதிப்புத்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620024, பக். 212, விலை 120ரூ. இத்தொகுப்பில் உள்ள 14 கட்டுரைகளை எழுதியவர்களில், முனைவர்கள் இருவரைத் தவிர மற்ற பன்னிருவரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள். முதன்முதலில் தி போனே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சூழியற் பெண்ணியம். ஆமாம் பெண்ணியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சூழியற் பெண்ணியம்? சூழியற் பெண்ணியமும் திணை இலக்கியமும் என்ற கட்டுரையில் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார் கி.இராசா. ஒரே கருத்தை பல்வேறு புலவர்கள் எவ்வாறு வேறு […]

Read more

உரை மாண்புகள்

உரை மாண்புகள், இரா. குமரவேலன், விழிகள் பதிப்பகம், 8ஏம், 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41. பக். 160, விலை 130ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார், திருக்குறள் பரிமேலழகர், திருக்குகோவையார் பேராசிரியர், இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மனதில் பதிந்துவிட்ட உரை (உண்மை)கள் இவை. அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைக்கு முன்பே அரும்பதவுரை ஒன்று இருந்துள்ளது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரைதான் விரிவானதாக விளங்குகிறது. இதைப் பற்றி ஆராய்கிறது அடியார்க்குநல்லார் உரைநலம் […]

Read more

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை, ஆரூர்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 1, பக். 448, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-796-8.html கதை வசனகர்த்தாவாக திரையுலகில் புகழ் பெற்ற ஆரூர்தாஸ் தனது வாழ்க்கை அனுபவங்களை சுவைபட விவரிக்கும் நூல் இது. அவரின் வாழ்க்கை வரலாற்றோடு அந்தக் கால கலையுலகின் வரலாறும் இதில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பராசக்தி படத்தில் அறிமுகமானபோது, சிவாஜியை குதிரை மூஞ்சி என்று சொல்லி படத்திலிருந்தே தூக்கிவிடச் சொன்ன ஏ.வி. மெய்ப்ப […]

Read more

தியானமும் பயிற்சியும்

தியானமும் பயிற்சியும், சுவாமி ராமா, தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 154, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-917-8.html மேலை நாடுகளில் யோகா, தியானம் மற்றும் கீழை நாடுகளில் சிந்தனைகளைக் குறித்த தற்கால எழுத்தாளர்கள், மேதைகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தியான முறைகளின் குறிக்கோள் மற்றம் யோக ஞானத்தை அடையும் வழிமுறைகளைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கி, எளிமையான விரிவுரைகள் இந்நூலில் உள்ளன. மனிதன் தனது அகம் மற்றும் புறம் என்னும் இரு […]

Read more

என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன், கே.எஸ். ரவிக்குமார், ஜே.டி.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக். 96, விலை 70ரூ- To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-3.html திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் பன்முகங்களையும் மிகச் சுவையாக வெளிப்படுத்தும் நூல். அவரிடம் துணை இயக்குநராகப் பணிபுரியும் நூலாசிரியர் அந்த அனுபவஙங்களிலிருந்து இந்நூலை எழுதியிருக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதற்கு அப்பால் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனிதரின் நல்ல பண்புகளைச் சித்தரிக்கும் பல சுவையான […]

Read more
1 2 3 4 10