வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள், வெளி ரங்கராஜன், அடையாளம் வெளியீடு, திருச்சி, விலை 100ரூ. அசலானவர்களின் ஆவணங்கள் நாடகத்துக்காக நாடகவெளி என்ற இதழைத் தொடர்ந்து நடத்தியவர் வெளி ரங்கராஜன். தீராநதியில் தொடராக வந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். பேரா. இராமானுஜம் இயக்கிய வெறியாட்டம் நாடகத்தில் தன் அழுத்தமான நடிப்பாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காந்திமேரி. ஆண்களே கொடிகட்டிப் பறந்து நாடக உலகில், முழுக்கப் பெண்களே பங்கேற்ற ஒரு குழுவை அமைத்து, சமூகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கும்பகோணம் பாலாமணி. பாஸ்கரதாஸ் பாடல்களால் […]

Read more

தங்க விலை ரகசியம்

தங்க விலை ரகசியம், கே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 204, விலை 90ரூ. சின்னச் சின்ன விஷயங்கள். ஆனால் அதில் அடங்கும் பெரிசு. அதை நேரடியாகச் சொல்லாமல் ஹாஸ்யமாக, படித்தால் சிரிப்பு வரும் வகையில் எளிய தமிழில், ஆங்கிலம் அதிகம் கலந்தாலும் நெருடல் இல்லாமல் தங்க விலை ரகசியமாக தந்துள்ளார் ஆசிரியர். கணவன் மனைவி அல்லது நண்பர்கள் இருவர் உரையாடலில் எவ்வளவு செய்தியை உட்புகுத்தித் தந்துள்ளார். அதிரசம் சொல்லும் ருசியும், தங்கவிலை தரும் நாட்டு நடப்பும், ரியல் எஸ்டேட் தகிடுதத்தம், ஆபீஸ் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html ராமாயணத்தில் சட்டம் கம்பன் கழகத்தின் பிரபல பேச்சாளரும், நாளிதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவருமான நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன் கடந்த முப்பது ஆண்டகளாக நீதித்துறையில் முழுமூச்சாகச் செயல்பட்டு வருகிறார். ராமாயணம் என்னும் கதைக் களத்தின் வெளியில் நின்று விமர்சிக்காமல் உள்ளே நின்று, இடம் சுட்டிப் பொருள் விளக்க முயன்றுள்ளார் நூலாசிரியர். முதல் கேள்வி சட்டம் […]

Read more

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள்

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள், டாக்டர் ஜெ. ஜெயலட்சுமி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 975, விலை 750ரூ. இவ்வளவு பெரிய நூலா என்று மலைப்பு ஏற்பட்டாலும் புரட்டிப் பார்த்தவுடன் முழுவதையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. காரணம், பைசா செலவில்லாமல் நமது நோய்களை நாமே தீர்த்துக் கொள்ளும் எளிய மருத்துவ முறைகளை வரைபடம், புகைப்படம், செய்முளை என்று மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி, அக்குபங்சர், அக்குபிரஷர், யோகா, முத்திரைகள், நேச்சுபதி, ஆரிகுலோதெரபி, பிரானிக் ஹீலிங், ரெய்கி என்று […]

Read more

செம்மண் மடல்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்), இரா. மீனாட்சி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, பக். 452, விலை 300ரூ. ஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாஈடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ.நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், திருப்பூர், சென்னை, விலை 100ரூ. முதியோர் நல மருத்துவரான நூலாசிரியர் முதியோர்கள் தங்களை உணர்ந்து கொள்ளவும், தங்கள் வீட்டிலுள்ள முதியவர்களை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாகவே இதனை தொகுத்துள்ளார். அத்துடன் முதியோருக்கு தேவையான மனநல ஆலோசனைகள், முதிய பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி கடைபிக்க வேண்டிய உணவுப்பழக்கம், நோய்களைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை, ஏற்கனே வந்துவிட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், குறிப்பாக முதிய வயதில் பெண்களைத் தாக்கும் பிரத்யேகப் பிரச்சினைகள் என […]

Read more

முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 110ரூ. நூலாசிரியர் வெ. இறையன்பு, டில்லியில் தன் பயிற்சிக் காலத்தில் இந்தி மொழியின் எதேச்சதிகாரத்தையும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதையும் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக, குறைந்த எல்லையில் தேர்ச்சி பெற்றதை இந்திக்கார்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சாடுகிறார். உச்சத்தில் இருந்த சோழ சாம்ராஜ்யம் பின்னடைவு கண்ட காலத்தில், கம்பன் வாழ்ந்ததால், சோழநாட்டு இளைஞர்களின் இதயத்தில் மறுபடியும் போர்க்குணத்தைப் பாய்ச்ச, யுத்த காண்டத்தில் மட்டும் 4000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்துள்ளார் என்பதும், ‘முதலில் […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ. தாழ்த்தப்பட்ட மக்கள் கையேந்தவுமில்லை; அங்கீரம் கேட்கவுமில்லை. கன்னட எழுத்தாளர் டி.ஆர்.நாகாஜன் எழுதிய தீப்பற்றிய பாதங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் ராமானுஜம் என்பவரால் தமிழில் மொழிபெயர்த்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இரு மொழிகளைக் கடந்து, தமிழில் வந்தாலும், மண்ணின் மனம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்நூலுக்கு ஆசிஷ் நந்தி முன்னுரை எழுதியுள்ளது, கூடுதல் பலமாக உள்ளது. பூர்வ குடிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என, தனியான […]

Read more

இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச. லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக், 576, விலை 430ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-265-4.html ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப்போக்குடன் தன் ஆய்வுக் கருத்துக்களை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக்கூறும் நூலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவமாகவே காட்சியளிக்கிறான்‘ என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்றும் கூறும் […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. கடமையை மறந்த கொள்கையால் என்ன புண்ணியம்? தமிழ் பத்திரிகை உலகில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் புத்தகங்கள். தமிழில் வெகு குறைவாகவே வெளிவந்துள்ளன. அந்த புத்தகங்களும், 20 ஆண்டுகளுக்கு முன் வந்தவை. அந்த குறையை போக்கும் வகையில் வெளிவந்துள்ளது, இந்த நூல். கடந்த 25 ஆண்டுகளாக, பல்வேறு தமிழ் வார இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பணி புரிந்த, கருணாகரன் தமது அனுபவத்தை, 18 கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார். ஒரு […]

Read more
1 37 38 39 40 41 88