அறிவியல் போற்றுதம்

அறிவியல் போற்றுதம், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 268, விலை 100ரூ. தினமணி நாளிதழில் நூலாசிரியர் நெல்லை சு.முத்து எழுதி வெளியான அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் 27 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்ணில் செலுத்திய விண்கலன்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், வானிலை ஆய்வூர்திகள் என சகல விஷயங்களையும், அதற்கான காரண காரியங்களையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ஒருபுறம் சாதனைகளைப் பட்டியலிடும் நூலாசிரியர், மறுபுறம் அதனால் விளைந்த தீமைகளையும் விவரிக்கத் […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர். நாகராஜ், தமிழில்-ராமாநுஜம், சென்னை, விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-3.html டி.ஆர்.நாகராஜ் எனப்படும் தோட்டபள்ளப்பூர் ராமைய்யா நாகராஜ் என்ற இலக்கியக் கோட்பாட்டாளரை கன்னட எல்லை தாண்டி லேசாக அறியத் தொடங்கியபோது, அவர் தனது 44வது வயதில் இறந்தும் போனார். யு.ஆர்.அனந்த மூர்த்தியை துரோணாச்சாரியாராகவும் தன்னை அவருடைய சீடனாகவும் சொல்லிக்கொண்டவர். ஆதி சூத்திரர் என்றும் இடதுசாரி காந்தியவாதி என்றும் தன்னை அழைத்துக்கொண்டவர். அதற்காக அந்தக் கோட்பாட்டுக்குள் மட்டுமே தன்னை அடக்கிக்கொண்டவர் அல்ல. உனக்குத் தெரியுமா, மற்றொரு […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 310, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-182-5.html இந்நூலாசிரியரின் பிறமொழி கலப்பில்லாத தெள்ளு தமிழும், ஆற்றொழுக்கு நடையும், புதிய சிந்தனையும் வாசகனை வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. மகாபாரதம் எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்ட கதை. ஆனாலும் எந்த ஒரு கதாபாத்திரமும் குறைவற்ற நிறைவான உயர்வு நிலையைக் கொண்டவையாக அமைக்கப்படவில்லை. கடவுள் அவதாரமாகக் கூறப்படும் கிருஷ்ண பகவானின் பாத்திரத்திலுள்ள குறைகள் கூட துரியோதனால் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படுகிறது. இப்படி எல்லா […]

Read more

உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more

பயத்திலிருந்து விடுதலை

பயத்திலிருந்து விடுதலை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 120ரூ. தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி பயம் குறித்தும் அதனை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் பல இடங்களில் பேசியதிலிருந்தும், எழுதியதிலிருந்தும் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். நம் எல்லோருக்குமே பயம் உள்ளது. வேலை போய்விடுமோ என்ற பயம், பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், வெற்றி பெற மாட்டோமோ என்கிற பயம், நோய்கள் குறித்த பயம், மரணம் […]

Read more

உறங்கும் மனசாட்சி

உறங்கும் மனசாட்சி, ஆ. தமிழ்மணி, மந்திரச்சிமிழ் பதிப்பகம், சென்னை, பக். 246, விலை 140ரூ. தினமணி, ஜனசக்தி நாளிதழ்கள், புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகாலப் பிரச்னைகளைப் பற்றி இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் அலசி ஆராய்கின்றன. நீர்வளத்தை எப்படிப் பாதுகாப்பது? கிரிக்கெட் விளையாட்டு அணியைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவது சரியா? வியாபாரமயமான கல்விமுறையை மாற்றி அமைப்பது எப்படி? எனப் பல்வேறு சமகாலப் பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளை நூலாசிரியர் முன் வைக்கிறார். ஈராக் பிரச்னை […]

Read more

என் பயணம்

என் பயணம், அசோக மித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-343-1.html அசோகமித்திரனுக்கு அறிமுகம் தேவை இல்லை. செறிவான உள்ளடக்கத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகத் தனது படைப்பைக் காலங்கள் கடந்தும் உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அதைப்பற்றி அவர் அலட்டிக்கொள்வதில்லை என்பது மற்ற எழுத்தாளர்களில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டும். மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்துகொள்ளும் வகையில் புரிந்துகொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் […]

Read more

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 80ரூ. பள்ளியில் ஒரே பாடத்திட்டத்தைக் கற்றாலும் கற்றல் அனுபவம் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பள்ளி அனுபவங்கள் இருக்கின்றன. அதனாலேயே பள்ளிப்பருவம் குறித்த அனுபவப் பகிர்தல்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கின்றன. ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தங்களது பள்ளிப்பருவம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தநூல். இவர்களின் அனுபவம் அந்தக் காலத்தில் நிலவிய சமூக, […]

Read more

புதுவை வரலாற்றுச் சுவடுகள்

புதுவை வரலாற்றுச் சுவடுகள், நந்திவர்மன், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 170ரூ. புதுவையின் தொடர்ச்சியான வரலாறாக இல்லாமல், புதுவையில் தங்கியிருந்த அறிஞர்கள், புதுவையில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள், புதுவைக்கு வந்த கப்பல்கள் என்று புதுவையோடு தொடர்புடையவை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அலக லல்ல லாடக நி என்று தியாகராஜ கீர்த்தனையைப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழாக்கம் செய்தள்ளார். பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை செம்மறியாடும் நாயும் என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார் என்பன போன்ற […]

Read more

குரல்வளையில் இறங்கும் ஆறு

குரல்வளையில் இறங்கும் ஆறு, அய்யப்ப மாதவன் சாய் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 120, விலை 100ரூ. அய்யப்ப மாதவனின் சமீபத்திய தொகுப்பு குரவளையில் இறங்கும் ஆறு. கவிதைக்கான தனியான பிரயத்தனங்களை அய்யப்ப மாதவன் கொண்டிருக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் உறங்கிவிட்ட இரவில் ஒரு நாளை, அதுவரையிலான தன் வாழ்வை நினைத்து உறங்காமல் கிடந்து நினைவில் ஓட்டிப் பார்க்கிறார். எங்கோ செல்ல நினைத்து, கடைசியில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் ஒரு தற்காலிக மரணத்துக்குத் தயாராகிறார். இவ்வாறான தன் அனுபவங்களை எல்லாம் கவிதைக்குச் சொல்கிறார். எதிர்வினையாற்றாத கண்ணாடியில் […]

Read more
1 35 36 37 38 39 88