அகமும் புறமும்

அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், சென்னை 5, பக். 256,விலை 200ரூ. கோவை ஞானி நடத்தி வரும் தமிழ்நேயம் இதழில் வெளியான அகமும் புறமும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கோவை ஞானியின் எதிர்வினைகள், கவலைகள், கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாவற்றின் கலவைதான் அகமும் புறமும். இந்தத் தொகுப்பில் இடம்பெறுபவை 2005க்கு முந்தைய கட்டுரைகள் என்றாலும், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் இன்றும் இருக்கின்றன.முன்னிலும் அதிகமாகி இருக்கின்றனவே தவிர, மறைந்துவிடவில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அவர் அணுகும் விதம், […]

Read more

வீணையின் குரல்

வீணையின் குரல், எஸ். பாலசந்தர், ஓர் வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், யெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html வீணை எஸ். பாலசந்தர் சென்ற நூற்றாண்டில் தென்னாட்டிலும் அதைக் கடந்தும் பிரபலமாக இருந்த கலைஞர். இளம் இசை மேதையாகவும் செஸ் விற்பன்னராகவும், வெளிக்கிளம்பிய பாலசந்தர், திரை உலகின் பல துறைகளில் புகழ் பெற்றவர். பாடல்கள் இல்லாத முதல் தமிழ் படமான அந்த நாள் இயக்குநர். பின்னர் செலுலாய்டை சுருட்டி வைத்துவிட்டு, வீணையின் […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ தமிழ்ச் சைவப் பெருமக்களின் வேதங்களாகப் போற்றப் பெறுவன சைவத் திருமுறைகள். அவை 27 ஆசிரியர்களால், பாடப்பெற்ற 18 280 பனுவல்களால் அமைந்த செந்தமிழ்க் கருவூலம். இத்தொகுதிக்கு அருளாசியுரை வழங்கியுள்ள திருப்பனந்தான், காசித் திருமடத்து அதிபர், முனைவர் ஆர். செல்வக் கணபதியின் முயற்சி துணிச்சலானது. இவரின் வெற்றி சாதனையானது எனப் பாராட்டியிருப்பது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இத்தொகுதி […]

Read more

மண்ணை அளந்தவர்கள்

மண்ணை அளந்தவர்கள், முனைவர் பழ, கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 72, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-4.html மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை அளந்து எகிப்தியர்கள் அதைப் பதிவு செய்திருக்கின்றனர். கி.பி. 300ல் ரோமில் நில அளவை நடந்ததற்கான குறிப்பு காணப்படுகிறது. அட்லஸ் எனப்படும், நில வரைப்படத்தை, முதன் முதலில் பாபிலோனியர்கள் உருவாக்கியிருக்கின்றனர். கிரேக்க வானியல் அறிஞர் டாலமி முதன் முதலில், பூமியைக் கோள வடிவில் வரைந்துள்ளார். இந்தியாவின் முதல் பெரிய நில அளவை, சென்னையில் இருந்துதான் […]

Read more

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லரின் மறுபக்கம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-498-6.html ஹிட்லர் என்ற பெயருலுக்கு இருக்கும் பிரபலமும் கவர்ச்சியும் உலகில் வேறு எவருக்கும் இல்லை. அவர் எழுதிய புத்தகமும் அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் எத்தனை முறை வெளியிட்டாலும் எத்தனைபேர் வெளியிட்டாலும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் வாசிக்கப்படுகிறது. எனவே உலகத்தின் ஹீரோக்களில் ஒருவராகத்தான் ஹிட்லரை சொல்ல வேண்டும். தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்துபோன பிறகும் போற்றப்படும் விமர்சிக்கப்படும் […]

Read more

குயிலின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி

குயிலின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி, ஆலம்பட்டு சோ. உலகநாதன், கமலா உலகநாதன், நினைவு திருக்குலக் கல்வி அறக்கட்டளை, ஆலம்பட்டு, குருந்தம்பட்டு அஞ்சல், கல்லல் வழி 630305, பக். 104, விலை 80ரூ. சிவகங்கை சீமையின் விடுதலைக்காக வேலு நாச்சியாரின் வெற்றிக்காக, தன்னையே வெடிகுண்டாக மாற்றி, ஆயுதக் கிடங்கில் குதித்து, உயிர் நீத்த தியாகி குயிலிதான், தீப்பாஞ்ச அம்மன் வடிவமாக வழிபடுவதாக நூலாசிரியர் தம் ஆய்வுகள் மூலம் நிறுவ முற்பட்டுள்ளார். காளையார் கோவில் போரில் துவங்கி, ஆயுதக் கிடங்கில் குதித்த முதல் மனித குண்டு […]

Read more

முடிவளமும் சரும பொலிவும்

முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, லாயிட்ஸ் 2 லேன், அவ்வை சண்மகம் சாலை, ராய்பேட்டை, சென்னை 14, விலை 150ரூ. பக்க விளைவே இல்லாத மருத்தவம் ஹோமியோபதி என்பதை ஆணித்தரமாக எடுத்து வைப்பதுடன் பெரும்பாலனவர்களுக்கு ஏற்படும் முடி மற்றும் சருமம் தொடர்பான நோய்களுக்கு காரணம் என்ன? அவற்றை ஹோமியோபதி மூலம் எவ்வாறு முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்பதை எளிய நடையில் தந்து இருக்கிறார். விளக்கப்படங்களுடனும் ஆதாரங்களுடனும் கொடுத்து இருப்பதோடு மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற […]

Read more

தமிழின் தனிச்சிறப்பு

தமிழின் தனிச்சிறப்பு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர், மேற்கு, சென்னை 40, விலை 15ரூ. 10-4-1949ஆம் ஆண்டு மறைமலையடிகளார் ஆற்றிய சொற்பொழிவு அடங்கிய மிகச்சிறிய நூல்.   —-   மனதெனும் குரங்கை வெல்லுங்கள், தமிழாக்கம்-வெ. ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், 48, ஆர்ய கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், தி.நகர், சென்னை 33. போதை ஏறிய குரங்கை தேளொன்று கொட்டி, பிசாகம் பிடித்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே நம் மணமும். அதிலிருந்து பயன் தராத சிந்தனைகளை செதுக்கி எடுத்து உள்ளே […]

Read more

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம்,

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம், சைவத் திரு, ராமநாதன், பழனியப்பன், வானதி பதிப்பகம், பக். 496, விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-2.html தமிழ்க் குடியிலே மிக உயர்ந்த புகழையும், பாரம்பரிய பெருமைகளையும் கொண்ட பெருங்குடி தனி வணிகர் எனப் போற்றப்படுவது நகரத்தார் குடி. கண்ணிமையைப்போல் தமிழையும், சைவத்தையும் வளர்த்து வருகின்ற, பெருங்குடி மரபில் வந்த பெருமகனார் இந்நூலாசிரியர். தெய்வச் சேக்கிழார் பெருமான், தமது குடிமக்கள் காப்பியமான பெரிய புராணத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் கி.ஆ.பே., அகநி பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html தமிழ்நாட்டு வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்படவில்லை. சோழர் வரலாறு, சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு என, அறிஞர்களால் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுகளும், செப்பேடுகளும், பழந்தமிழ் நூல்களும் இவ்வரலாறுகளுக்கு ஆதாரமாக இருப்பவை. பாண்டியர் வரலாறு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தவங்கி கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை உள்ள, கால அளவு கொண்ட […]

Read more
1 2 3 4 5 6 10