பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும்

பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும், மு. இரமேஷ், இராசகுணா பதிப்பகம், பக். 175, விலை 130ரூ. மேலைத் திறனாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி திறனாய்வு நூல்களைப் படைத்துவரும் நூலாசிரியரின் இன்னொரு திறனாய்வுப் படைப்புதான் இது. அகம், புறம் பற்றிய கருத்துருவாக்கத்தில் இணைவும் இயைபும் என்ற தலைப்பில் அடையாள அரசியல் பேசப்படுகிறது. புறானனூற்றை முன்வைத்து தொல் தமிழ் சமூகங்களும் சமயச் சொல்லாடல்களும் எப்படி இருந்தன என்பதை விளக்கியுள்ளார். அகமரபில் முருகன் பற்றிய விளக்கங்கள், அதாவது சங்க இலக்கியங்களில் முருகன் தொடர்பான குறிப்புகள் பல, சிந்துவெளிப் […]

Read more

சாவித்திரி கலைகளின் ஓவியம்

சாவித்திரி கலைகளின் ஓவியம், மு.ஞா.செ. இன்பா, தோழமை வெளியீடு, சென்னை, பக். 272, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரி, தன்னைப் பற்றி ஒரு சுயசரிதை நூல் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதுபோல உள்ளது இந்நூல். சாவித்திரியின் மரணப்படுக்கையில் தொடங்கி, பின்னர் பின்னோக்கிச் சென்று அவருடைய வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக் பாணியில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் திரைக்கதையைப் போல பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாவித்திரியின் தேச பக்தி, தயாள குணம், வெகுளித்தனம், வெளிப்படையான பேச்சு, நிர்வாத் திறன், நடிப்புத் திறன், இயக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு […]

Read more

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பாசிரியர் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256, விலை 170ரூ. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவைப் போற்றும்விதமாக உருவாகியுள்ள நூல். எனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே வைத்துக் கொள்ள நான் முயலுகிறேன்’ என்று சொன்னார் ஜெயகாந்தன். அவர் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள், அவர் அளித்த நேர்காணல்கள், ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள், ஜெயகாந்தன் மணிவிழா மலரில் ஜெயகாந்தனின் துணைவியார் எழுதிய கட்டுரை, ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை, பிரபல ஓவியர்கள் வரைந்த ஜெயகாந்தனின் […]

Read more

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள்

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள், முனைவர் பி. சாந்தன், மணிமேகலைப் பிரசரம், பக். 288, விலை 120ரூ. மனிதர்கள் உள்பட பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழத் தேவை பிராணவாயு. இதைத் தருவது பச்சையம் உள்ள மரங்களே. எனவே, ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தாவர வளத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், சுமார் 1000 வகையான தாவரச் சிற்றினங்களை கண்டறிந்துள்ளதோடு, மூலிகைப் பண்ணை, உலர் […]

Read more

தேசம் மறந்த ஆளுமைகள்

தேசம் மறந்த ஆளுமைகள், ராபியா குமாரன், தூண்டில் பதிப்பகம், திருச்சி, விலை 100ரூ. 200 ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, எத்தனை தியாகங்களைப் புரிந்து இந்த சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக முஸ்லிம்கள் இப்போராட்டத்திற்கு எப்படி முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதைப் புள்ளி விபரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ‘தேசம் மறைந்த அரசர்’ என்ற முதல் கட்டுரையில் இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பஹதூர் ஷாவும், அவரது குடும்பத்தினரும் 1850-களில் ஆங்கிலேயரால் எப்படியெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்திகள் […]

Read more

ஒரு கடல் ஒரு கைவிளக்கு

ஒரு கடல் ஒரு கைவிளக்கு, கவிஞர் பிரபாகர பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், பக். 144, விலை 125ரூ. மனித மாண்புகளை மேம்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கைவிளக்கின் துணையுடன் சமுதாயத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் பார்க்க முடிகிறது. கவிஞர் பிரபாகர பாபு தன் கவியாளுமையை இந்த தொகுப்பில் ஆழமாக வழங்கியுள்ளார். தீயின் நாக்குகளைப் போல் தீண்டாமை குளிருக்கு இதமாக வருடும் தீயின் வெப்பக் கவிதைகள் இவை. வெளிச்சத்திற்கும், இருட்டிற்கும் இடைப்பட்ட கணத்தை வெளிச்சமாக்கும் வித்தை, இந்தக் கவிதை தொகுப்பு முழுவதும் காணப்படுகிறது. சுகத்தை விடவும் […]

