தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம், ஆங்கிலத்தில் எஸ். ஹுசைன் ஸைதி, தமிழில் கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. மும்பை மாபியா என்றதும் நினைவுக்கு வரும் பெயர் தாவூத் இப்ராகிம். ஆனால் அவனுக்கு முன்பே மும்பை பல தாதாக்களை உருவாக்கி இருக்கிறது. ஹாஜி மஸ்தான், வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார், கரீம் லாலா ஆகியோர் தாவூத் இப்ராகிமின் முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர் எஸ். ஹுசேன் ஸைதி ஆங்கிலத்தில் சுவையாக எழுதியுள்ளார். இதைத் தமிழில் கார்த்திகா குமாரி மொழிபெயர்த்துள்ளார். மும்பையில் தாதாயிசம் […]

Read more

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள்

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள், பத்மகவி குற்றாலதாசன், ஸ்ரீ கிருஷ்ணமணி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், பக். 140, விலை 75ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், ஆங்காங்கு சுட்டப்பட்டுள்ள கல்வியியல் சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து,இக்கால கல்வி செயல்பாடுகளோடு பொருத்திக்காட்டி, இந்த நூலை ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். காலத்திற்கு ஏற்ற முயற்சி, பாராட்டத்தக்கது. தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, மனமொழி மெய்களால் ஒழுக்கம் உடைய சான்றோரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் அமைதல் வேண்டும். அந்த நோக்கத்தையே, பதினெண் கீழ்க்கணக்கு […]

Read more

பொது அறிவுப் புதையல்

பொது அறிவுப் புதையல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 280ரூ. சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், வண்டுகள் முதற்கொண்டு, பறவைகள், விலங்குகள் ஆகியவை குறித்த அறிவியல் கருத்துகளைக் கூறும் நூல். மேலும் பல அறியப்படாத வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், கலை, இலக்கியம், சமூகவியல் தொடர்பான செய்திகளையும் இந்த நூலில் ஆசிரியர் உ. கருப்பணன் தொகுத்து வழங்கியுள்ளார். சாதாரணமாக அனைவரும் தெரிந்து வைத்துள்ள தகவல்களாக இல்லாமல், புதிய செய்திகளையும் அரிய தகவல்களையும் தந்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுக்ளில் பங்கேற்போருக்கும் பயனுள்ள நூல். […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 248, விலை 120ரூ. இன்றைய நவீன உலகம் கல்வியை, மிகப் பெரிய வியாபாரப் பொருளாக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் நூல். நான்காம் வகுப்பு மாணவனுக்கு டேப்லேட் கணினி, ப்ராஜெக்ட் செய்ய ரூ. 10 ஆயிரம் செலவு, மேஜை – நாற்காலியை உடைத்துவிடாமலிருக்க ரூ. 30 ஆயிரம் பிணையத்தொகை, அரசு கட்டணத்தை அலட்சியப்படுத்தி அதைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணம், தெருமுனை மட்டுமே வந்து செல்லும் பள்ளிப் பேருந்துக்கு ரூ.16 ஆயிரம் என […]

Read more

கம்பன் கவியமுதம்

கம்பன் கவியமுதம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலாமோகன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. கம்பன் காவியத்தை முழுமையாக கற்கும் பேறு எல்லாருக்கும் கிடைப்பது அரிது. அது படிக்க படிக்க விரிந்து கொண்டே இன்பம் சேர்க்கும் பாடற்கடல். அதில் நூலாசிரியர்கள் நீந்தி தாங்கள் பருகியதை, அதன் சுவையை இனிமை குன்றாது, நமக்கும் தரும் அரிய நூல் இது. தெய்வப் புலவர் கம்பருயை சொல்லழகையும் பொருளழகையும் நமக்கு விளக்கும் இடம் சவை. கம்பர் தரும் செஞ்சொற் கவியின்பத்தையும், நடைச்சித்திரத்தையும் இவர்கள் தரும் எடுத்துக்காட்டுடன் படிக்கப் படிக்க […]

Read more

இந்தியக் கல்வி வரலாறு

இந்தியக் கல்வி வரலாறு, எஸ். சுப்பிரமணியன், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 35ரூ. கல்வியின் வரலாறு சிந்து சமவெளி காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரைக்குமான காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி என்பது என்னமாதிரியான மாற்றங்களுக்கு ஆட்பட்டுவந்துள்ளது என்பதைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்கும் நூல். வேத காலக் கல்வி, புத்த, சமணத் துறவிகள் பரப்பிய பள்ளிக் கல்வி, நமது முன்னோர்கள் பயின்ற திண்ணைப் பள்ளிகள் என ஒரு நீண்ட காலகட்டத்தின் முக்கியமான சம்பவங்களை நமக்கு முன்னால் வைக்கிறார். இன்றைய கல்வி முறையின் பிரச்சினைகளையும் அவற்றுக்கான […]

Read more

எழில் மரம்

எழில் மரம், ஜேம்ஸ் டூலி, தமிழில் லியோ ஜோசப், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 414, விலை 360ரூ. இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் கல்வி தனியார்மயமாகி வரும் வேளையில் அதை நியாயப்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் நூல். உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட நூலாசிரியர், ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கல்வியைக் கற்றுத் தருகின்றன என்கிறார். ஏழை மக்கள் தங்களுடைய முன்னேற்றத்துக்கு அரசாங்கத்தைச் சாந்திராமல், சுய உதவியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சுய உதவிப் […]

Read more

ஆசிரியர்களே அச்சாணிகள்

ஆசிரியர்களே அச்சாணிகள், தொகுப்பாசிரியர் சுவாமி வி. மூர்த்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 216, விலை 75ரூ. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர்கள் மாணவர்கள். அந்த மாணவர்களை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக எளிமையாகக் கூறும் நூல். உண்மையான கல்வி எது? என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. கல்வி – சமூகம் – ஆசிரியர் – மாணவர் தொடர்பான 36 கட்டுரைகளை பல்துறை அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். பிள்ளைகளை எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம், ஆனால் தண்டிக்கவே கூடாது. […]

Read more

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

டாப் 200 வரலாற்று மனிதர்கள், பூ. கொ. சரவணன், விகடன் பிரசுரம், பக். 616, விலை 240ரூ. இந்த நாடு, இந்த மொழி, இந்த பிரதேசம், இந்த காலம் என்ற வரையறையை வைத்துக் கொள்ளவில்லை சரவணன். விவரமாக சொல்வதை விட, விறுவிறுப்பாக சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், வங்கத்தைச் சேர்ந்தவர். வேதங்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றிலிருந்து, விதவை மறுமணத்துக்கு ஆதரவான கருத்துகளைத் திரட்டி புத்தகமாக வெளியிட்டவர். அவர், இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ‘கேர்’ என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கப்போனார். பூட்ஸ் அணிந்த […]

Read more

பொது அறிவுக் களஞ்சியம்

பொது அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 190ரூ. பல்வேறு தகவல்களை, சிறிய துணுக்குகள் வடிவத்தில் கூறும் நூல். பல புத்தகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களை, இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார் பேராசிரியர் கே. சுகுமாரன். மாணவ – மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   சமூக நீதி காத்த தலைவர்கள், ஏ.கே.எஸ். புக்ஸ வேர்ல்டு, சென்னை, விலை 120ரூ. பகுத்தறிவு பகலவன் பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 3 […]

Read more
1 9 10 11 12 13 21