நீங்களும் கிடைப்பீர்கள்

நீங்களும் கிடைப்பீர்கள், ம. சக்தி வேலாயுதம், விஜயா பதிப்பகம், பக்.144, விலை 75ரூ. “பத்தே அடியில் தண்ணீர் கிடைக்கிறதாம்… விளைநிலம்… விலை நிலம் ஆனபின்பு” இப்படி சமூகத்தில் புரையோடிப்போன ஏமாற்றுக்களை எளிய தமிழில் ஆழமாகப் பதியவிட்டு, வாசகனை விழித்து எழச் செய்யும் உத்தி கவிதைகள் தோறும் காண முடிகிறது. கவியின் உள்ளமும் சொல்லாட்சியும் படிப்போரைக் கவரும். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

உன்னைவிட்டு விலகுவதில்லை

உன்னைவிட்டு விலகுவதில்லை, எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திருநங்கைகள், திருநம்பிகளின் விமர்சனங்களை கேள்விகளாக்கி நாவலில் விடை தேடும் முயற்சி இது. மூன்றாம் பாலினத்தின் மூடப்பட்ட ரகசியங்களை நாவலில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். மூன்றாம் பாலினத்தின் மீது சமுதாயம் திணிக்கும் அழுத்தம், அவர்களின் வாழ்வைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இன்றி அவர்களை ஏளனமாக கடந்து போவதைச் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. எங்கும் மணலே நிறைந்திருக்கும் பாலைவனத்தில் செல்லும் பாதை எது? அதன் எல்லை எங்கே இருக்கிறது? அந்தப் பாதையில் சென்ற அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அறிவர். வாழ்க்கையும் அந்த மணல் பாதைபோல்தான். அதில் நாம் செல்லும் பாதைக்கு வழிகாட்டி, செல்ல வேண்டிய எல்லைக்கு அழைத்துச் செல்கிறார் ஓஷோ. வழிகாட்டியை முழுமையாக நம்பினால்தான் பயணத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்கிறார். வாழ்வின் மறுபுறம் மறைந்துள்ள மகிழ்ச்சியைக் காண்பதற்கான சூஃபி தத்துவம் எளிய முறையில் […]

Read more

ஆண்கள் படைப்பில் பெண்கள்

ஆண்கள் படைப்பில் பெண்கள், சு. ஜெயசீலா, காவ்யா, பக். 134, விலை 130ரூ. நாவல்களில் பெண்கள் ஆண் எழுத்தாளர்களால் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராயும் நூல். கு. அழகிரிசாமி, ஐசக் அருமை ராஜன், சு. சமுத்திரம், பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 16 புதினங்களில் பெண்கள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே போராடுவதை இந்நூல் வெளிக்காட்டுகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. ‘ஒரே வருடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள்… காற்றில் கரைந்ததுபோல் மாயமானார்கள்….!’ தொடக்க வரிகளே நடுங்க வைக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் தக்கர் கொள்ளையர்கள் கொலைவெறியுடன் நடத்திய கொடூர சம்பவங்களின் வரலாறினை அலைந்து திரிந்து சேகரித்து திகில் படங்களுக்கு சற்றும் குறையாத படபடப்பு படிப்பவர்களுக்கு ஏற்படும் வகையிலும் சுவாரசியமாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: குமுதம், 12/7/2017.

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 384, விலை 200ரூ. தமிழ்மொழியில் மிகப்பழமையான இலக்கணநூலான தொல்காப்பியத்துள் விளங்கும் கலைச்சொற்களும், அவற்றுக்கு அடியாக விளங்கும் சொற்களும் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு, பொருள் அளிக்கப் பெற்றுள்ளதாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழில் எழுத்து, சொற்களைக் கற்றவர் யாவரும் அறியும் வகையில், தொல்காப்பியம் எளிய நூலாக இருப்பினும், அதில் உள்ள கலைச்சொற்களை அறிந்து கொண்டால், அதை நன்கு உணர்ந்து கற்க இயலும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நூலில் தொல்காப்பியத்தில் விளங்கும் கலைச்சொற்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டு […]

