உறங்கும் மனசாட்சி

உறங்கும் மனசாட்சி, ஆ. தமிழ்மணி, மந்திரச்சிமிழ் பதிப்பகம், சென்னை, பக். 246, விலை 140ரூ. தினமணி, ஜனசக்தி நாளிதழ்கள், புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகாலப் பிரச்னைகளைப் பற்றி இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் அலசி ஆராய்கின்றன. நீர்வளத்தை எப்படிப் பாதுகாப்பது? கிரிக்கெட் விளையாட்டு அணியைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவது சரியா? வியாபாரமயமான கல்விமுறையை மாற்றி அமைப்பது எப்படி? எனப் பல்வேறு சமகாலப் பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளை நூலாசிரியர் முன் வைக்கிறார். ஈராக் பிரச்னை […]

Read more

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம், குமுதம் பு(து)த்தகம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-361-2.html நோய் வருவதற்கு முன், அந்நோயை வரவிடாமல் தடுப்பது எப்படி என்பதை விளக்கும் நூல். தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், கெட்ட பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை, அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படுதல், தேவையற்ற உடல் பருமன் இவையே நோய்களுக்கான மூலமுதற்காரணம் என்பதை விளக்கியுள்ளார் டாக்டர் போத்தி. டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட குழந்தைகளுக்கான நோய்கள், மாரடைப்பு போன்ற […]

Read more

அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா, தொகுப்பாசிரியர் நா. சிபிச்சக்கரவர்த்தி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 160, விலை 100ரூ. அஞ்சாத சிங்கம் சூர்யா என்ற பெயரில் வெளியாகியிருக்கும் சூர்யாவின் திரைப்பட டைரி ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த சூர்யாவின் பேட்டிகள், அவரைப் பற்றிய செய்திக் கட்டுரைகள் மற்றும் அவர் நடித்த படங்களின் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாகும். சூர்யாவின் முதல் படத்திலிருந்து சமீபத்திய அஞ்சான் வரை அவரது திரையுலக வாழ்க்கை விவரிக்கும் இந்த நூலுக்கு சூர்யாவின் திரைப்பட டைரி 2014 என்று துணைத் தலைப்பு கொடுத்திருப்பது […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி, பக். 392, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-3.html லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் சுயசரிதை நூல் இது. தமிழக நடிகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களால் எழுதப்பட்டவை அல்லது மற்றவர்கள் எழுதியவை. எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதை மட்டும்தான், அவராலேயே எழுதப்பட்டு வெளியாகி உள்ளது. தமிழக திரையுலகை ஆட்சி செய்தவர்களில் பெரும்பான்மையோர், தென் தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்களில் சேடப்பட்டியை சேர்ந்த ராஜந்திரன் முதன்மையானவர். கடந்த கால மற்றும் நிகழ்கால தமிழகத்தின் பிரபலங்களின் வாழ்வின் […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html தலைமுறைகளைக் கடந்தும் ஜெயித்த திரையுலக ஜாம்பவான் வாலி பற்றிய 100 சுவையான செய்திகளின் தொகுப்பு. இவை செய்திகளல்ல. ஒவ்வொன்றும் ஒரு பதிவு. அடுத்த தலைமுறையினருக்கு வாலி பற்றிய ஒரு பாடம். வாலியின் துணிவு, நன்றி உணர்வு, நட்பு, நகைச்சுவை, எளிமை, ஈகோ இல்லாத மனம், யாருக்கும் தலைவணங்கா மாண்பு, தீராத தேடல், அவரது பட்டறிவு என்ற வாலியைச் சுற்றி […]

Read more

கவிஞர் வாணிதாசனின் புலமை

கவிஞர் வாணிதாசனின் புலமை, தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் மாவட்டம், விலை 500ரூ. திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சார்பில் கவிதைத் தமிழ் 12வது ஆய்வு மாநாடும், கவிஞர் வாணிதாசனின் நூற்றாண்டு விழாவும் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டு கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்து, கவிஞர் வாணிதாசன் புலமையும் தமிழ் கவிஞர்களின் தனித்தன்மையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் கவிஞர் வாணிதாசனின் கவிதை நயம் பற்றி பல்வேறு தலைப்புளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவிஞர்கள் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், பக். 102, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html வாலியின் அறியப்படாத முகம் திரைப்பட பாடல்களை, வெறும் பாடல் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தமிழ் திரைப்பாடலின் மொழி, ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியும் அரிய பொக்கிஷமாகவே பார்க்க வேண்டும். தமிழ் திரைப்பாடல் வரலாற்றில், கவிஞர் வாலிக்கென தனித்த இடம் உண்டு. மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கும் திரைப்பாடல் எழுதியதால், அவரின் தமிழ் தலைமுறை கடந்தும் பாராட்டப்படுகிறது. […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி, பி.ஆர்.துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இந்நூலாசிரியர் மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், வானொலி நாடகம், டி.வி. தொடர், வசனப் பயிற்சியாளர், தயாரிப்பு நிர்வாகி, ஒருங்கிணைப்பாளர் என்று தனது 55 ஆண்டு கால கலையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர். அந்த அனுபவங்களைத்தான் இந்நூலில் சுவையாகவும், யதார்த்தமாகவும் கூறியுள்ளார். இது சுயவரலாறாக இருந்தாலும், தன்னோடு சம்பந்தப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களைப் பற்றிய நிகழ்ச்சிகள், அவர்களின் பண்புகள், செயல்பாடுகள், அன்றைய சூழ்நிலைகள் போன்றவையும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, […]

Read more

மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது மோதாமல் கடைசி வினாடியில் தவிர்த்த அதிர்ச்சி […]

Read more

மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது மோதாமல் கடைசி வினாடியில் தவிர்த்த அதிர்ச்சி […]

Read more
1 19 20 21 22 23 30