எழுத்து இதழ்த் தொகுப்பு

எழுத்து இதழ்த் தொகுப்பு, சி.சு.செல்லப்பா படைப்புகள், தொகுப்பு கி.அ. சச்சிதானந்தன், சந்தியா பதிப்பகம், சென்னை. முன்னோடியின் முகம் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் சி.சு.செல்லப்பா. தன் வாழ்நாள் முழுவதையும், இலக்கியத்துக்காகச் செலவிட்டார். அவர் நடத்தி வந்த எழுத்து இதழைச் சிற்றிதழ்களின் முன்னோடி எனச் சொல்லலாம். எழுத்து இதழைத் தொடர்ந்து தான் அதன் மூலம் அறிமுகமானவர்களால், நடை, பிரக்ஞை, கசடதபற, யாத்ரா போன்ற இதழ்கள் தமிழ் இலக்கியத்துக்காக மலர்ந்தன. க.நா. சுப்ரமண்யத்தின் சமகாலத்தவரும் அவரின் நேர் எதிர் இலக்கியக் கோட்பாட்டாளராகவும் சி.சு.செ. இருந்தார். க.நா.சு-வும் […]

Read more

தாய்மைப் பொருளாதாரம்

தாய்மைப் பொருளாதாரம், காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா, இயல்வாகை குவாவாடீஸ், பக். 196, விலை 120ரூ. அமெரிக்க உதவி தூக்கு கயிறுக்குச் சமம் அமெரிக்காவின் உதவி தூக்கு கயிறுக்கு சமமானது. இப்படி சொன்னவர் காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா. இந்த விமர்சனம் அந்த நாளில் பலத்த எதிர்ப்பை சந்தித்தபோதும், குமரப்பாவின் பின்வாங்கவில்லை. இந்திய மண்ணுக்குரிய பொருளாதாரத்தை காந்திய சிந்தனையின் அடிப்படையில், கட்டமைக்க முற்பட்டவர் குமரப்பா. இந்த நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளவர் வெ. ஜீவானந்தம். எளிய நடையில், மொழியாக்கம் உள்ளது. […]

Read more

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்)

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்). ப. கலாநிதி, செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 80, விலை 70ரூ. பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயமா? இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கால்மாட்டில், விளக்கேற்றி வைத்து விட்டதால், ஆங்கில மருத்துவ முறைகள், அரியணையில் அமர்ந்துவிட்டன. பெரும்பாலான பிரசவங்கள், அறுவை சிகிச்சையில் முடிகின்றன. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமானதற்கு கூட்டுக்கு குடும்ப வாழ்வு சிதைந்ததும் ஒரு காரணம். இன்றைய நிலையில் மீண்டும், மரபு வழி மருத்துவ முறைகளின் […]

Read more

இளைப்பாறும் சுமைகள்

இளைப்பாறும் சுமைகள், குன்றக்குடி சிங்காரவடிவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. அடிமாடுகள் படும் அவஸ்தைகள் இளைப்பாறும் சுமைகள் என்ற சிறு கதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். குன்றக்குடி சிங்காரவடிவேலு எழுதியுள்ள 15 சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில், ஜாம்பவான் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு, ஒப்பிடும் அளவுக்கு இளம் எழுத்தாளர்களும், வந்துகொண்டே இருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் ஒன்றை, மற்றொன்று முந்திச் செல்வதுபோல், ஜாம்பவான்களை, இளம் எழுத்தாளர்கள் முந்தி செல்வதும் நடந்துகெண்டு […]

Read more

வீரக்கதைப் பாடல்கள்

வீரக்கதைப் பாடல்கள், எம்.எம்.மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், பக். 152, விலை 110ரூ. போர்க்களத்தில் வீர முழக்கமிடும் ஒன்போது நாடோடிப் பாடல்களை ஆய்கிறது நூல். இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், கான் சாகிபு சண்டை, தம்பிமார் கதை, இராமப்பய்யன் அம்மானை ஆகிய நான்கும், தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் எழுந்த வீர நிகழ்ச்சி போர் பாடல்கள். காசீம் படைப்போர், அலியார் படைப்போர், சைத்தூன் கிஸ்ஸா, சக்கூன் படைபபோர், மலுக்கு மலுக்கு ராஜன் கதை ஆகிய ஐந்தும் முஸ்லிம் பெயர் பூண்ட போர் பாடல்கள். வீரச்சுவை எல்லாவற்றிலும் […]

Read more

நாரதர் கதைகள்

நாரதர் கதைகள், பாலகுமாரன், விசா பதிப்பகம், பக். 160, விலை 90ரூ. நாரதர் என்றவுடன், அவர் பெரும் கலகக்காரர், புராணகால மாந்தரிடையே சண்டை மூட்டிவிடுபவர், கோள் மூட்டுவதே அவருடைய தொழில் என்பதான எண்ணம் பலருக்கும் எழுவது இயல்பு. அதன் அடிப்படையிலேயே தமிழில் சில திரைப்படங்களும் வந்துவிட்டன. ஆனால் நாரதர் கோமாளியோ, கோள்மூட்டியோ அல்ல. தந்திரக்காரரோ, பிறரை இழிவுபடுத்துபவரோ அல்ல. மிகச்சிறந்த மகரிஷி, இசை வல்லுனர். தாமும் நல்வழி நடந்து, பிறரையும் நல்வழி நடக்கச் செய்பவர். பக்திக்கு ஒரே சிறந்த உதாரணம் நாரதர். நாரதரைச் சரியாகப் […]

Read more

ஹிட்லர்

ஹிட்லர், மருதன், கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 150ரூ. மவுசு குறையாத ஹிட்லர் உலக வரலாற்றின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்திய ஹிட்லர் போன்றவர்களைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் அவற்றைப் படிக்கும் ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. வேறெங்கோ தப்பிச் சென்று இயற்கையாக மரணம் அடைந்தார் என்று மாற்றுச் சிந்தனையுடன் எழுதப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையே நூற்றுக் கணக்கில் இருக்கும். தமிழில் இரண்டாம் உலகப் போர் சார்ந்து எழுதப்பட்ட ஹிட்லரின் வரலாறுகளின் […]

Read more

தமிழர் நெல்

தமிழர் நெல், ஓம் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 60ரூ. தமிழர்களின் உணவு, கலாச்சாரம், விழாக்கள் போன்ற அனைத்திலும் நெல்லும் அரிசியும் ஒன்றாகக் கலந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமான அந்த அரிசி அன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாய் இருந்தது. இன்று சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல வியாதிகளுக்குக் காரணமாகிவிட்டது. அதற்குக் காரணம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள்தான். இவற்றால் நம் பாரம்பரிய அரிசியின் தன்மைகெட்டு, நோய்க்கான இடமாக இக்கால அரிசி மாறிவருவதைச் சுட்டிக்காட்டுவதோடு, இன்றும் நம்மிடம் உள்ள பாரம்பரிய அரிசிகள் எவை, […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர் டி.எஸ். பாலையா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறன் கொண்ட டி.எஸ். பாலையாவுக்கு இதுவரை ஒரு நிறைவான நூல் இல்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்திருக்கிறது இந்நூல். பாலையா நடித்திருக்கும் அனைத்துப் படங்களையும் கால வரிசைப்படுத்தித் தந்திருப்பது சினிமா ஆய்வாளர்களுக்கு உதவும் பணி. பாலையாவின் ஆரம்பகால படங்களின் பிரதி எதுவும் கிட்டாத […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more
1 2 3 4 9