தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்

தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள், முனைவர் சி. நல்லதம்பி, புலம். தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருவாரியான பழங்குடியின மக்கள் வாசித்து வருகின்றனர். தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை கணிசமானது. வரலாற்று ஆய்வாளர்களால், பழைய கற்காலம் துவங்கி, இந்த மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களின் தொடர்ச்சியாக தான், கல்வராயன் மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறு உற்பத்தி […]

Read more

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு, எஸ். ராமன், ஆங்கில மூலம்-எஸ். லட்சுமி நாராயணன், இந்துத்துவப் பதிப்பகம், 46, அனுமந்தபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, பக். 278, விலை 150ரூ. ஸ்ரீ ராம பிரான் அவதரித்து 5000 ஆண்டுகள் ஆன பிறகும், அவருடைய மனிதாபிமான குணங்கள் இன்றும் பலருக்கு முன் மாதிரியாக இருந்து வழி காட்டும். ராமரின் வாழ்க்கைச் சம்பவங்களை நன்றாக அறிந்து கொண்டதால்தான், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்காக நடத்த முடியும் என்று வாதிடும் ஆசிரியர், […]

Read more

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், ச. தில்லை நாயகம், சாகித்ய அகடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110 001, பக். 304, விலை 155ரூ. அறிஞர்களின் முக்கிய குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம் (பக். 44). ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசு, சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசகம் அளித்து விடக் கூடாது என்பதை, என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக, நான் […]

Read more

சமகால இந்தியச் சிறுகதைகள்

சமகால இந்தியச் சிறுகதைகள் (தொகுதி 4), ஷாந்தி நாத் கே. தேசாய், தமிழாக்கம்-மெஹர் ப. யூ. அய்யூப், சாகித்ய அகாடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷ் ஷா சாலை, டில்லி 110 001, பக். 512, விலை 325ரூ. தமிழில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய வீடு சிறுகதை உட்பட சமகால இந்திய எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் ஆங்கிலம் வாயிலாகத் தமிழாக்கம் பெற்றுள்ளன. கே.எஸ். துக்கல் பஞ்சாபி மொழிக் கதையாசிரியர் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வாடகை காரோட்டி சிறுகதையும் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இந்தியில் நிர்மல் வர்மாவின் […]

Read more

இறகுதிர் காலம்

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, பக். 136, விலை 100ரூ. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இயற்கை குறித்தும், சுற்றுச் சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயனுள்ள நூல். ஆசிரியரின் நடையழகு சிறப்பானது. -சிவா. நன்றி: தினமலர், 30/6/13.   —-   பார்க்கப் பார்க்க ஆனந்தம், […]

Read more

நிம்மதி எங்கே?

நிம்மதி எங்கே?, மா. பொன்னுசாமி, பண்மா பதிப்பகம், 21ஜி/3, அப்பாவு நகர், சூரமங்கலம், சேலம் 636005, பக். 230, விலை 200ரூ. மண்ணில் பிறந்த அனைவருக்கும், நிம்மதி என்பது தேவை. நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நிம்மதியை இரண்டு வழிகளில் பெற முடியும். முதலாவதாக, நல்லதைச் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கோப்பாய் நிம்மதி பெற முடியும். நிம்மதி என்பது, நம் உள்ளத்திலேயே இருந்தாலும், அதை வெளிக்கொணர்ந்து, அனுபவக்க முடியாத நிலையில்தான், இன்றைய மனித வாழ்க்கை இருக்கிறது. மிகவும் ஆழத்தில் நமது உள்ளத்தில் […]

Read more

கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள், அசோகமித்திரன், நந்றிணை பதிப்பகம், பக். 159, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-1.html   மகத்தான நாவல் வரிசையிலும், அசோகமித்திரனின் மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்றான இந்த நாவல் வெளிவந்துள்ளது. சினிமா தொழிலில் தொடர்புள்ளவர்கள் பற்றிய நாவல் இது. இருந்தாலும் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் லௌதீக, லோகாயதமான வாழ்க்கை சம்வங்களையே முன் வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. நா.பா. நடத்திய தீபம் இலக்கிய மாத இதழில் தொடராக வெளிவந்த, இந்த நாவல் பரவலாக, இலக்கிய அன்பர்களால் அதிகம் […]

Read more

நாயகன் பாரதி

நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 320, விலை-240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-5.html கடந்த 1960களிலே இருந்து 2013ம் ஆண்டின் நேற்றைய பொழுதுவரை, தமிழ் இதழ்களில் அடிக்கடி காணப்பட்ட பெயர் மலர்மன்னன். சிறந்த இதழ்களில் எல்லாம் அவரது சிறுகதையோ, கட்டுரையோ, தொடர் நாவல்களோ, விமர்சனங்களோ வந்த வண்ணம் இருக்க வைத்த எழுத்துத் தச்சர். பல்வேறு இதழ்களில், அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல்தான் இந்நூல். ஜாதியில்லை வர்ணமுண்டு என்ற தலைப்பில் துவங்கி சின்னராஜு என்ற தலைப்போடு […]

Read more

தமிழக சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழக சிற்பங்களில் பெண் தொன்மம், முனைவர் பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், கோடம்பாக்கம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html தமிழகத்தில் பெரும் கோவில்கள் உருவாக்கப்பட்டபோது, அவற்றின் கருத்து நிலைப்பதிவுகள், எவ்வெவ்வகயில் பதிவு செய்யப்பட்டன என்னும் விரிந்த கோணத்தில், சிற்பம் என்னும் ஒரு புள்ளியை, இந்நூல் ஆய்வு செய்துள்ளது. தாய்வழிச் சமூக மரபு அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் வைதிக ஆணாதிக்க மரபு எப்படிக் கால் ஊன்றியது என்று, இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. புராணக் கதைகளைக் […]

Read more

பத்துப்பாட்டு ஆராய்ச்சி

பத்துப்பாட்டு ஆராய்ச்சி, மா. இராசமானிக்கனார், சாகித்ய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 688, விலை 365ரூ. சங்கத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி ஐவகை நிலங்கள், நாடுகள், அரசர்கள், பாட்டுடைத் தலைவர்கள், பாணர், விரலி போன்ற இசைவாணர்கள், ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொழில், வாணிகம், உணவு, பழக்கவழக்கங்கள், […]

Read more
1 5 6 7 8 9 10