முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 159, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023754.html பத்திரிகைகள், வலைதளங்களில் தற்போதைய கல்விமுறை பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. விளையாடினால் தண்டிக்கும் பள்ளிகளையும், மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாணவர்களை உருவாக்கும் பள்ளிகளையும் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். (பக். 77). ‘மதிப்பெண்களைத் துரத்துவது எப்படி என, சொல்லித் தருகின்றனரே தவிர, மனிதர்களைப் படிக்க யாரும் சொல்லித் தருவதில்லை. நாளைய மன்னர்களாகிய மாணவர்கள், வாழ்க்கையைத் துவங்கும் […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், கவிஞர் பிரியசகி மற்றும் அருட்பணி, ஜோசப் பெஜயராஜ், அரும்பு பப்ளிகேஷன்ஸ் மற்றும் நிறைவகம், விலை 270ரூ. வகுப்பறையில் பாடம் பயிலும் மாணவர்களில் 5-ல் ஒருவருக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குறைபாட்டை கண்டறிந்து, அந்த குழந்தைகளை முன்னேற்றுவதில்தான் இன்றைய சமூகம் தவறிழைக்கிறது. அந்த வகையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை இனங்கண்டு, அவர்களை கையாள்வது எப்படி? அவர்களுக்கு கசப்பாய் தெரியும் கல்வியை, கற்கண்டு போல இனிமையாக்குவது எப்படி? என பாடம் நடத்துகிறது இந்த நூல். […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், அரும்பு பதிப்பகம் மற்றும் நிறைவகம், சென்னை. கற்றல் குறைபாடு பிரச்னைக்கு தீர்வு இந்த நூல் சராசரி மாணவர்களில், ஐந்தில் ஒருவருக்குக் காணப்படும் கற்றல் குறைபாட்டைப் பற்றிய முழுமையான முதல் தமிழ் நூல். அறிவியல் பூர்வமான உண்மைகளை உளவியல் ரீதியாக, எளிய பேச்சத் தமிழில், சாமானிய மக்களையும் எளிதில் சென்றடையும்படி கதை சொல்வதுபோல் விளக்கி உள்ளது. அறிவுத்திறனிலும், விளையாட்டு போன்ற பல்கலைத் திறனிலும் சராசரியாகவோ அல்லது அதற்கும் மேம்பட்டு காணப்படும் பல பிள்ளைகள், கல்வியில் மட்டும் பின்தங்கிடும்போது, […]

Read more

வெற்றி தரும் மேலாண்மை

வெற்றி தரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. ஒரு நிறுவனத்தில் இயக்குநராக மேலாளராக இருப்பவர்களுக்கு மேலாண்மைத் திறன் அவசியம் தேவை. இதனால் இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மேலாண்மை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப மேலாண்மை யுக்திகளை சரியாக இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். அந்த வகையில் மேலாண்மைத் துறை தொடர்பான நுட்பமான செய்திகளை நெல்லை கவிநேசன் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்வகையில் இந்த நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில் முனைவோருக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் […]

Read more

இந்தியா நமது இதயம்

இந்தியா நமது இதயம், கே.ஏ.எஸ். முகமது ரஃபி, எம். சாய்ரா வெளியீடு, பக். 84, விலை 30ரூ. உலக அமைதி, தேசிய ஒற்றுமை, இளைஞர் நலன், இவையே எண்ணமாய் மனிதன் வாழ வேண்டும் என்பதுதான். இந்தியா நமது இதயம் என்ற நூலின் அடிநாதம். தீவிரவாதம் என்ற வார்த்தையைக்கூட இனி நாம் வாசிக்கக்கூடாது என்கிற தேச நலன் கட்டுரைகளில் தெரிகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எல்லா இந்தியர்களும் கட்டுப்பாட்டனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேச நலன் கருதியே. தீண்டாமை ஒழிய சாதியின் மீதான […]

Read more

வேதகணிதம்

வேதகணிதம், (உலகின் அதிவேக மணக்கணக்கு முறை), அன்பழகன் தேவராஜ், தமிழ் அங்காடி, பக். 188, விலை 165ரூ. கணிதம் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பு இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அனால் கணிதத்தை முறையாகக் கற்றுக்கொண்டால் அதைவிட, சுலபமான பாடம் எதுவும் இருக்காது என்பதுதான் உண்மை. கோலம் முதல் கோயில் கோபுரம் வரை எல்லாவற்றிலும் கணிதம் நீக்கமற நிறைந்துள்ளதை அறிய முடியும். அனைத்துவித அறிவியல் துறை வளர்ச்சிக்கும், கோயில் வடிவமைப்புக்கும் கணிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய அவசர யுகத்தில் காகிதத்தையும், எழுதுகோலையும் கையாளுவது […]

Read more

தந்தை பெரியார் பிறந்தநாள் மலர்

தந்தை பெரியார் பிறந்தநாள் மலர், விடுதலை வெளியீடு, சென்னை, விலை 120ரூ. தந்தை பெரியாரின் 136வது பிறந்த நாளையொட்டி விடுதலை வெளியிட்டுள்ள மலர், கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது. மறைந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, கி. வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட பல தலைவர்கள், பிரமுகர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வண்ணப்படங்களும் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள், ஜெ. வீரநாதன், பாலாஜி கணிண […]

Read more

காலத்தை வென்ற கலாம்

காலத்தை வென்ற கலாம், செயின்ட் பிரிட்டோ கல்விக் குழுமம் வெளியீடு, சென்னை, விலை 70ரூ. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றி நிறைய புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை செயின்ட் பிரிட்டோ கல்விக்குழுமம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ் எழுதிய காலத்தை வென்ற கலாம் என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். கலாம், திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்தவர். அந்த முறையில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ். […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 175ரூ. ஆச்சாரியார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், சங்கீத மூர்த்திகள் போன்ற அருள் பெற்ற மகான்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக, பிரபந்தங்களாக, விருத்தங்களாக, கீர்த்தனைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் புகழ்பெற்ற ஆதி சங்கரர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் தொடங்கி புரந்தரதாஸர் அருணாசலக் கவிராயர், வள்ளலார், திருமூலர், தாயுமானவர், அவ்வையார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அதோடு அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் சொல்லி கோவை எஸ்.எஸ். பாரத்வாஜ் நம்மை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

தேர்விலும் வெல்வோம்

தேர்விலும் வெல்வோம், கவி முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 30ரூ. மாணவர்கள் வெற்றி என்ற இலக்குநோக்கி பயணம் செய்வது எப்படி என்று எளிய நடையில் பல உதாரணங்களுடன் சொல்லித்தரும் நூல். தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பதன் அவசியத்தைக் கூறி, நூற்றுக்கு நூறு எடுப்பதற்கான பத்து வழிகளையும் தருவது சிறப்பு. மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை பளிச்சென விளக்கி, மாணவர் சமூகத்தை வல்லமைப்படுத்த முனைந்துள்ளார் ஆசிரியர் கவி. முருகபாரதி. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இந்நூலைப் படித்தால் அவர்கள் […]

Read more
1 8 9 10 11 12 21