கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ், நிலா காமிக்ஸ், வி 145ரூ. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அந்த வரலாற்றுப் புதினத்தை, அழகழகான படங்கள், சுவாரஸ்யமான டயலாக்குகளுடன் படக்கதையாகத் தரும் வித்தியாசமான முயற்சி. மாதம் இருமுறை என அத்தியாயங்களின் தொடர் வெளியீடாக வருமாம். காமிக்ஸ் பிரியர்களைக் கண்டிப்பாகக் கவரும். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், டி.எஸ்.புத்தக மாளிகை, பக். 236, விலை120ரூ. அவ்வையார் படைத்த, 109 வரிகளைக் கொண்ட ஆத்திசூடி, 91 வரிகளை கொண்ட கொன்றைவேந்தன், 30 வெண்பாக்களைக் கொண்ட மூதுரை, 40 வெண்பாக்களை கொண்ட நல்வழி. உலகநாதர் எழுதிய, 13 பாடல்களை கொண்ட உலகநீதி, அதிவீரராம பாண்டியன், ஒரு வரி, இரு வரி, மூன்று வரி பாடல்கள் என பாடிய, 82 பாடல்கள், சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய, 40 வெண்பாக்களைக் கொண்ட, ‘நன்னெறி’ ஆகிய அறநுால்களின் பாடல்களைத் தொகுத்து, அதற்கு கருத்தும், விளக்கமும் […]

Read more

பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள்

பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள், இராஜகோபாலன், மணிமேகலைப் பிரசுரம், பக். 256, விலை 135ரூ. பிரபல தனியார் கம்பெனிகளில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியரின் பொழுதுபோக்கு, புத்தகம் படிப்பதும், சேகரிப்பதும்தான். பல நூல்களைப் படித்து அறிய வேண்டிய கதை வடிவிலான பல்வேறு செய்திகளை இந்த ஒரு நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூலில் உள்ள எந்தவொரு குட்டிக்கதையும் இவரது கற்பனையில் உதித்ததல்ல. எல்லாமே உலக அளவில் தோன்றிய பல மகான்கள், மேதைகள், பெரியோர்கள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், சூஃபிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள், […]

Read more

கிள்ளை மொழி

கிள்ளை மொழி, கவிஞர் பெ. பெரியார் மன்னன், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 95ரூ. கவிஞர் பெ. பெரியார் மன்னன் எழுதிய 79 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. அணில், கரும்பு, முயல் போன்ற தலைப்புகளில் குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. “எங்க வீட்டு மீன் தொட்டி வந்து பாருங்கோ! கண்ணாடிப் பெட்டிக்குள்ளே கடலைப்பருங்கோ!” “ஒற்றுமையாய் வாழ்வதுவே ஒருமைப்பாடு! உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்திடும் நாடு!” என்பன போன்ற இனிய பாடல்கள். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. உருளும் காலம் உறையும் அற்புதங்களைச் செய்பவை புத்தகங்கள். சித்திரங்கள் படிக்கிற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம். ஏராளமான சேனல்களும், கணினிகளும் திரிக்கும் ஒளிக்கயிறுகளால் தாவிக் குதிக்கும் குழந்தைகள் சீக்கிரமே தங்களுக்கான தேவ உலகத்தை இழந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை. சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்க, படிக்கத் தக்கதாக கல்கியின் ‘பொன்னியின் […]

Read more

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும்

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும், அரிமா கே. மூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. மேடைப் பேச்சாளர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும்போது, இடையிடையே குட்டிக் கதைகள் சொன்னால்தான் கூட்டம் கலையாமல் இருக்கும். அத்தகைய குட்டிக்கதைகளுடன், சுவையான துணுக்குச் செய்திகளும் இதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள குட்டிக்கதைகளும், துணுக்குகளும் மொத்தம் 339. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விஷயங்கள். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

பிணத்தோடு ஒரு பயணம்

பிணத்தோடு ஒரு பயணம், லயன் காமிக்ஸ், விலை 200ரூ. சித்திரக்கதை வரிசையில் மற்றும் ஒரு புது வரவு. பிணத்தைப் புதைப்பதை தொழிலாகச் செய்பவனுக்கும் பணத்துக்காக பிணத்தையும் சுமந்து செல்லச் சொல்லும் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தம், வழியில் நடக்கும் போராட்டம், முடிவில் சற்றும் எதிர்பாராத திருப்பம். சுவாரசியமாகப் படிக்கும்போது காது பக்கத்தில் தோட்டாக்கள் உரசிச் செல்வதுபோல் உணர முடிகிறது. காமிக்ஸ் பிரியர்கள் கொண்டாட இன்னும் ஒரு பொக்கிஷம். நன்றி: குமுதம், 12/7/2017.

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, (ரஷ்ய சிறார் கதைகள்), யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 352, விலை 290ரூ. குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆசையா? குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், […]

Read more

தலையில்லாப் போராளி

தலையில்லாப் போராளி, பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஸ்லீப்பி ஹாலோ’ என்ற ஆங்கிலப் படத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட திரில்லர் படக் கதை. சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு போராளி தலையில்லா உடலாக குதிரை மீது அமர்ந்து வந்து கதிகலக்குவது போல உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் படக்கதைக்கு உயிரோட்டமான ஓவியம் மிகவும் உதவுகிறது. லயன் காமிக்ஸ் புத்தகத்துக்கே உரிய அத்தனை அம்சங்களையும் இதில் காண முடிகிறது. நன்றி:தினத்தந்தி, 20/4/2016.   —- அகந்தையின் அழிவும் அறிவின் உதயமும், சிதம்பர குற்றாலம், மணிமேகலைப் பிரசுரம், […]

Read more
1 2 3