நீண்ட காத்திருப்பு

நீண்ட காத்திருப்பு, கொமடோர் அஜித் போயகொட, சுனிலா கலப்பதி, தமிழில்: தேவா, வடலி வெளியீடு, விலை: ரூ.220. வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் என்ற ஒன்று இல்லை; ஆனால், ஒரு அர்த்தத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியுமானால், அது தரும் அலுப்பையும் விரக்தியையும் நொறுக்க முடியும். கவிஞன் சார்லஸ் பூக்கோவ்ஸ்கி சொல்வதுபோல மரணத்தை ஒத்திப்போட நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால், அன்றாடத்தில் உணரும் சவத்தன்மையை நம்மால் நிச்சயம் அகற்ற முடியும். கலை, அறம், உண்மை, நேசம் போன்ற ஏதோவொன்று அர்த்தத்தையும் நம்பிக்கையையும் தருவதாக உள்ளது. இலங்கையின் கடற்படையில் […]

Read more

அஞ்சலை அம்மாள்

அஞ்சலை அம்மாள், ராஜா வாசுதேவன், தழல் வெளியீடு, விலை: ரூ.250. அஞ்சலை அம்மாளுக்கு நம் தமிழக வரலாற்றில் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன. தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறைவாசம் ஏற்றவர். வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடியும், பெற்றெடுத்த பிள்ளையோடும் சிறையில் இருந்த அனுபவங்கள் இவருக்கு உண்டு. காந்தி, ராஜாஜி, பெரியார், ஓமந்தூர் ராமசாமி, காமராஜர் என முக்கியமான தலைவர்களோடு அரசியல் ஆலோசனை நடத்தியவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இப்படி அஞ்சலை அம்மாளைப் […]

Read more

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை,  ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர்,  பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம், அருட்செல்வர் நா. மகாலிங்கம் , பக்.724, விலை ரூ.600. விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் முன்னோர்கள் குறித்தும் […]

Read more

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் – பாகம்-1

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் – பாகம்-1;  பெ.சிவசுப்ரமணியம்; சிவா மீடியா,  பக். 380; விலை ரூ.400; பத்திரிகையாளரான நூலாசிரியர், வீரப்பனோடு சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்பில் இருந்திருக்கிறார். அதன் அடிப்படையில், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க ஆதாரங்கள், புகைப்படங்களோடு இந்நூலில் விவரிக்கிறார். வீரப்பனை மையமாகக் கொண்ட ஒவ்வொரு நிகழ்விலும் தற்போது உயிருடன் இருக்கும் வீரப்பனுடைய அன்றையக் கூட்டாளிகள், தமிழக – கர்நாடக வனத் துறையினர், காவல் துறையினர், அதிரடிப் படையினர், பழங்குடிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் பேட்டிகளையும் இணைத்திருப்பது இந்நூலுக்கு வலு சேர்க்கிறது. வீரப்பனின் இளமைப் […]

Read more

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. கொரோனா தாக்கியதால் மரணம் அடைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம் தொடர்பான பல துறைகளிலும் அவர் ஆற்றிய சாதனைகள் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரைப்படத் துறையில் எவ்வாறு நுழைந்தார் என்பதும் அவரது நேரம் தவறாமை, எளிமை, நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பாகப் பழகும் தன்மை போன்ற அவரது குணாதிசயங்கள், பல்வேறு சம்பவங்ளை சுட்டிக்காட்டி அழகாகப் படம்பிடித்து தரப்பட்டுள்ளன. […]

Read more

தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள் ; ஆசிரியர் : சா. கந்தசாமி, வெளியீடு: சாகித்ய அகடமி, விலை ரூ. 290/- தமிழில் வெளிவந்த, 12 அறிஞர்களின் சுயசரிதங்களை ஆராய்ந்து அழகுடன் தொகுத்துள்ள நுால். காவியம், புராணம் எல்லாம் கனவில் மிதக்க வைக்கும். கதைகளில், இனிப்பான உண்மை இருக்கும்; சுயசரிதங்களில், கசக்கும் உண்மை இருக்கும். அவற்றை படிப்பதால், வெற்றி, தோல்வி கடந்த அனுபவமே மனதில் தங்கும். ஜெர்மனியில் கொடுங்கோலன் ஹிட்லர், மகள் ஆனிபிராங்குக்கு ஒரு டயரி பரிசளித்தார். அது, அவரது சுயசரிதை. டச்சு மொழியில் வெளிவந்து, பல கசக்கும் […]

Read more

நிலமடந்தைக்கு

நிலமடந்தைக்கு, நரோலா, தடாகம் வெளியீடு, விலை: ரூ.100. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை நிலவுரிமை பெறுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தம்பதியர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இளமைக் காலம் தொடங்கி இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் வரை என அவர்களுடைய எழுபதாண்டு கால சமூக வாழ்க்கையைச் சுருக்கமாக அறிந்துகொள்வதற்கான புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து, 01.02.2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்

திருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்,  செந்தமிழருவி, சிவாணி பதிப்பகம், விலை ரூ.150. சங்க காலத் தமிழர்கள் வழிபட்ட தெய்வங்களுள் முதன்மையானவர் முருகப்பெருமான். குறிஞ்சி நிலத் தலைவன் குமரவேள் என்கின்றன, சங்க நுால்கள். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையே முருகன் மீது பாடப்பட்ட முதல் பாமாலை எனலாம். கந்த கடவுளை சொந்த கடவுளாய் வைத்து வழிபடுவது, ‘கவுமாரம்’ என்ற சமயம் ஆகும். திருவேலிறைவனை தித்திக்கும் தேனாய் திருப்புகழ் அருளிய அருணகிரியார். அவர் பாடிய திருப்புகழ் பதினாறாயிரம் எனக் கருதப்படுகிறது. ஆனால், கால வெள்ளம் அடித்துச் சென்றது போக மீதமுள்ள, […]

Read more

சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்,வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதரஸ், விலை 360ரூ. பிரபலமான ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்பதை பாட நூல் போல அல்லாமல், சுவாரசியமான நிகழ்வுகளைக் கோர்த்து, அவற்றை படிப்பதற்கு சுவை தரும் வகையில் அமைக்க முடியும் என்பதை இந்த நூல் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் வாழ்வின் சுவடுகளை இந்த நூலில் ஆசிரியர் அழகாக படம் பிடித்துக்கொடுத்து இருக்கிறார். செய்தித்தாள் வினியோகப் பணியில் இருந்தபோது, சிறுவனான தனக்கு ‘தினத்தந்தி’ வினியோகம் செய்தமைக்கு 1954-ம் ஆண்டு தீபாவளியன்று காமராஜர் ஒரு ரூபாய் பரிசு வழங்கியதையும் […]

Read more

மகாத்மா 150

மகாத்மா 150, உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், பக். 276, விலை 250ரூ. காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக வழங்கியுள்ளார். எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நுாலை படிக்கையில், தேசப்பிதாவின் வரலாறு மற்றும் வாழ்க்கையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 42