உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு, அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 269, விலை 145ரூ. “ஒவ்வோர் இளைஞனுக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு லட்சியம் வேண்டும். அதை நிறைவேற்ற விடாமுயற்சியோடு கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்‘’ என்று இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாக திரும்பத் திரும்ப கூறியிருப்பது, புத்தகத்தை ஆழமாகப் படிக்கத் தூண்டுகிறது. தவிர, 2020-இல் இந்தியா ஒளிர வேண்டும் என்ற தனது கனவை மெய்ப்படுத்த விவசாயம், அறிவியல், […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. முஸ்லிம் கதை மாந்தர்களைக் கொண்ட, சிறந்த கதைகள் அடங்கிய நூல். ‘ஐரோப்பாவின் நோயாளி’ என அழைக்கப்பட்ட துருக்கி, முதல் உலகப் போரில் மல்யுத்த வீரனாக எழுந்து நின்றதைச் சொல்லும், ‘கல்விப்போலி போர்க்களம்’ என்ற கதை, ஒரு சிறந்த சரித்திர ஆவணம். கதைக்கான கருக்கள், பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளில் இருந்தே எடுத்துக் கையாளப்படுகின்றன என்று, நூலாசிரியர் தன் முன்னுரை யில் கூறியுள்ளார். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 18/6/2016.

Read more

முருகன் திருவிளையாடல்

முருகன் திருவிளையாடல், கங்கா ராமமூர்த்தி, கங்கை புத்தக நிலையம், விலை 130ரூ. இந்த நூலில் இடம்பெற்றுள்ள 27 கட்டுரைகள், சிவபக்தியின் களஞ்சியமாகத் திகழ்வதுடன், முருகப் பெருமான் புரிந்த திருவிளையாடல்களும் பக்தர்களின் நெஞ்சை உருக்கிப் பரவசம் தரும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- ஒப்பனைக்காரன், இள. அழகிரி, நக்கீரன் வெளியீடு, விலை 200ரூ. ஏவி.எம். ஸ்டூடியோவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக “மேக்கப்மேன்” ஆகப் பணியாற்றியவர் எஸ். முத்தப்பா. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ரஜிகாந்த், கமல்ஹாசன் உள்பட எல்லா பிரபல நட்சத்திரங்களுக்கும் “மேக்கப்” போட்டவர். […]

Read more

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ. நீலன், அருள் பதிப்பகம்,விலை 125ரூ. தத்துவஞானத்தை புரிந்து கொள்பவர்களின் நலன் கருதி எழுதப்பட்ட இந்தியத் தத்துவங்களை விளக்கும் நூல். இதில் பிரம்மஞானம் குறித்து தெளிவாக நூலாசிரியர் விளக்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- கண்ணுக்காக நான், டாக்டர் பாபு ராஜேந்திரன்,நோஷன் பிரஸ், விலை 250ரூ. பிரபல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு ராஜேந்திரன் ‘கண்ணுக்காக நான்’ என்ற ஒரு ஆங்கில நூலில் தன் சுயசரிதையை எழுதுவதுபோல, ஒரு கண் டாக்டர் எப்படி உருவாகிறார் என்பதையும், அவர் […]

Read more

ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள்

ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள், ஆர். ரங்கராஜன், மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. திரைப்படங்களில் இனிமையான பாடல்களைப் பாடி, ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தவர் ஜமுனாராணி. அவர் சினிமாவுக்காகப் பாடிய முதல் பாடலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல்தான், “குளிர் தாமரை மலர்ப் பொய்கை கண்டேன்” என்று தொடங்கும் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் “வளையாபதி” (1952). சுமார் 40 ஆண்டு காலம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பாடிய ஜமுனா ராணி கடைசியாகப் பாடிய பாடல் 1992-ல் வெளிவந்த “அண்ணன் என்னடா […]

Read more

மக்கள் தகவல் தொடர்பியல்

மக்கள் தகவல் தொடர்பியல், பேராசிரியர் ராஜா வரதராஜா, மு. வரதராஜன், ஆரா பதிப்பகம், விலை 150ரூ. 1450-ம் ஆண்டு அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதழ்கள் வாயிலாக தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இதழியலின் தோற்றம், வளர்ச்சி குறித்து இந்த நூல் விவரிக்கிறது. உலக அளவில் முதலில் தோன்றிய நூல், இந்தியாவில் முதல் அச்சகம், முதலில் தோன்றிய நூல் மற்றும் தமிழில் முதன் முதலில் அச்சான நூல் என்பது தொடங்கி அனைத்து தகவல்களையும் இந்த நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. இதழ்களோடு நின்று விடாமல் வானொலி, […]

Read more

நான் இந்து அல்ல

நான் இந்து அல்ல, சி.கே. மதிவாணன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. அம்பேத்கரின் கருத்தாக்கங்களை இன்றைய சூழலில் அனுபவத்தில் ஆய்வு செய்யும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- குமரித் தமிழன் தொல்காப்பியர், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. தொல்காப்பியர் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல், தொல்காப்பியர் குமரி மாவட்டத்தில்தான் தோன்றினார். அதுவும் காப்பிக் காட்டில்தான் தோன்றினார் என உறுதிபடக் கூறுகிறார் நூலாசிரியர் புலவர் சி. ஞானாமிர்தம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. பதினென் சித்தர்கள் யாவரும் ஆதிசித்தனாகிய சிவனிடம் நேரடியாக தீட்சை பெற்றவர்கள். இந்த சித்தர்களை பற்றிய தெளிவான விரிவான தகவல்களை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 115ரூ. தனித்துவமான கதைக் களங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுதி. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

தாரகை

தாரகை, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. இந்நூல் சினிமா உலகத்தை கழுகுப் பார்வையில் பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் தமிழ் மகன். ஒரு தேர்ந்த வில் வித்தைக்காரனின் அம்புகளைப்போல இவரது சொற்களும், சொற்களின் வழி விரிந்து செல்லும் கதை உலகமும் இந்த யதார்த்தத்துக்கு துணை புரிகின்றன. தீபிகா என்ற நடிகை, திடீர் புகழ் பெற்று சிலரை […]

Read more

என் பெயர் நம்பிக்கை

என் பெயர் நம்பிக்கை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 80ரூ. வாழ்க்கையில் சறுக்கி கீழே விழும்போதும், அதில் இருந்து எழும்பி மேலே வரும்போதும் நாம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம். அப்போது மறக்க முடியாத சம்பவங்களும், அரங்கேறுகின்றன. இப்படி சுவாரசியம் நிறைந்த வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த மனிர்தர்களையும், அவர்கள் தந்த அனுபவங்களையும், பாடங்களையும் தொகுத்து எழுதி உள்ளார், இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன். மழலைகளைக் கொண்டாடுவோம், நல்லதையே நினைப்போம் இப்படி 48 சிறு சிறு தலைப்புகளில் […]

Read more
1 461 462 463 464 465 505