கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், தோழமை வெளியீடு, சென்னை, விலை 150ரூ. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் டைரக்டர் பாலசந்தர். 100 படங்களை இயக்கியவர், புரட்சிகரமான கதைகளைத் துணிந்து படமாக்கியவர். ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனை பட்டை தீட்டியவர். ஒரு படத்தைப்போல இன்னொரு படம் இல்லாதபடி, விதம் விதமாகப் படங்களை எடுத்த திறமைசாலி. பாடல் காட்சிகளை படமாக்குவதில் புதுமையைப் பகுத்தியவர். அண்மையில் காலஞ்சென்ற பாலசந்தரின் நினைவாக இந்நூலை சேவியர் எழுதியுள்ளார். புத்தகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியை பாலசந்தர் பேட்டி கண்டது […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் வடிப்பதில் புகழ் பெற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் கொண்ட நூல் கயல் பருகிய கடல். இதில் மாலன் முக்கியமாக ஆராய்ந்துள்ள விஷயம், தமிழில் வெளியான முதல் சிறுகதை எது? அதை எழுதியவர் மகாகவி பாரதியாரா? அல்லது வ.வே.சு. அய்யரா? தமிழ் இலக்கியவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருவது, தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. அய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். […]

Read more

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள், கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, விலை 120ரூ. சினிமா கண்டுபிடிக்கப்பட்டு 120 ஆண்டுகள் ஆகின்றன. படத் தயாரிப்பில், உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் என்ற சினிமா நகரை உருவாக்கி, பல ஸ்டுடியோக்களை அமைத்து, படங்களை தயாரித்தனர். ஹாலிவுட் அளித்த நடிகர் – நடிகைகள் உலகப்புகழ் பெற்று விளங்கினர். அவர்களில் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ, மார்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர், புரூஸ் லீ, ஜாக்கிசான் உள்பட 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 607,விலை 650ரூ. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவது பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து, மந்திரசபையை அமைக்கத் திட்டமிட்டன. சுதந்திரம் அடைந்தபின், முக்கிய மாநிலமான சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதை பிரதமர் நேரு விரும்பவில்லை. […]

Read more

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை, பா. சேதுமாதவன், உலா பதிப்பகம், திருச்சி, பக். 136, விலை 80ரூ. சங்ககால மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரும் சோழநாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர். காரணம் அதன் பெருவளமும் புவியியல் ரீதியாக பெற்றிருந்த இயற்கை அமைப்புமேயாகும். இம்முயற்சியில் பலர் வெற்றியும் கண்டனர். பல மொழிகள், இனங்கள், தேசங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் நிரிவாகத்தின் கீழ் சோழநாடு இயங்கி வந்ததால், காலந்தோறும் பல நெருக்கடிகளையும், பன்னாட்டு, கலாச்சார சமூக பொருளாதார மாற்றங்களையும், கலை, இலக்கிய வளர்ச்சியையும் பாதிப்பையும் கண்டது. இச்சரித்திரக் கூறுகளை […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும், தி ஓல்ட் மேன் அண்டு தி சீ, எர்னெஸ்ட் ஹெமிங்க்வே, தமிழில் எம்.எஸ்., காலச்சுவடு பதிப்பகம். எர்னெஸ்ட் ஹெமிங்க்வே ஆங்கிலத்தில் எழுதிய தி ஓல்ட் மேன் அண்டு தி சீ என்ற நாவலை தமிழில், கிழவனும் கடலும் என்ற பெயரில் எம். எஸ். மொழிபெயர்த்து உள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நோபல் பரிசு பெற்ற நாவல், சினிமாவாகவும் வந்துள்ளது. சமீபத்தில் இந்த நாவலை படித்தேன். ஈராக் அதிபர் சதாம் உசேன் சிறைப்பட்டு இருந்தபோது, கடைசி ஆசை என்ன என சிறை […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழா கட்டுரைகள் தொகுப்பு நூல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 576, விலை 560ரூ. முதல் முன்னோடி நூல்; புதுவரவு தமிழியியலின் பல்வேறு பொருண்மைகளின் சங்கமே, இந்த நூல். சென்னை பல்கலை பேராசிரியர் வீ. அரசிடம், ஆய்வு செய்த, பல ஆய்வாளர்களது பல்வேறு ஆய்வு பொருண்மை குறித்த, 85 கட்டுரைகளும், பேராசிரியரது தன் விவரக் குறிப்பு குறித்த ஒரு கட்டுரையும் ஆக, 86 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், இக்கால இலக்கியம், […]

Read more

விதையினைத் தெரிந்திடு

விதையினைத் தெரிந்திடு, தொகுப்பு வலம்புரி லேனா, எழில்மீனா பதிப்பகம், தஞ்சை. அபூர்வ அறிமுகங்கள் ஒரு சமூகத்தின் சிந்தனைமுறை மற்றும் மதிப்பீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 18ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை தமிழ் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் அச்சிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் பேரிதழ்கள் ஒருபுறம் என்றால், சிறிய தொகையில் குறைந்த அளவில் அடிக்கப்படும் சிற்றிதழ்கள் மறுபுறம். குறிப்பிட்ட சமூகத்தினர், ஒரே ஊரில் வசிப்பவர்கள், தொழில் சமூகத்தினர், அரசியல் குழுவினர், புலவர்கள், அறிஞர், […]

Read more

இலக்கிய விதி இனியவன்

இலக்கிய விதி இனியவன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. கவனக கலைக்கு மறுவாழ்வு தந்தவர் படைப்புகளை தாயாக உருவாக்குகிறார், படைப்பாளர், தன் படைப்பு குந்தைகளை பெறுவதும், பெயர் சூட்டி மகிழ்வதும், உலாவவிட்டு புகழ் மாலை பெற வைப்பதிலும், தாயாக நிற்கிறார் படைப்பாளர். ஆனால் தன் படைப்புகள் மட்டுமின்றி, எல்லா படைப்பாளர்களுக்கும் தாயாக, அவரை சமூகத்திற்கு அறிவிக்கும் தந்தையாக இருந்து, தமிழ் வளர்த்தவர், இலக்கிய வீதி இனியவர். விநாயகநல்லூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த லட்சுமிபதி, வளர்ந்து, எழுத்தாளராய் உயர்ந்து, இலக்கிய அமைப்பாளராய் […]

Read more
1 2 3 4 5 10