அனுமனின் கதையே

அனுமனின் கதையே, இந்திரா சவுந்திரராஜன், சாருபிரபா, பக். 464, விலை 250ரூ. ஊழிதோறும் புதிது புதிது தோன்றும் சீர்த்தியன் என்று கம்பர் அனுமனைப் போற்றுவார். அது உண்மைதான். பல யுகங்கள் கடந்து, இன்றும் அனுமன் புதிய புதிய உருவப் பொலிவுடன் தோன்றி அருளுகிறார். பக்தியும், தொண்டும் தவிர ஏதும் அறியாத அனுமனின் ஆளுமையும், அதை வரிகளில் படம் பிடித்து, படிப்பவர் மனதில் திரைப்படமாய் காட்டும் இந்திரா சவுந்திரராஜனின் எழுத்தின் திறமை சிறப்பானது. இடை இடையே ஓவியங்கள், எழுத்துக் காவியத்தை தூக்கி நிறுத்துகின்றன. சீதையை கண்டு […]

Read more

துக்காராம்

துக்காராம், பாலசந்திர நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே.நாகு, சாகித்ய அகாடமி, டில்லி, விற்பனை-குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மராத்தி இலக்கிய படைப்பாளர்கள் சமய சீர்திருத்தமும், சமுதாயச் சீர்திருத்தமும் ஏற்பட நூல்கள் பல எழுதினர் என்பர். இந்நூல், துக்காராமின் காலச்சூழல், அவர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் திருத்தொண்டர் என்ற நிலையில் வாழ்ந்த துக்காராம் என்று பல தலைப்புகளில் விளங்குகிறது. துக்காராமின் மராத்தி பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. படிப்போருக்கு மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. நூலின் இறுதியில் […]

Read more

துளி விஷம்

துளி விஷம், வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், பி.டி. ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ. விதவிதமான கதைகள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலாசிரியர் ஆனந்த் ராகவ், ஒரு நிருபர். ஓவியம்போல் எழுத்தில் வரையத் தெரிந்த நிருபர். கண்டதும், கேட்டதும், பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்தக் கொள்ளும் கோணங்களம் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டுபவை. எழுத்தில் மிகை இல்லை. […]

Read more

இடைவேளை

இடைவேளை, ஆர். வெங்கடேஷ், வேத பிரகாசனம், 142 முதல் மாடி, கிரீன் வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, விலை 100ரூ. பொருளாதார சீர்கேடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 3 கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்ட நாவல் இடைவேளை. இதில் பிரதமர், நிதி மந்திரி, இஸ்ரோ விஞ்ஞானி, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பாகும்.   —-   ஸகாத் கோட்பாடும் நடைமுறையும், மெல்லினம், 31பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை 2, விலை 150ரூ இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். […]

Read more

திருப்பதி

திருப்பதி, மஞ்சுள் பதிப்பகம், 2வது தளம், உஷா பிரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 462003, விலை ரூ 199. உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் நூல். பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை […]

Read more

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம், கவிதைகள், அமிர்தம் சூர்யா, அன்னை ராஜராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, விலை 100ரூ. நீந்தும் சொற்கள் பழைய சோறென இருக்கும் என் வாழ்வுக்கு இன்னமும் அவள்தான் நினைவில் ஊறிய இழப்பின் மாவடு… இந்த கவிதை உருவாக்கும் மனச்சித்திரங்கள்தான் இக்கவிதையின் வெற்றி. வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் என்கிற இந்த கவிதைத் தொகுப்பில் கவிதைகளாக முழுமை அடைந்துள்ள ஒவ்வொருவருக்குமான தனித்தனி அனுபவங்களான கவிதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. சூர்யாவின் கவிதைகள் மிகவும் அந்தரங்கமான விஷயங்களைப் பேசுகின்றன. […]

Read more

காலத்தின் குரல்

காலத்தின் குரல், ஆவாரம்பூ, 10, மேலப்பாட்ட நயினார்புரம், கல்லிடைக்குறிச்சி 627416, விலை 50ரூ. கவிஞராக, சிறுகதையாளராக, கட்டுரையாளராக என பன்முகத்தில் சிறந்த தி.க.சி. விமர்சகராக இருந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்த நூலில் பல எழுத்தாளர்கள் பற்றிய அவரது வெளிப்படையான கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. தொகுத்தவர் வே. முத்துக்குமார்.   —-   ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள், சுவாமி தன்மயானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், மைலாப்பூர், சென்னை 4, விலை – முதல் பாகம் ரூ.120, மற்ற பாகங்கள் தலா ரூ. 110. ஆன்மிக […]

Read more

சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முனைவர் முகிலை ராசபாண்டியன் மற்றும் நான்குபேர், விசாலாட்சி பதிப்பகம், பக். 382, விலை 300ரூ. ஐந்து பதிப்பாசிரியர்கள், 58 எழுத்தாளர்களிடமிருந்து அரவாணிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளைப் பெற்று, தொகுத்து தயாரித்துள்ள நூல். திருநங்கைகள் பற்றிய எல்லா தகவல்களும் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் இருந்தும் பல மேற்கோள்களுடன் கூடிய ஒரு சில கட்டுரைகள் இருக்கின்றன. சமூகப் பார்வையோடும் சில கட்டுரைகள். நல்ல முயற்சி. -ஜனகன்.   —-   கைகாட்டி, கணபதி அருணாசலம், ஜி. வேதகிரி, 32, கேசவப் பெருமாள் […]

Read more

தமிழும் நானும் (பகுதி 5)

தமிழும் நானும் (பகுதி 5), ஜி. ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல், சமயம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய நான்கு ஆய்வுக் களங்களின் வழி, பல மாநாடுகளையும் நூல்களையும் வெளியிட்டவர் ஆசிரியர். ஒப்பீட்டு சமய ஆய்வில் அதிக ஈடுபாடு கொண்டவர். மலேசியிவில் மூன்றாவது முருகன் மாநாடு, தாய்லாந்து பாங்காக் நகரில் மகாசூரி பல்கலைக்கழகத்தில் தேரவாத பவுத்தர் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால் நான் கிறித்தவன். […]

Read more

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, பூம்புகார். ஒரு சமுதாயத்தின் உண்மையான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிய நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி, காதல், தொழில், நையாண்டி, வழிபாடு என பால கோணங்களை எளிதில் உணர்த்தும் தாய்மை குணம் கொண்டது நாட்டுப்புறப் பாடல். இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொன்னால், பழங்கால இலக்கியத்திற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் தாயாக அமைந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களின் மகுடம், அதன் எளிமையும், இனிமையும்தான். மனம் லயிக்கும் பல நாட்டுப்புறப் பாடல்கள் கொண்ட இந்த 648 பக்க […]

Read more
1 96 97 98 99 100 128