மேடைப்பேச்சு

மேடைப்பேச்சு, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.204, விலை ரூ.170. சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான நூலாசிரியர், மேடைப் பேச்சு தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தலைவர்களின் மேடைப் பேச்சுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வாறு பயன்பட்டன? சுதந்திரப் போராட்ட காலத்தில் “மேடை ஏறியோர்க்கு மேடையில் ஏறுவது தெரியும்; இறங்கியவுடன் எங்கு போவோம் என்பது தெரியாது. ஏறினால் ரயில் – இறங்கினால் ஜெயில்’‘ என்ற நிலை அப்போது இருந்தது என்பன போன்ற பல தகவல்கள் வியக்க வைக்கின்றன. […]

Read more

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில் அருமை செல்வம், அசதா, காலச்சுவடு பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் கொலம்பியாவைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இந்நாவல் சந்தியாகோ நாஸார் என்பவனின் கொலையுடன் தொடங்குகிறது. அக் கொலையுடனேயே நிறைவும் பெறுகிறது. இடையில் அவன் கொல்லப்படுவதற்கான காரணத்தை நாவல் விரட்டிச் செல்கிறது. பயார்தோ சான் ரோமான் என்பவரின் புது மனைவி ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு சந்தியாகோ நாஸார்தான் காரணம்; அதனால்தான் அவன் கொல்லப்பட்டான் என்பதாக […]

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 512, விலை 320ரூ. கல்கண்டு வார இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் கேள்விகள், நகைச்சுவை கேள்விகள், பொது கேள்விகள் என மூன்று பிரிவுகளாக கேள்விகள் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்த சுவையான பதில்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. “தி.மு.க.வைச் சமாளிக்க நான் ஒருவனே போதும் என்கிறாரே காமராஜர்?’, “இந்த நாட்டில் நீடித்து நிற்கப்போகிற கட்சி எது?‘’,”தி.மு.க.அழிந்தால் அண்ணா எந்தக் கட்சியில் சேருவார்?’‘, “இந்தி […]

Read more

பண்டைய இந்தியா

பண்டைய இந்தியா, (எதிர்நிலை கருத்துக்களுக்கான மறுப்புகள்), ஆர்.எஸ். சர்மா, தமிழில் சுவிதா முகில், புதுமை பதிப்பகம், விலை 35ரூ. கடந்த, 1977ல், ‘பண்டைய இந்தியா’ எனும் வரலாற்று நூல் ஆர்.எஸ். சர்மாவால் எழுதப்பட்டது. கல்வி ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில், பிளஸ் 1 வகுப்பு வரலாற்று பாடப்புத்தகமாக பதிப்பிக்கப்பட்டது. இதில், பண்டைய இந்திய வரலாற்றை மிக எளிமையாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் எழுதிய நூல் பண்டைய இந்தியா. அதன் தமிழாக்கம் இது. நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, விலை 350ரூ. இலங்கை போரால் அழிந்த கிராமங்களுக்கு பயணம் செய்து, அங்கு வாழும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஈழ மக்களின் வாழ்வு, போராட்டம், சிங்கள அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் இந்நூல் பதிவு செய்துள்ளது. இப்புத்தகம், ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணம். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், பக். 216, விலை 175ரூ. காவல் துறை வன்முறைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை சித்ரவதைகள், கொத்தடிமை தொழிலின் அவலம், பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக போராடிய, ‘எவிடன்ஸ்’ கதிரின் அனுபவங்களே இந்த கட்டுரை தொகுப்பு. இந்த புத்தகம், அநீதிகள் நடக்கும்போது, அமைதியாய் இருப்போரின் மனசாட்சியை தட்டி எழுப்பும். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

காவிரி நேற்று இன்று நாளை

காவிரி நேற்று இன்று நாளை, பெ. மணியரசன், பண்மைவெளி பதிப்பகம், பக். 208, விலை 120ரூ. வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரை காவிரிக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு, கர்நாடகம் காவிரியைத் தடுக்கின்ற நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், தீர்ப்பாய, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், தமிழகத்தின் காவிரி உரிமை குறித்த இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. காவிரி பிரச்னை ஆரம்பித்த நாளிலிருந்து, 2016 டிசம்பர் வரை காவிரி சிக்கலில் நடந்த நிகழ்வுகள், வழக்குகள், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுடன், தண்ணீர் தகராறுச் […]

Read more

ஆப்ரகாம் லிங்கன்

ஆப்ரகாம் லிங்கன், டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக்.80, விலை 35ரூ. ஆப்ரகாம் லிங்கன் ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தது முதல் அவர் அரசியலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருமுறை பதவி வகித்தது வரை சுருக்கமாக பேசும் நூல். அவரது குணநலம், பண்பாடு, சொற்பொழிவுகள், அவரது படைப்புகள் ஆகியவற்றை மாணவர் உலகம் பயனுறும் வகையில் சிறுநூலாகத் தந்துள்ளார் மூதறிஞர் இராசமாணிக்கனார். நன்றி: குமுதம், 21/12/2016.

Read more

சுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை

சுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை, ஜக்மோகன் எஸ்.பன்வர், தமிழில்: கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.125. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகிளின் மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சுந்தர் பிச்சை. சென்னை ஜவஹர் வித்யாலயா, வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற சுந்தர் பிச்சை, காரக்பூர் ஐஐடி மாணவரானது, அங்கே தன்னுடன் பயின்ற மாணவியான அஞ்சலி ஹர்யானியைக் காதலித்தது, அவரையே மணந்து கொண்டது உள்ளிட்டவை தவிர, சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட வாழ்க்கைத் தகவல்கள் இந்நூலில் […]

Read more

சிகரம் தொட்ட சாதனையாளர்கள்

சிகரம் தொட்ட சாதனையாளர்கள், புதுகை மு.தருமராசன் , புதுகைத் தென்றல், விலை 90ரூ. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்பட 13 சாதனையாளர்கள் பற்றி புதுகை மு.தருமராசன் எழுதிய புத்தகம். “நயனுறு நடைச்சித்திரம்” – சிகரம் தொட்ட சாதனையாளர்கள். இனிய நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   நெடுஞ்சாலை வாழ்க்கை, விகடன் பிரசுரம், விலை 175ரூ. நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களைப் பற்றிய கட்டுரைகள். நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி டிரைவர்கள் […]

Read more
1 2 3 4 8