Read more

குறுந்தொகை

தமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல் குறுந்தொகை, மூலமும் உரையும், உ.வே.சா. நூல் நிலையம், பக். 800, விலை 500ரூ. சங்க இலக்கியங்களிலே அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட நூல் என்ற பெருமையைப் பெற்ற நூலான குறுந்தொகை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா., அவர்களால், 1937ல், பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலை, 82வது வயதில் பதிப்பிக்கும் உ.வே.சா., அவர்கள், 100க்கும் அதிகமான பக்கங்களில் நூலாராய்ச்சியை கொடுக்கிறார். அதில், ஏட்டுப் பிரதிகள் பலவற்றையும் ஒப்பிட்டு, பாட வேறுபாடுகளை குறித்துக் கொண்டது மட்டுமன்றி, பிற இலக்கண, இலக்கிய உரைகளில் காணலாகும் மேற்கோள் பாடல்களையும் […]

Read more

இரத்தமே உயிரின் ஆதாரம்

இரத்தமே உயிரின் ஆதாரம், டாக்டர் டி.பி.ராகவ பரத்வாஜ், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 120ரூ. ஒருபுறம் நெடுஞ்சாலை விபத்துகளில் ரத்த ஆறு பாய்ந்தோட, மறுபுறம் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ரத்த வகை கிடைக்காமல் அலறி ஓடுவது நாடெங்கும் காணும் காட்சி. ரத்தமில்லாமல் உயிரில்லை; உலகில்லை. ரத்தம் எல்லா ஜீவராசிகளுக்கும் சிவப்பே என்பதில் இயற்கை மீதொரு வியப்பு தோன்றுகிறது. எந்த ஒரு வியாதியைச் சொல்லி மருத்துவமனைக்குச் சென்றாலும் உடனே ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. பெரும்பாலான உடற்குறைபாடுகளுக்கு ரத்தத்தின் குறைபாடே காரணம். நம் ரத்தத்தின் கூறுகள் […]

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ. பாரத நாடு பாருக்கெல்லாம் அளித்த ஞானக் கொடை பகவத் கீதை. உள்ளம் தெளிவுற உலகோர் கீதையை படிக்கின்றனர். கீழைக்கு ஆதிசங்கரர் முதல் பலரும் வடமொழியில் விளக்கம் எழுதியுள்ளனர். பகவத் கீதை வெண்பா, பாரதியார் விளக்கம், கண்ணதாசன் விளக்கம், சுவாமி சித்பவானந்தர் ஆராய்ச்சி விளக்கம் எனப் பல நூல்கள் கீதைக்கு தமிழாக்கமாக வந்துள்ளன. இந்நூலில், 18 அத்தியாயங்களும் தெளிவுரையாக விளக்கம் தரப்பட்டுள்ளன. சுலோகங்களே இல்லாமல் கருத்துக்களைத் தொகுத்துள்ளார். அன்றாட […]

Read more

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, வழக்கறிஞர் த. ராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. சிந்தனையில் தெளிவும், சிந்தனையில் ஆழமும் மானுட வளர்ச்சிக்கெல்லாம் மூல ஆதாரம்; தெளிவான சிந்தனையில் தான் ஆழமான சிந்தனைகள் தோன்றுகின்றன. உயர்ந்த சிந்தனைகளே நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன. யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்த நியூட்டன், காந்தியடிகள், அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்றோர் வரலாறு படைத்துள்ளனர். நம் சிந்தனைகளையே உளியாகக் கொண்டு நம்மை செதுக்கும்போது, நம்மிடம் உள்ள தேவையற்றவை கழிந்து போகின்றன. உள்ளே மறைந்து கிடக்கும் நம் திறமைகள் […]

Read more
1 3 4 5 6 7 9