எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன்

எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன், இரா. சிவராமன், பை கணித மன்றம், 9/11, தெற்கு கங்கை அம்மன் கோயில் இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை. விலை 365ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-081-0.html இராமானுஜனின் அற்புத கணித ஆற்றலுக்கும் அவரது எளிய வாழ்க்கைத் தன்மைக்கும் சொக்கத் தங்கமான குணத்துக்கும் எப்போதும் யாருக்கும் எத்தீங்கும் நினைக்காத நல்ல மனதுக்கும் உலகில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் போற்றுவர். அவரது கணிதப் படைப்புகளின் தன்மையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களின் […]

Read more

பட்டினப்பாலை ஆராய்ச்சி

பட்டினப்பாலை ஆராய்ச்சி, மகாவித்வான் ஆர். ராகவையங்கார், செண்பகா பதிப்பகம், பக். 102, விலை 50ரூ. மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞரும் தமிழ், வடமொழி, ஆங்கிலப் மொழிப் புலமை மிக்கவரும், செய்யுளியற்றல், உரைநடை வரைதல், துருவியாராய்தல், நிரல்படக் கோவை செய்தல், இனிய செற்பொழிவாற்றுதல் என்று, பல்வேறு ஆற்றல் உடையவரும் ஆன, ராகவையங்கர் தமிழுலகம் போற்றும் மாமேதை. அவரது பழைய நூல் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. பட்டினப்பாலை தமிழின் தொன்மை இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும், புலவரால் பாடப் பெற்றது இந்நூல். இவர் […]

Read more

மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்தின் பின் மனிதர் நிலை, மறைமலையடிகள், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர்,சென்னை 17, பக். 192, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-701-7.html மறைமலையடிகள் என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படும் இந்நூலாசிரியர், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மறைத் திரு சுவாமி வேதாசலம் ஆவார். அன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு இப்போதும் பலரால் பாராட்டப்படுகிறது. இவர், மரணத்திற்குப் பின் மனிதர் நிலை என்ன என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். கடவுளும் இல்லை. ஆத்மாவும் இல்லை. […]

Read more

மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்

மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும், ய. மணிகண்டன், பாரதி புத்தகாலயம், சென்னை 15, பக். 112, விலை 60ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-486-2.html மகாகவி பாரதியார் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், ஔவை நூல்கள், சித்தர் பாடல்கள், வள்ளலார், தாயுமானவர் போன்றோரது பாடல்களைத் தனது எழுத்தில் பதிவு செய்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் அவர் சங்க இலக்கியங்க்ளையும், பழந்தமிழ் இலக்கியங்களையும் எந்த அளவுக்கு அறிந்திருந்தார். எந்த அளவுக்கு அவற்றைத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதை இந்நூல் […]

Read more

ஐரோம் ஷர்மிளா

ஐரோம் ஷர்மிளா, க. சிவஞானம், நக்கீரன் வெளியீடு, சென்னை 14, பக். 120, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-082-6.html என் உடலே என் ஆயுதம் என்று 12 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஷர்மிளாவின் கோரிக்கை. தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதாகக் கூறி, சாதாரண மக்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுகிறது என்பது […]

Read more

சிநேகிதி

சிநேகிதி, அகிலன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 17, பக். 176, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-372-2.html இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் அகிலன். அவருடைய சிநேகிதி நாவல் மிக முக்கியமானது. சமீபத்தில் இந்நூலின் 17ம் பதிப்பு வெளிவந்துள்ளது. இன்றைய சூழலில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் விரிசல்தான் பாலியல் சிக்கல்களுக்கு அடிப்படையாக உள்ளது. தெளிவான புரிதலோடு ஆணும், பெண்ணும் காதலை எதிர்கொண்டிருந்தால் பெரும்பாலும் சிக்கல்கள் எழுவதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்பதை விளக்கும் ஓர் […]

Read more

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி, எல். நடராஜன், தமிழாக்கம்-ஆர். நல்லக்கண்ணு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-1.html இந்தியா ஒரு விவசாய நாடு என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அது விவசாயப் புரட்சிகளின் நாடு என்பதும், அதனால்தான் காந்தி ஒரு இந்திய விவசாயியின் புறத்தோற்றத்தைப் பூண்டு இந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டி வந்தது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகவும் தங்கள் […]

Read more

வாடிய மலர்

வாடிய மலர், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை 108, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-2.html 1947 ஆகஸ்டு 15ந் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு சுதந்திர நாடுகளாக உருவாயின. பிரிவினைக்கு முன்பும் பின்பும் மதக்கலவரங்கள் மூண்டு, இரு தரப்பிலும் சுமார் 20 லட்சம்பேர் பலியானார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு சீக்கிய வாலிபருக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையும், அவர்கள் காதல் நிறைவேற ஒரு இந்து இளைஞன் நடத்திய புரட்சியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட […]

Read more

பாரதி குழந்தை இலக்கியம்

பாரதி குழந்தை இலக்கியம், சுகுமாரன், உலகத் தமிழர் பதிப்பகம், 4, சவுராஸ்டிரா நகர், சூளைமேடு, சென்னை 94, விலை 70ரூ. பாப்பா பாட்டை தவிர குழந்தை இலக்கியத்திற்கென்று எதையும் பாரதியார் எழுதவில்லை என்று சிலர் எண்ணுகிறார்கள். அதனை பொய்பிக்கும் வகையில் மகாகவி பாரதியார் எழுதிய பாடல்கள், கதைகளில் இருந்து குழந்தை இலக்கியம் என்னும் தலைப்பில் ஒரு நூலை தொகுத்து வழங்கி உள்ளார் ஆசிரியர் சுகுமாரன். இந்த நூலில் பாரதியாரின் கவிதைகள், கதைகள் இடம் பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/9/2012.   —-   […]

Read more

ஒன்பதாவது வார்டு

ஒன்பதாவது வார்டு, கோட்டயம் புஷ்பநாத், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-284-5.html டாக்டர் ஆகும் தனது கனவை கலைத்தவர்களை பழிவாங்கும் பெண் ஆவியின் கதை தான் இந்த நாவல். கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆவி இன்னொரு பெண்ணின் உடலில் புகுந்து பழிவாங்கும் கதையை விறுவிறுப்புடனும், திகில் கலந்தும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் கதையின் போக்கு அமைந்துள்ளது. மலையாளத்தில் […]

Read more
1 4 5 6 7 8 10