Read more

எம்.ஜி.ஆர். கதை

எம்.ஜி.ஆர். கதை, இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், பக். 352, விலை 200ரூ. லட்சக்கணக்கானவர்களின் மனதில் இன்றும் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாடகம், திரைத்துறை என எதிலும் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும், வீரத்தையும், விடாமுயற்சியையும் விதைத்து வந்த அவர், அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கலை, பொதுவாழ்வு என எதிலும் தன்னிகரற்ற மனிதராய் இருந்த அவரது, தனிப்பட்ட வாழ்க்கை மிக மிக எளிமையானது. இதற்கு அடித்தளமாய் இரந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறையை, அவர் வாழ்ந்த இடங்களுக்ளுக்குச் சென்று, அவரது உறவுகள், நண்பர்கள், அறிமுகமானோரிடம் […]

Read more

அவ்வையார் நூல்கள்

அவ்வையார் நூல்கள் (ஆங்கில மொழியாக்கத்துடன்), செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. நூலாசிரியர் கொங்கு நாட்டினர். குறையாத கல்வி நிரம்பியவர். அறிவியல், கணக்கு, தொழில்நுட்பம் ஆய்ந்து தேர்ந்தவர். இந்த நூலில் அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, கல்வியில் ஒழுக்கம், அவ்வைக்குறள், பிள்ளையார் அகவல், தனிப்பாடல் என, கிடைத்தவற்றைத் தொகுத்து, அந்த அடி அல்லது பாடலுக்குப் பொருள் விரிவுரை எழுதியும், மூலத்தை ஆங்கிலத்தில் எழுத்தாக்கம் செய்தும், ஆங்கில விளக்கமும் தந்து நூலை ஆக்கியுள்ளார். அவையார் பலர் வாழ்ந்திருந்தனர். சங்ககால அவ்வை […]

Read more

எரியும் பூந்தோட்டம்

எரியும் பூந்தோட்டம், தெலுங்குமூலம் சலீம், தமிழில் சாந்தா தத், சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 256, விலை 145ரூ. நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை, விஞ்ஞானப் பூர்வமாய் அணுகும் வித்தியாசமான பார்வை கொண்டவை, சலீம் படைப்புகள். எய்ட்ஸ் எனும் கொடிய நோய் குறித்தும், அது தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பிரச்னைகள் குறித்தும், சுவாரசியமிகு ஆய்வு ஒன்றை முன்வைத்துள்ள நாவல் இது. இரண்டு குடும்பங்கள். ஒன்று மத்தியதரவர்க்கம். இன்னொன்று அடித்தட்டு வர்க்கம். இரு குடும்பங்களுமே, எய்ட்சால் பாதிக்கப்பட்டவை. எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் இதயம் உண்டு எனும் […]

Read more

செல்லுலாயிட் சித்திரங்கள்

செல்லுலாயிட் சித்திரங்கள், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 207, விலை 100ரூ. சிவாஜிக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பத்தாண்டு காலத்தில், ஆயிரம் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறார் தமிழ்மகன். அடுத்த எட்டு ஆண்டுகளில் இருபதுக்கும் குறைவாம். இரண்டும் கடந்த சமஸ்திதியில் வெளிவந்திருக்கிறது அவருடைய இந்த நூல். சின்னச் சின்னக் கட்டுரைகள் சிறுகதை போன்ற முத்தாய்ப்போடு. உருக்கம் அல்லது கிறக்கம் தரும் தகவல்கள், பனி மூட்டம் போன்ற மனித நேயங்கள், விடையில்லாத கேள்விகள், கிளாமரில் துவங்கி மதமாற்றம் வரை போன நடிகையர் என்று சினிமா வேகத்தில் நிறைய […]

Read more
1 3 4 5 6 7 8